ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2020

என்றும் பதினாறு அடைந்த அந்த மாரக்கண்டேயன் யார்…? என்றும் பதினாறு என்றால் அர்த்தம் என்ன…?

அகஸ்தியன் தன் மனித வாழ்க்கையில் பல தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவனைப் பின்பற்றியோர் உணர்வுகள் பத்தாவது நிலையாக ஒளியாக ஆன பின் உடலை விட்டுச் சென்று அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்த இயற்கையின் வாழ்க்கையில் இந்தச் சூரியக் குடும்பமே ஒன்பதாவது நிலை தான்.

ஆனால்…
1.கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து
2.உணர்வின் தன்மையை ஒளியாக விளைய வைக்கும் பருவத்தை அடைந்து விட்டால்
3.நுகர்ந்த உணர்வுகள் அந்த ஒளியாக மாற்றும் திறன் வந்துவிடும்.

அந்தத் திறன் வந்துவிட்டால் அண்டத்தில் எங்கு வேண்டுமானால் செல்லும் ஆற்றலும் அந்த உணர்வின் சத்தை ஒளியாக மாற்றிடும் ஆற்றலும் பெறுகின்றது.

அகண்ட அண்டம் எல்லையே இல்லாதிருக்கின்றது… இருந்தாலும் அதிலிருந்து வரும் உணர்வை நுகரும் சக்தி பெற்றால் என்றும் பதினாறு…!

அதாவது…
1.அகண்ட அண்டம் பெரிது
2.அதிலே நம் வளர்ச்சியின் தன்மையோ சிறிது தான்
3.இருந்தாலும் ஒளியாக மாற்றிக் கொண்டே வரும் இதனுடைய வளர்ச்சி வரும் பொழுது
4.என்றும் பதினாறு… என்று அதை இளமைப் பருவமாகக் காட்டுகின்றனர்…!

அப்படிப்பட்ட வளர்ச்சி வளர… வளர… அகண்ட அண்டத்துடன் ஒப்பிட்டால் இது சிறிதே…! இது இளமையானதே…! பருவமானதே… என்று இதைத் தெளிவுபடுத்துவதற்குத்தான்
1.என்றும் பதினாறு என்ற நிலையை
2.அன்று மார்க்கண்டேயன் பெற்றான் என்று காட்டினார்கள் ஞானிகள்.

அந்த மார்க்கண்டேயன் என்பது யார்…?

துருவ நட்சத்திரம்…!

அது “என்றும் பதினாறு” என்ற நிலைகளில் வளர்ச்சி பெறுகின்றது. அதன் வழியில் சென்றவர்கள் தான் இன்றும் அதன் நிலை சப்தரிஷி மண்டலமாகப் பெறுகின்றனர்.

ஏற்கனவே ஆதியிலே… முதன் முதலில் பிரபஞ்சம் உருவான விதத்தைச் சொல்லியிருக்கின்றேன். ஒரு அணுவின் தன்மை பல நிலைகள் அடைந்து கோளாகி… நட்சத்திரமாகிச் சூரியனாகி ஓர் பிரபஞ்சமாகின்றது.

அதே போன்ற வளர்ச்சியில் நம் உயிர் உருவாகி மற்ற நிலைகள் பல எத்தனையோ உணர்வுகள் கொண்டு இன்று மனிதனாக உருவாக்கியுள்ளது.  சூரியனை ஒத்த நிலை போன்றது தான் மனிதனின் உயிரும்.

சூரியன் தனக்குள் மோதும் தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்று
1.எந்த விஷத்தால் அது உணர்வின் ஒளியாக உருவானதோ
2.அதே விஷத்தை நீக்கி விட்டுத் தன்னிச்சையாக ஒளியாக மாறும் தன்மை வருகின்றது.
3.அதன் உணர்வு எதனுடன் கலக்கின்றதோ அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக வருகின்றது.

மனிதனாக ஆன நிலையில் கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வின் ஒளி அணுக்களை உருவாக்கும் தன்மை பெற்று விட்டால் “என்றுமே அது அழியாத் தன்மை கொண்டது.. உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது….!”

“தனித்த மனிதன்” இதை எடுத்துச் சென்றாலும் அந்த ஒளியின் தன்மை பெறுவது கடினம். ஆண் பால் என்றாலும் பெண் பால் என்றாலும்  வளர்ச்சி இருக்காது.

ஆனாலும் அந்தத் தொடர் கொண்ட ஆன்மாக்களில் (கணவன் அல்லது மனைவி) ஒன்று பிரிந்து விட்டாலும் அவருடைய உணர்வுகள் நமக்குள் உண்டு.

இதற்கு முன்னாடி செய்யத் தவறி இருந்தாலும் அந்த ஆன்மாக்களைக் இப்பொழுது அதிகாலை துருவ தியான நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவேற்றிக் கொண்ட பின்
1.நம்முடன் வாழ்ந்த நினைவலைகள் கொண்டு அந்த உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று அங்கே உந்திச் செலுத்துதல் வேண்டும்.

இப்படி நாம் தொடர்ந்து காலையில் செய்து வரப்படும் பொழுது இன்னொரு உடலிலிருந்து அந்த ஆன்மா (நம்மைச் சார்ந்தோர்) வெளி வந்தாலும் அவருடைய உணர்வு நமக்குள் உண்டு. அதனைக் கவர்ந்து அங்கே செலுத்தி விடலாம். உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடலாம்.

1.அவர்கள் விண் சென்ற அந்த உணர்வை எண்ணி ஏங்கும் பொழுது
2.அடுத்து இந்த உடலை விட்டு நாம் சென்றாலும்
3.அவருடன் இணைந்து வாழும் தன்மை வருகின்றது.

இத்தகைய உணர்வுகள் தனக்குள் பருகப்பட்டு அந்த உணர்வுகள் இரண்டறக் கலந்தால் வான்வீதியில் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.

1.ஒரு ஆன்மா முன் சென்றாலும்… பின் வரும் நிலைகள்
2.அதே தொடர் கொண்ட நிலைகளில் செயல்படுத்துவோம் என்றால் பிறவியில்லா நிலைகள் அடைகின்றது.

இது மனிதன் ஒருவனால் தான்… முடியுமே தவிர மற்ற மிருகங்களால் முடியாத நிலை ஏற்படுகின்றது.