ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 9, 2020

எதை அதிகமாக நேசிக்கின்றோமோ அதுவே நமக்குள் அதிபதியாகி அந்தக் கணக்கின் பிரகாரம் “நம் வாழ்க்கையின் எல்லை” அமைகிறது


இன்று நம்முடைய சகஜ வாழ்க்கையில் பல பல உணர்வுகளை நுகர்கின்றோம்.
1.அதனதன் உணர்வுக்கொப்ப நமக்குள் அணுவாக விளைகின்றது.
2.அது உணவுக்காகத் தேடுகின்றது.
3.அந்த உணர்ச்சிகள் உந்தும் பொழுது அதன் வழி நம் செயலாக்கங்கள் மாறுகின்றது.

நாம் “எதை அதிகமாக நேசித்து…” அந்த உணர்வுகளை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோமோ அதை வளர்ப்பதற்கே நம் எண்ணங்கள் செல்கிறது.

உதாரணமாக ஒரு கொலைகாரன் அடுத்தவரைக் கொன்றிடும் செயலுக்கே வருகின்றான். அந்த உணர்வு கொண்டு அவன் மகிழ்ச்சி அடைகின்றான். கொலையுண்ட உணர்வுகள் தான் இவனுக்குள் அதிகமாக வந்து சேர்கின்றது.

ஆனால் இந்த உணர்வுகள் அவனுக்குள் அதிகமான பின் இவனுடைய உடலில் என்ன நடக்கின்றது…?

மூஷிகவாகனா…! (சுவாசித்ததே வாகனமாக வருகிறது) என்ற நிலையில் அவன் வாழ்க்கை நடக்கின்றது. அதாவது கொலை செய்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகும் பொழுது
1.இந்த உணர்வுகள் உடலுக்குள் அதிபதியாகி அதனால் அவன் வீழ்ச்சி அடைகின்றான்.
2.எதை இவன் கொன்று குவித்தானோ இதைப் போல் அவன் வாழ்க்கை செல்கின்றது.

நந்தீஸ்வரன்…! தான் சுவாசித்த உணர்வுகள் முதலிலே…
1.சுவாசித்த உணர்வின் இயக்கமாக வருகின்றது.
2.பின் இதனின் உணர்வு எது எதிகமாகக் கணக்குகள் சேருகின்றதோ
3.அந்தக் கணக்கின் பிரகாரம் அடுத்த சரீரம் எப்படி ஏற்படுகின்றது...? என்று
4.இதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு உருவத்தை அமைத்து
5.அருவ உணர்வுகளை நுகரச் செய்து அந்த உணர்வின் இயக்கமாக வாழ்ந்து
6.உண்மையை உணர்ந்து… பகைமை உணர்வுகளை அகற்றி…
7.உன் வாழ்க்கையில் எப்படி நீ வாழ வேண்டும்…? என்ற இந்தத் தத்துவத்தைத் தெளிவாகக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் ஆதியிலே முழுமையாகக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்…! அவனே விநாயக தத்துவத்தையும் கொடுத்தவன்.

மனிதனாக ஆன பின் அகஸ்தியன் தனக்குள் அதை எல்லாம் கண்டு கொண்ட பின் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் அவன் வாழ்க்கையில் சேர்த்துச் சேர்த்துச சேர்த்து அதன் வலிமை கொண்டு இந்தப் பூமியிலும் சரி விண்ணை நோக்கி இவன் உற்றுப் பார்த்து உலக அறிவை எல்லாம் அவன் தெரிந்து கொண்டான்

எல்லாவற்றையும் தெரிந்து கொண்டாலும் இன்று அவன் உடலுடன் இருக்கின்றானா…?

இல்லை..!

ஆனால் அந்த உணர்வின் தன்மைகளைத் தன் உயிருடன் ஒன்றி ஒளியின் தனமையாக மாற்றிக் கொண்டான். ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான். இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.

அகண்ட அண்டத்தின் நிலைகளிலிருந்து நம் பிரபஞ்சம் சூரியக் குடும்பம் கவர்ந்தது. இதற்குள் விளைந்தது. இதை அனைத்தையும் வென்றிடும் சக்தி பெற்றவன் அகஸ்தியன்..

விஷத்தின் ஆற்றலை வீழ்த்தி.. உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற…
1.அந்த அகஸ்தியனில் விளைந்த உணர்வுகள் இங்கே உண்டு.
2.அதை நுகர்ந்து நமக்குள் பெருக்கிக் கொண்டால் அவன் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று
3.அவனைப் போன்று அழியாத நிலையை நாமும் பெறலாம்.