ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 10, 2020

ஞானிகளைச் சந்திப்போர் பெரும்பகுதி பிழைப்புக்காகத் தான் கேட்கிறார்கள் – அவர்கள் பெற்ற ஞானத்தைக் கேட்பதில்லை

 

கருவிலிருக்கப்படும் பொழுது ஒரு தாய் பாசத்தால் அன்பால் பண்பால் பரிவால் ஒரு குழந்தை கடும் நோயால் அவதிப்படுவதௌ உற்றுப் பார்க்கின்றது. அடப் பாவமே…! இந்தச் சிறிய வயதில் இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணுகின்றது.

ஏனென்றால் கருவுற்றிருக்கும் காலத்தில் தாய்க்குக் குழந்தைப் பாசம் அதிகமாக வரும். கர்ப்பமாகி விட்டாலே அந்த தாயின் சுவாசமே வேறு விதமாக இருக்கும். அந்தப் பாசம் என்ற உணர்வுகள் தோன்றும்.

நோயுற்ற அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்த பின் கண்களால் பார்த்த பின் தாய் உடலில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிகின்றது.

ஆனால் அது கருவிலே விளையப்படும் பொழுது சிறுகச் சிறுகச் சேர்ந்து பிறந்த பின் குழந்தைக்கும் இது நோயாக மாறுகின்றது. நோயாக மாறிய பின் தாய்க்கும் அந்த வினையாகின்றது. குழந்தையைப் பார்க்கச் செல்வோருக்கும் இதிலே விளைந்தது (நோய்) அங்கே வருகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.  

அதைப் போல் தான் பண்டைய காலத்தில் அகஸ்தியன் அவன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது தாய் நுகர்ந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல்கள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின்
1.அவனுடைய அபூர்வ செயலை அவனுடன் வாழ்ந்த சகாக்களும் உற்றுப் பார்க்கின்றனர்… நுகர்கின்ரனர்.
2.அப்பொழுது அகஸ்தியன் உடலில் விளைந்த பேராற்றல்கள் அவர்களுக்குள்ளும் விளைகின்றது.
3.இப்படி அக்கால மக்கள் அகஸ்தியனுடன் வாழ்ந்து அவன் வழியில் சென்றவர்கள் தான்
4.சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக இருக்கின்றார்கள்.

அதன் பின் சென்றது அரசர்களாக ஆன பிற்பாடு ஒன்று இரண்டு போனது அபூர்வமாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் குருநாதர் இதை எல்லாம் காட்டிய பின் காந்திஜி இராமகிருஷ்ண பரமகம்சர் இராமலிங்க அடிகள் போன்றோரை விண் செலுத்தினோம்.

இருந்தாலும் அந்த ஞானிகள் மீது பற்று கொண்டோர் எல்லாம் அவர்களிடத்தில் ஏதோ கிடைக்க வேண்டும் என்று தான் சென்றார்கள். அவர்கள் கண்ட உண்மையின் உணர்வைப் பெறவேண்டும்… அந்த  ஞானத்தைப் பெறவேண்டும்…! என்று யாரும் கேட்கவில்லை.

1.மகானிடம் சென்றால் இந்த வாழ்க்கைக்கு உதவும்
2.மகானைப் போய்ப் பார்த்தால் நம் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான்
3.இன்று வரையிலும் சந்திக்கச் செல்கிறார்கள்.

ஆனால் பிழைப்புக்குக் கிடைக்க வேண்டும்…! என்று சென்றாலும் “ஞானம்  இல்லை…” என்றால் வந்த பணத்தைச் சீராக்க முடியுமா என்றால்  முடியாது…!

பணமே வந்தாலும் ஞானம் இல்லை என்கிற பொழுது என்ன நடக்கிறது..?

1.ஆசை அதிகமாகின்றது
2.அதிலே ஏதாவது பிசகானால் இப்படி ஆகிவிட்டதே…! என்று மறுபடியும்
3.இதைப் பெறவேண்டும் அதைப் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டப்பட்டு… அந்த ஆசை நம்மை “விடுவதில்லை…!”

இதை மட்டும் பெற்றால் பரவாயில்லை என்போம். பின் இது நன்றாக வந்தது… இதை வைத்து இன்னொன்றைப் பெருக்கலாம்…! என்று சொல்லி அதிலே நஷ்டமானால் வேதனை தான் மிச்சமாகின்றது.

வேதனை வந்த பின்
1.முதலில் வந்த செல்வமும் போய் விடுகிறது…
2.அதற்குபின் தொழிலைச் சீராக்கி வளர்வதும் போய்விடுகிறது..

இரண்டுக்கும் சேர்த்து வேதனை என்ற அணுக்களை வளர்த்து வளர்த்து… உடலிலே நோயை உருவாக்கத்தான் நாம் தயாராகின்றோம்.

நோயாக ஆன பின்… நான் இப்படி எல்லாம் செய்தேனே.. இப்படி எல்லாம் வந்தேனே…! எல்லாம் போய்விட்டதே..! என்று புலம்புவார்கள்…!

மனிதனுடைய இன்றைய வாழ்க்கை இப்படித்தான் இருகின்றது.