ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 15, 2020

உடலுக்கு வேண்டிய சுகத்திற்காகத்தான் கடவுளை வணங்கும் நிலையே இன்று உள்ளது – தீமையை நீக்கும் சக்தியை எடுப்பார் இல்லை…!


இன்று விஞ்ஞான அறிவால் தாவர இனங்களில் அதிக அளவில் விஷத் தன்மை பரவியுள்ளது. அதிலே விளைந்த தானியங்களை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலிலும் நஞ்சு கலந்த அணுக்கள் உருவாகத் தொடங்குகின்றது.

அதே போல் காய்கறிகளிலேயும் பல பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றனர். அத்தகைய காய்களை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலில் அந்த நஞ்சும் சிறுகச் சிறுகச் சேர்கின்றது.

1.அதே சமயத்தில் பூச்சிகளைக் கொல்வதற்காகத் தெளிந்த மருந்துகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது
2.எந்தப் பூச்சிக் கொல்லி மருந்தின் உணர்வைக்  கவர்ந்தோமோ அது நம் உடலில் சேர்ந்த பின்
3.காற்றிலிருந்து எடுத்து அந்த விஷமான அணுக்களாக விளையத் தொடங்குகின்றது.
4.அதனால் உடலில் கை கால் குடைச்சல் என்ற நோய்கள் வருகின்றது.
5.அந்தந்தக் காலகட்டங்களில் “இனம் புரியாத…” புதிய புதிய நோய்களும் சாடுகின்றது.

இத்தகைய விஷத் தன்மை அதிகரித்த நிலையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் பகைமையாக்கி வெளிப்படுத்திய உணர்வுகளும் இருக்கின்றது.

அத்தகைய பகைமை ஊட்டும் உணர்வுகள் நமக்குள் பதிவான பின் அதே உணர்வுகளை நாம் நுகர நேர்கின்றது. அதுவும் உடலில் விளையத் தொடங்குகிறது.

இது எல்லாம் சேரும் பொழுத் நம் உடலில் இருக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செயலற்றதாக மாற்றிக் கொண்டு வருகின்றது.

நாம் நல்ல மனிதர்களாக இருப்பினும்
1.நம்மை அறியாமலே வேதனைப்படுபவர்களாகவோ
2.அல்லது கோபப்படுபவர்களாகவோ  மாறி விடுகின்றோம்.
3.சிந்திக்கும் தன்மையும் இழந்துவிடுகின்றோம்.

வாழ்க்கையே என்ன…? என்று அறியாத நிலையில் வெறுப்படைந்து இந்த உடலையே வெறுக்கும் தன்மைக்கு வந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வுகள் வரப்படும் பொழுது எதனை அதிகமாக இந்த வாழ்க்கையில் சேர்க்கின்றோமோ அதனின் பெருக்கமாகும் பொழுது நல்ல அணுக்களின் வளர்ச்சி குறைந்து விடுகின்றது. உடல்கள் நலிகின்றது.

உடல் நலிய நலிய தன்னையே வெறுக்கும் தன்மைக்கு வந்துவிடுகின்றோம். இனி எப்படியாவது…
1.இந்த உடலை விட்டுச் சென்றால் போதுமே..! என்று
2.இறக்க வேண்டும்  என்ற நிலை தான் முடிவாகின்றது.

கடைசியில் இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின் உடலில் விளைந்தது எந்த உணர்வோ அந்த உணர்வுக்குத் தக்க விஷம் கொண்ட உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று அங்கே கருவாகி மீண்டும் வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் உயிரினங்களுக்குள் சென்று விடுகின்றோம்.

பல கோடிச் சரீரங்கள் கடந்து இன்று மனிதனாக வந்த நிலையில் விஞ்ஞான அறிவால் இப்ப்டிப்பட்ட பேரழிவுகள் இங்கே இந்தப் பூமியில் பரவிக் கொண்டுள்ளது.

1.பக்தி மார்க்கங்களில் கடவுளை வணங்குவதெல்லாம் உடலுக்கு வேண்டிய சுகத்திற்காகத்தான்…!
2.ஆனால் உடலில் வரும் தீமைகளை மாற்ற அருள் ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்றால்
3.அதை யாரும் எடுப்பதில்லை… உபதேசித்தாலும் ஏற்றுக் கொண்டு செய்வதில்லை..!

ஆகவே… இந்த உடலில் உள்ள தீமைகளை நீக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர வேண்டும். நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் குறைகளை நீக்கும். அதே சமயத்தில் அந்த ஞானியின் உணர்வுகள் நமக்குள் வளரும்.

இந்த நம்பிக்கை யாருக்கும் வருவதில்லை..!