1.ஒருவர்
நீர் அருந்தும் பொழுது நாம் பார்த்தால் நமக்கும் தாக நிலை ஏற்படுகின்றது.
2.ஒருவர்
கொட்டாவி விட்டால் அதே நிலை நமக்கும் ஏற்படுகின்றது,
ஜீவ
சக்தியில் சரீர பிம்ப வாழ்க்கை நிலையில்.. உணர்வுடன் கூடிய எண்ணத்தில் செயல்படும்
வழிமுறை ஆற்றல்… மனிதச் சக்திக்கே ஒருவருடன் ஒருவர் கூடி வாழும் வாழ்க்கையில்…
இவ்வீர்ப்பின் தொடர்பில் “ஒருவரை ஒத்து” ஒருவரை இப்படித்தான் சாடுகின்றது.
இதே போல் தான்
ஆத்ம இயக்கத்தின் தொடர்பிலும் உண்டு. தாம்பத்ய எண்ண வாழ்க்கையில் ஆண் பெண் ஒத்த
இல்லற உணர்வால் ஒருவரின் அலைத் தொடர்பைப் பிறிதொருவர் அதிவிரைவில் எடுக்கும்
வல்லமை கூடிய இல்லற எண்ண ஒற்றுமைகள் நடைபெறுகின்றன.
1.உயர்
அலையின் தொடர்பலையால்
2.காந்த
மின் அலையின் வீரிய உயர் குண வழித் தொடரில்
3.ஜெபம்
கொண்ட சக்திமிக்க வாழ்க்கை நிலை ஏற்படும் பொழுது
4.இரண்டு
எண்ணங்களின் ஒருமித்த கூட்டு ஐக்கிய குண நிலை அமையும் பொழுது
5.அத்தொடரினால்
பெறப்படும் உயிராத்மாவின் வலுவில் கூட்டு ஐக்கியம் கொண்டு
6.சிவசக்தி…
என்ற “ரிஷிபத்தினி” நிலையைப் பெற முடியும்.
அந்நிலையின்
வழித் தொடரில் தனித்த அலைத் தொடர்பைக் காட்டிலும் வளர்க்கும் தன்மைக்கு வளர்ச்சி
பெறும் ஜீவ சக்தியைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் நிலை பெற முடியும்.
மனித
ஆத்மாவின் அலைச் சக்தி எண்ணத்தின் ஆவி நிலையின் பதிவு நிலை… பூமி இழுத்து
வெளிப்படுத்தும் அலையுடன் ஒன்றிய வாழ்க்கை நிலையில்… இவ்வுணர்வின் எண்ணத்தின் சரீர
அலைத் தொடர்பு இந்த உடல் செல்லும் இடங்களில் எல்லாம் “பூமியின் ஈர்ப்பில் பதிந்து
கொண்டே உள்ளது…!”
அதைப்
போன்றே…. ஒத்த நிலையிலோ மாற்று நிலையிலோ உள்ளவர்களுடன் கூடிய எண்ண உறவாட்டத்தில்…
பிறரின் அலை உணர்வை… நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கத்தான் செய்கின்றோம்.
எப்படி
தாகம் எடுப்பதும் கொட்டாவி விடுவதும் பிறரின் தொடர்பு கொண்டு உள்ளது போன்றே
1.பிறர்
வளர்த்த அலைத் தொடர்பை
2.ஒளி
பாய்ச்சி உணர்வும் எண்ணமும் ஈர்க்கும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.பிறரின்
சோகத்தையும் சஞ்சலம் சந்தோஷம் எதுவாகிலும் எடுக்கும் நிலையில் தான்
4.இன்றைய வாழ்க்கை
நடைமுறையில் நாம் உள்ளோம்.
அதை மாற்றி
எண்ணத்தால் எடுக்கும் ஞான உணர்வின் வழி முறையில் உயர்ந்த ரிஷித் தொடர்புடன்
செயல்படும் வாழ்க்கை வழிமுறையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
அப்படி அமைத்துக்
கொண்டோமானால்
1.இவ்வாத்ம
அலையை ஒளிரும் சக்தியில் வலுக் கொண்டு இயங்க
2.நாம்
வளர்த்த உயர் தொடர்பின் வலுத் தன்மையுடன்
3.மாற்று
நிலை கொண்ட பிறருடன் கலந்துறவாடும் எண்ண நிலை ஏற்பட்டாலும்
4.தணலில்
போடும் பொருளைப் போன்று அவை நம்மைச் சாடாமல் பஸ்பமாக்கும் தன்மைக்கு
5.நம் ஆத்ம
அலையின் வலு நிலை கூடிவிடும்.