1.அறுசுவையின்
முதிர்வு உணரும் நிலை ஏழு...
2.வண்ணத்தில்
ஏழும்... இப்பூமியின் சுழற்சியில் இப்பூமிக்கு ஏழு நாட்களின் வாரத் தொடர்பும்...
3.“சப்தரிஷிகளின்
ஏழு நிலையின் உண்மைத் தத்துவ நிலையும் தான்...!”
4.இப்பூமியின்
உண்மை நிலை.
ஐம்புலனைப்
பகுத்தறியக் கூடிய நிலை கொண்டது தான் “ஆறறிவு பெற்ற மனித நிலை...” மிருகங்கள் ஐந்து
நிலையைப் பெற்றிருந்தாலும் இயற்கையின் தொடர்புடன் புல்லையும் பூண்டையும் நீரையும் இயற்கையுடன்
ஒட்டித்தான் அதனுடைய ஜீவ வாழ்க்கை வளருகின்றது... வாழுகின்றது.
உண்ணவும் உடுக்கவும்
இருக்கவும்... தன் ஆறாம் அறிவை மனித ஞானம் பயன்படுத்திக் கொண்டது.
ஏழாம் நிலையான
உயர் ஞானத்தால் இச்சரீர உணர்வின் அறுகுணத்தின் அறியும் நிலை கொண்டு அடையும் நிலையை
மாற்றி... ஞானத்தால் உணரும் மெய் ஞானம் கொள்ளும்... “ஏழான நிலையை” மனிதன் பெற வேண்டும்.
அதைப் பெறச்
செய்வதற்குத்தான்... இப்பூமியின் சுழற்சியின் மூல அமில ஒலியின் சப்தரிஷி ஒளி செயலினால்...
ஏழு தன்மையின் வளர்ப்பின் செயல் சக்தி ரிஷித் தொடர்பினால்... இப்பூமியில் வளரக் கூடிய
மூலத்தின் கருவின் வித்தில் வளர்ந்த பலன்கள் தான் அறு குணம் பெற்ற நிலை.
இந்தப் பூமியின் முதிர்வு நிலை மனித நிலை ஆறறிவு
நிலை...!
1.அதற்கு அடுத்த
நிலை மெய் ஞான நிலை
2.மெய் ஞானம்
பெற்ற மனித நிலையும் இந்தப் பூமியின் சுழற்சியில் முதிர்வு நிலை
3.இவ் ஏழைக்
கடக்கும் மெய் ஞானி தன் சித்தத்தை உணர்ந்த சித்தனாகி விட்டால்
4.அது எட்டாம்
நிலையான அஷ்டமா சித்து நிலையை அடையும் நிலை.
இயற்கையின்
மெய் உணர்ந்து மெய் ஞானத்தால் ஒளி பெற்று தன் சித்தத்தின் வலுவாகும் சித்து நிலையே
ரிஷியாகும் வழி நிலை.
இப்பூமியின்
உணர்வுடன் இப்பூமியின் சுழற்சியில் எடுக்கக்கூடிய ஒலி அலைகள் யாவையும்... தன் ஒளியாய்
எடுத்து இவ்வாத்மாவின் ஒளி ஒளிரக் கூடிய தன்மை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அந்தத் தகுதி
உண்டு.
வளர்ச்சியின்
தொடர் வளர... மனித உணர்வில் தன் சரீர உணர்வால் மனிதன் பெறக்கூடிய கண்டு... கேட்டு...
நுகர்ந்து... சுவைத்து... உணரும்.. இந்த ஐந்து நிலையும் அடையும் நிலை மனிதனுக்கே உண்டு.
இந்த ஐந்து
நிலையில் இனிமை நிலை கூட்டுவது... மனித நிலையில் இரு நிலையான ஒவ்வொரு இயற்கை நிலையிலும்
தன்னுடன் மோதக்கூடிய
1.ஜீவ நிலையான
பெண்மை நிலை... வளர்ச்சி நிலை...
2.அறுநிலை கொண்ட
முதிர்வு நிலை... சிவசக்தி நிலை...
3.பெண் சக்தியின்
வளர்ச்சியின் தொடர் கொண்டு வளரக்கூடிய நிலைக்குத்தான்
சப்தரிஷியின்
சக்தித் தொடர்பை உணர்ந்த ரிஷிகள்... சக்தியைப் பெண்ணாகக் காட்டினார்கள்.
மனித உணர்வில்
அடையக் கூடிய இவ் அறு நிலைக்கும் முதிர்வு நிலையான... மெய் ஞானத்தை உணரும் ஜீவ நிலையை
ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும்.
ஏழான ஜீவ நிலையுடன்
எட்டாகும். சித்தனால் ஒவ்வொரு கோள்களாய் உருவாகும் தன்மை எடுக்கும் இவ்வுணர்வின் எண்ணம்
கொண்டு தான் உயர முடியும்.
பிற ஒலி அலைகளை
இச்சரீர உணர்வுடன் எடுக்கும் சித்து என்பது..
1.இப்பூமியின்
சுழற்சியுடனே...
2.இவ்வுடலை
விட்டு ஆத்மா பிரிந்தவுடன் (ஆவிகள்)
3.எந்தெந்த
ஒலியெல்லாம் எடுத்து இச்சரீரத்தைச் சித்தாக்கி வளர்த்துக் கொள்கின்றோமோ
4.அதன் ஈர்ப்புப்
பிடிப்பினால் ஆத்மாவைச் சிதற அடிக்கும் நிலைதான் சித்து விளையாட்டு நிலை. (இதிலே நாம்
சிக்கக் கூடாது)
மனிதன் எத்தாய்
தந்தை தந்த இஜ்ஜீவ உடலை பெற்றானோ அதைப் போன்றே தாய் தந்தையென்ற ஆத்மாவில் மனித ஜீவனை
மனிதன் பெற்ற தொடரைப் போன்று இரண்டு ஆத்மாவின் ஒரு நிலையான எண்ணத்தின் ஒற்றுமையால்
1.உணர்வின்
இன்பம் (உடலின் இன்பமல்ல) உணர்வின் இனிமையை... ஆத்மாவின் இனிமையாய்...
2.ஆத்மாவின்
ஜீவ இனிமை நிலையை மனித உணர்வுடன் உள்ள பொழுதே
3.குணத்தின்
அன்பால் உணரக்கூடிய சம குணமுடன்
4.விண்ணிலிருந்து
வரும் மின் காந்த ஒலியை இருபாலரும் எடுத்து ஒளியாக மாற்றிட வேண்டும்.
ஆகவே இச்சரீர
வாழ்க்கையில்... மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம் தான் இது..!
இரு குணத்தை ஒரு குணமாக்கி அன்பென்னும் ஆலயத்தைச் சிவசக்தியாக்கச் செய்யும் ஒவ்வொருவரையும்.