ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 3, 2020

அகோரியின் சாபத்திலிருந்து ஒரு குடும்பத்தை மீட்ட நிகழ்ச்சி


ஒவ்வொரு மனிதனும் அவனுடைய வாழ்நாளில் எத்தனை எத்தனை சிரமப்படுகின்றான் என்பதை அனுபவபூர்வமாக அறியச் செய்வதற்காக என்னை (ஞானகுரு) ஊர் ஊராகச் சுற்றச் சொல்லியிருந்தார் ஈஸ்வரபட்டர்.

ரோட்டில் நடந்து செல்லப்படும் பொழுது வீட்டில் சில பேர் மிகவும் அவஸ்தைப்பட்டுச் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தந்த வீட்டில் நடப்பதைப் பற்றித் தெரிந்து கொள்வேன். அங்கே அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருப்பேன்.

ஒரு குடும்பத்தில் பார்த்தால்… ஒருவருக்கொருவர் நல்லவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் ஒருவர் வந்து பல தீமைகளைச் செய்து அவர்களுக்கு எத்தனையோ தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இருந்தாலும் ஒவ்வொரு நேரத்திலேயும் ஆண்டவனை வணங்கி… கடவுளை வணங்கி… ஆண்டவனுக்கு அபிஷேகங்கள் செய்து வந்தாலும் அவர்களுக்கு நன்மை பயக்கவில்லை…! ஆகவே அந்தத் தெய்வத்தையே நொந்து எத்தனையோ வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தக் குடும்பமே சிறுகச் சிறுக நசிந்து கொண்டிருக்கின்றது. பம்பாயில் பார்த்த நிகழ்ச்சிகள் இது.

ரோட்டிலே செல்லப்படும் பொழுது இத்தகைய நிலைகளை உற்றுப் பார்த்து… அங்கே நடக்கும் செயல்களைப் பின் தொடர்ந்தே… அவர்களுடைய நிலைகளை வட்டமிட்டேன்.

அவர்கள் குடும்பத்தில் என்ன நடக்கின்றது…? எப்படிச் செயல்படுகின்றது..? என்ற நிலையை இரவிலே அவர்கள் குடும்ப வாழ்க்கையைத் தெரிந்து கொள்வேன்.

அதாவது ஒரு “சாமியாராக” இருந்தவன் பல நிலைகள் கொண்டு இவர்கள் வீட்டுக்கு யாசகம் கேட்டுக் கொண்டு வருகின்றான். ஆனால் இந்தக் குடும்பமோ “உண்மையில் கஷ்டப்படுகின்றார்கள்…” என்றால் அவர்களுக்குத் தர்மம் செய்யக் கூடியவர்கள்.

ஆனால் இந்தச் சாமியாரோ… பல பில்லி சூனியங்களைக் கற்றுக் கொண்டவன்.
இந்தக் குடும்பத்தார் பலருக்கு ஈகையுடன் தர்மம் செய்து உதவி செய்தாலும்
1.இந்தச் சாமியார் தவறு செய்கிறான்…! என்ற நிலையில்
2.அவனை அப்புறப்படுத்த… ஒரு கடும் சொல்லைச் சொல்கிறார்கள்.

அப்படி ஆன பின் அவன் என்ன செய்கின்றான்…? அவர்களுக்கு என்னென்ன தடைகள் ஏற்படுத்த வேண்டுமோ அதை எல்லாம் ஏற்படுத்தினான்.
1.பார்… உன்னை நடுத் தெருவில் நிறுத்துகின்றேன்…! என்ற
2.இந்த வாக்கினை (சாபம்) அங்கே பதிவாக்குகின்றான்.

அதனால் நன்றாக இருந்த குடும்பத்தின் தொழில்கள் சிதையத் தொடங்கியது… குழந்தைகள் உடல் நலிந்தது… அவர்கள் பல அவஸ்தைகள் பட ஆரம்பித்தனர்.

குருநாதர் இதைக் காட்டுகின்றார்.

அந்தக் குடும்பத்தார் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் அகந்தை கொண்ட அந்தச் சாமியார்.. பிறரிடத்திலிருந்து பணம் பறிக்கும் எண்ணம் கொண்டவன்… “சாது” என்ற நிலைகள் கொண்டு இத்தகைய நிலைகளைச் செய்கின்றான்.

காரணம் அவன் ஒரு “அகோரி…!” அமாவாசை அன்று பல பிணங்களைத் தின்று அதன் வழி கொண்டு வாக்குகளை இடும் பொழுது இந்த மாதிரி ஆகின்றது.

தான் பணம் கேட்டதைக் கொடுக்கவில்லையே…  தன்னை மதிக்கவில்லையே என்று… இவன் எண்ணுகின்றான்.

அவர்களோ “இவனுக்கே ஏன் காசு கொடுக்க வேண்டும்…! ஏழைகளுக்குத் தானே காசு கொடுத்து உதவ வேண்டும்…” என்ற அந்த நிலையில் இருந்தார்கள்,

அதனால் அந்த அகோரி கொடூர நிலைகள் கொண்டு அப்படிச் சாபமிட்டான். நோய் நொடி என்று ஆகி தொழில்கள் எல்லாமே சிதைந்து விட்டது.

அவர்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பதை நான் பார்க்கின்றேன். அனால் அவர்கள் தவறு செய்யவில்லை.
1.தெய்வத்தை வணங்கி வந்தவர்கள் தான்
2.ஆராதனைகளையும் அபிஷேகங்களையும் செய்பவர்கள் தான்.
3.பண்பு கொண்டு மற்றவர்களுக்குத் தர்மத்தைச் செய்தவர்கள் தான்.
4.அந்தத் தர்மங்கள் செய்திருந்தாலும் இவர்கள் வணங்கிய தெய்வம் அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.

அந்த அகோரியினுடைய வாக்கின் வன்மை தீமைகளைச் செய்விக்கும் நிலை. பாலில் பாதாமைப் போட்டிருந்தாலும் அதிலே விஷம் பட்டால் எப்படியோ இதைப் போன்ற் அந்த விஷத் தன்மையான வாக்கின் உணர்வுகள் அந்தக் குடும்பத்தை இயக்கியது.

தொழில்கள் அனைத்தும் செயலற்ற நிலையாகி குடும்பத்தில் உள்ளோர் நோயாகப்படும் பொழுது அந்தக் குடும்பமே நசிந்து… தெருவில் அலைந்து…
1.“மாளிகையில் இருந்தவர்கள் குடிசையில் போய் வாழுகின்றார்கள்…”
2.அந்தக் குடிசையிலும் அவர்களுக்கு எதிர்ப்புகள் வருகின்றது.

பின் அவர்களைச் சந்தித்து குருநாதர் காட்டிய அருள் வழியைக் காட்டிக் கடைப்பிடிக்கச் செய்து அந்தத் தீமையின் செயலிலிருந்து அவர்களை விடுவித்தேன்.

அந்த அகோரி விட்ட சாப நிலைகளிலிருந்து விடுபட
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் எண்ணுங்கள்
2.அந்த உணர்வை குடும்பத்திலுள்ளோர் எல்லோரும் வளர்த்துக் கொள்ளுங்கள்
3.மீண்டும் நல் வாழ்க்கை கிடைக்கும் என்று சொன்னேன்.




அதன்படி செய்தார்கள் நன்றாக ஆனது… இது நடந்த நிகழ்ச்சி…!