ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2020

காற்றிலே பரவிப் படர்ந்துள்ள அகஸ்தியன் மூச்சலைகளை நுகர… “குருநாதர் எனக்குக் கொடுத்த பயிற்சி”


பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனுடைய தாய் சூரியனை உற்றுப் பார்த்து எதைக் கவர்ந்ததோ
1.ஒவ்வொரு நாளும் காலையில் சூரியன் நம்மைக் காக்க வருகின்றான்…! என்ற எண்ணத்துடன்
2.தாய் எண்ணிய அந்த உணர்வுகளை எல்லாம்
3.அகஸ்தியனும் (குழந்தைப் பருவத்தில்) ஒன்றுமறியாத வயதாக இருந்தாலும் சூரியனை உற்று பார்க்கின்றது.

சூரியனுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை இந்தக் குழந்தை பார்க்கின்றது. ஆனால் பார்த்த உணர்வின் அணுக்கள் அந்த அறிவின் தன்மையாக உடலுக்குள் விளைகின்றது.

1.அந்த மூச்சலைகளைச் சூரியன் எடுத்து வைத்துக் கொள்கின்றது.
2.அதை எப்படி எடுக்கின்றது…? எப்படி விளைகின்றது..?
3.இந்த மனிதக் கருவுக்குள் வந்த பின்… ஒன்றும் அறியாத நிலைகள் இருந்தாலும் அந்த உணர்வின் அலைகள் எப்படி வருகின்றது..?
4.மீண்டும் அதைச் சூரியன் எப்படி எடுத்து வைத்துக் கொள்கிறது என்று இதையெல்லாம் குருநாதர் தெளிவாக்குகின்றார்.
5.(தாய் நுகர்ந்தது.. அகஸ்தியன் நுகர்ந்தது எல்லாமே…!)

இதை அன்று அகஸ்தியனுடன் வாழ்ந்த மக்களும்.. அவன் செய்கைகளைப் பார்க்கப்படும் பொழுது உற்றுப் பார்க்கின்றனர். அவனை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் நுகர்ந்த உணர்வுகள் அக்கால மக்களுக்கும் தெரிய வருகின்றது.

இவன் வளர்ச்சி பெற்று உண்மையின் தன்மை விளைந்த பின் அவன் அருகிலே வரப்படும் பொழுது

ஏனென்றால் அந்த உணர்வின் ஞானம் அகஸ்தியனுக்கு எப்படி வந்தது…?

தாய் தன் உடலிலே நஞ்சினை வென்றிடும் மூலிகைகளையும் பச்சிலைகளையும் அரைத்துப் பூசியது. விஷத்தின் தன்மைகள் எல்லாம் மடிந்து… தாயின் கருவில் இருக்கும் அகஸ்தியனுக்குள் அது விளைந்தது.

அதன் வழிப்படி அகஸ்தியன் பிறந்த பின் அவனைச் சூழ்ந்துள்ளோர் பார்க்கப்படும் பொழுது இவனில் விளைந்த உணர்வுகளை அவர்களும் நுகர்கின்றனர்.
1.அதன் அறிவாக அவர்களும் விளைகின்றனர்
2.இவனைப் போல் அந்த உணர்வுகளை நுகர்ந்து தாவர இனங்களின் ஆற்றல்கள் எப்படி..? என்று அறியும் உணர்ச்சிகல்
3.அந்தக் காட்டில் வாழும் அகஸ்தியனின் சகாக்களுக்கும் தோற்றுவிக்கின்றது.

 இப்படி அகஸ்தியனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு “இன்றும் அலைகளாக… நமக்கும் முன் பரவியுள்ளது…!”

இதை எல்லாம்… ஈஸ்வரபட்டர்
1.எனக்குத் (ஞானகுரு) தெளிவாக்கி
2.எனக்குள் அதைப் பதிவாக்கி
3.அகஸ்தியன் உணர்வுகளை எல்லாம் நுகரும்படி செய்கின்றார்.

அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது காற்றிலிருக்கும் அந்த உணர்வின் தன்மைகளை நானும் அறிய முடிகின்றது.

ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அதை எல்லாம் பெற்றவர். அதன் உணர்வின் தன்மை தொடர்வரிசையில் வரப்படும் பொழுது
1.அவர் சொல்கிறார் நான் (ஞானகுரு) கேட்கின்றேன்.
2.அடுத்த நிலைக்குப் போகும் பொழுது இதை விட்டுவிடுகின்றேன்.
3.அவர் முதலில் ஒவ்வொன்றாகக் காட்டும் பொழுது “ஆஹா…!” என்று தெரிகின்றது.

அடுத்த நிலைக்குப் போகும் பொழுது அதை விட்டுவிட்டு வேறு நிலைக்குப் போய்விடுகின்றேன். கொஞ்ச நேரம் கழித்து.. “திடீரென்று” குருநாதர் முதலில் சொன்னதைச் சொல்லி அது எப்படி..? என்று கேட்கின்றார்.

எனக்கு அது தெரியவில்லை…! சொல்ல முடியவில்லை..!

உங்களிடம் அகஸ்தியனைப் பற்றி இப்பொழுது சொல்லிக் கொண்டே வருகின்றேன். நீங்கள் இதைக் கேட்டுக் கொண்டே வந்தாலும் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பீர்கள்.

அடுத்தாற்போல் இதை ஞாபகப்படுத்தி மீண்டும் கேட்டால் என்ன சொல்வீர்கள்…?

சாமி (ஞானகுரு) சொன்னதைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்…! என்று சொல்வீர்கள். ஆனால் என்ன சொன்னார்..? என்று கேட்டால் உங்களுக்குச் சொல்லத் தெரியாது..!

இதைப் போன்று தான் குருநாதர் என்னைத் தெளிவாக்குவதற்காகக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். இயற்கையின் உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது அதன் உணர்வின் நினைவாக நீ எப்படி இயங்குகின்றாய்…?

முன்னாடி தெரிந்து கொண்டது உயர்ந்தது… பின்னாடி தெரிந்து கொண்டது.. அதன் அழகையும் மற்றதையும் காட்டி… அதனை இரசிக்கச் செய்யும் பொழுது இதன் மேல் தான் ஞாபகம் செல்கிறது.
1.ஆழப் பதிந்த உணர்வுகளை மறந்து விடுகின்றாய்.
2.ஆனால் நீ உற்றுப் பார்த்தது உனக்குள் பதிவு உண்டு
3.அதை எண்ணி வரவில்லை என்றால் மீண்டும் திரும்ப எண்ணினால்
4.அந்த உணர்வுகள் உனக்கு எப்படி அதை அறியக்கூடிய பருவம் வருகின்றது…? என்று அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார்.

ஏனென்றால் உனக்குள் பதிந்த அந்த நிலைகள் இந்தக் காற்றிலே உண்டு என்பதைத் தெளிவாக அங்கே காட்டுக்குள் வைத்து எடுத்துக் கூறுகின்றார் குருநாதர்.

காற்றிலே மறைந்துள்ள அகஸ்தியன் உணர்வுகளை எடுத்து இந்த உலகைக் காக்கும் சக்தியாக நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும் என்பதற்குத்தான் அந்த நுண்ணிய நிலைகளை எடுத்துக் கூறுகின்றேன்.

பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!