ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2020

அகஸ்தியன் நேரடியாகப் பார்த்துணர்ந்த நம் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நீங்களும் காணுங்கள்…!


இன்று கரண்டாக (மின்சாரம்) உற்பத்தி ஆவது எல்லாமே நட்சத்திரங்களின் எதிர் மோதல் தான்…!

நம் பூமிக்குள் எடுத்துக் கொண்டால் ஒன்றுடன் ஒன்று எதிர் மோதலாகப்படும் பொழுது வட துருவமும் தென் துருவமும் இயற்கையில் காந்தங்கள் இரு விதமாக இருக்கும்.

1.தென் துருவம் வட துருவத்தைக் கண்டால் இந்தக் காந்தம் பாய்ச்சப்பட்டு அது விலகி நகர்ந்து ஓடும்.
2.வட துருவமோ ஒன்றைத் தனக்குள் இழுக்கும் (கவரும் சக்தி) சக்தியயைக் கொண்டு வருகின்றது.

தென் துருவத்தில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இது வித்தியாசமான நிலைகளில் வரும்.
1.ஒன்று இழுத்து உள்ளுக்குள் தள்ளுகின்றது.
2.அந்த உணர்வின் காந்தப் புலனறிவுகள் ஊசியை வைத்தால் நகர்ந்து போய்விடும்… இழுக்காது.
3.ஆனால் வட துருவமோ தனக்குள் அதை இழுத்துத் தன்னுடன் ஒட்டிக் கொள்கிறது.
4.இப்படி இந்தக் காந்தப் புலனறிவுகளைப் பற்றி குருநாதர் எனக்கு (ஞானகுரு) எடுத்துக் காட்டுகின்றார்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகள் எப்படி இயங்குகிறது…? மனிதன் பல கோடிச் சரீரங்களில் தப்பித்துக் கொண்ட உணர்வுகள்… மனிதனாக உருவாக்கிய பின் தான் அதை எல்லாவற்றையுமே அறிய முடிகின்றது என்று இதைத் தெளிவாக்கினார் குருநாதர்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்கின்றது. பால்வெளி மண்டலமாக மாற்றுகின்றது.

அதாவது ஒரு நூலாம்படைப் பூச்சி தான் உமிழ்த்தும் மலத்தால் கூடாகக் கட்டிக் கொள்கின்றது. அதைப் போல் தான் நட்சத்திரங்கள்  
1.சுழற்சியின் தன்மையில் இது வெளிவிடும் அமிலங்கள் உருவாகி வரும் பொழுது ஒரு கோட்டைப் போல போடுகின்றது.
2.தனக்குள் மற்றது பட்ட பின் அது சிறுகச் சிறுகத் துகள்களாக மாறுகின்றது - பால்வெளி மண்டலமாக உருப் பெறுகின்றது.

அந்த 27 நட்சத்திரங்களும் பலவித நிலைகள் கொண்டு அதனதன் நுகர்ந்த உணர்வுகள் வருகின்றது. முதலில் இருக்கக்கூடிய நட்சத்திரம் நுகர்ந்த பின் அதிலிருந்து வரக்கூடிய கழிவை… அடுத்து இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் எடுக்கின்றது.

அதன் உணர்வு இதற்குள் பட்டபின் இதனுடைய மாற்றங்கள் வேறுவிதமாக இருக்கின்றது. இந்தத் துகள்களை எடுத்துக் கொண்ட பின்
1.இன்னொன்றுடன் இது கலந்திருந்தால் அதன் இணையாகச் சேர்கின்றது.
2.இது கலக்காத நிலை இருந்தால் ஒத்துக் கொள்ளாத நிலையாகி எதிர் நிலை கொண்டு ஓடுகின்றது.

இப்படி இந்த 27 நட்சத்திரங்களின் செயலாக்கங்கள் தான் நம் பிரபஞ்சத்தில் அது ஈர்க்கும்… அல்லது எதிர் நிலை…! (சத்ரு மித்ரு) மற்ற நிலைகள் எல்லாம் இதற்குள் அடங்குகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களும் நம் பூமியின் தென் துருவப் பகுதிக்கும் வருகின்றது. வட துருவப் பகுதிக்கும் வருகின்றது. ஒரு குளோப் மாதிரி சுற்றி வருகிறது.

அதனின் சுழற்சியில் வரப்படும் பொழுது அதாவது 27 நட்சத்திரங்களும் இந்தக் கோளைப் போல் அது சுழன்று வரப்படும் பொழுது
1.அதனுடைய உமிழ்த்தல் வரப்படும் பொழுது இங்கே இழுத்த பின் அதன் நிலை.
2.இதைக் கலந்து இங்கே எடுத்த பின் அதனின் மாற்ற நிலை.
3.இப்படிப்பட்ட எதிர்மறைகள் நம் பூமிக்குள் எப்படி உருவாகின்றது…?
4.கோள்களில் விளைய வைத்தது தென் துருவப் பகுதியில் கலந்த பின் இதன் உணர்வு கொண்டு இதற்கு எப்படி எதிரியாகின்றது…?
5.அந்த நிலையில் பூமி எப்படி நகர்ந்து (தொடர்ந்து) ஓடுகின்றது…? என்று
6.இவ்வளவு பெரிய அதிசயத்தைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் (ஞானகுரு) கிடைத்தது.

குருநாதர் எனக்குள் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு அதனை உற்றுப் பார்க்கும்படி செய்தார். ஆனால் அப்படி உற்றுப் பார்ப்பதற்கு எங்கிருந்து சக்தி கிடைக்கின்றது…?

இது அகஸ்தியன் தன் உடலில் இளம் பருவத்தில் பிறந்த பின் அவன் உற்று நோக்கிய உணர்வுகள் கொண்டு தான் காண முடிந்தது.

சூரியன் மையமாக இருக்கின்றது. சுழற்சி வட்டம் வரும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகின்றது. குறையும் தன்மை வரப்படும் பொழுது சுழற்சியின் மாற்றங்களைப் பார்த்தால்
1.நம் பூமி எப்படி மையத்தில் வெப்பமாகின்றதோ இதே போல்
2.மையத்தின் நிலை கொண்ட உணர்வுக்கொப்ப அதனுடைய சுழற்சியின் நிலைகள் மாறுபடுகின்றது
3.இதற்குள் தான் இந்தச் சூரியன் (ஒரு குடும்பமாக உள்ளது).

இதற்கு வெளியிலே போனோம் என்றால் ஒரு குளோப் போல் பல சூரிய மண்டலங்கள் (குடும்பங்கள்) உண்டு. இப்படிப் பல நிலைகள் ஒன்றுடன் ஒன்று ஒத்து வரப்படும் பொழுது இதனுடைய சுழற்சி மாறுபட்டு வரப்படும் பொழுது
1.நம் பிரபஞ்சத்திற்குள் மாற்றம்
2.அதனால் ஏற்படும் நிலைகளால் நம் சூரியனுக்குள் மாற்றம்… மற்ற கோள்களில் மாற்றம்
3.கோள்களில் மாற்றமாகும் பொழுது நம் பூமியிலும் மாற்றம்.

இது எப்படி எல்லாம் மாறுகின்றது…? என்பதை ஈஸ்வரபட்டர் அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த நிலைகளை என்னைக் கவரும்படி செய்து அதை உணர்த்திக் காட்டினார்.

இன்று இருப்பது நாளை இல்லை…! இயற்கையின் நியதி…!