ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 2, 2020

ஞானிகளைப் புகழ்வதனாலேயோ பணிந்து வணங்குவதனாலேயோ பலன் இல்லை…!


குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அனுபவரீதியிலே தான் எல்லாவற்றையும் அறியும்படி செய்தார்.
1.என் (ஞானகுரு) குடும்பத்தையே இன்னலுக்கும் ஆளாக்கினார்.
2.இந்த உணர்வு - தன்னை ஒட்டி வரப்படும் பொழுது தான் அனுபவ ரீதியில் யாம் அறிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு நொடியிலேயும் இந்த உணர்வுகள் உலகில் எப்படி இயங்குகின்றது…? உலக மக்கள் தன்னை அறியாது எப்படி இன்னல்கள் படுகின்றனர்..? எப்படி அவதிப்படுகின்றனர்…? என்ற நிலையை உணர்த்துவதற்குத்தான்
1.இருபது வருடம் என்னைக் கால் நடையாகவே இந்தியா முழுவதும் நடக்கச் சொன்னார்…
2.மூன்று இலட்சம் பேரைச் சந்த்திக்கச் செய்து அந்தக் குடும்பங்களில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டி
3.பல அனுபவங்களைப் பெறச் செய்தார் குருநாதர்.

அறிந்த உண்மையின் தன்மையில் பார்க்கும் போது சந்தர்ப்ப பேதத்தால் எத்தனையோ பேர் அவதிப்படுகின்றனர். அதிலிருந்து மீண்டிடும் நிலையாக மெய் ஞானிகள் காட்டும் அருள் வழியில் நீங்கள் நடந்தால்
1.உங்கள் எண்ணமே உங்கள் துன்பத்தைப் போக்கும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறவேண்டும் என்று தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் காட்டிய மெய் வழியைக் கடைப்பிடித்து… அதை நீங்கள் அனுபவித்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்… அதைப் பற்றுடன் பற்றி உங்களை அறியாது வரக்கூடிய துன்பங்களைப் போக்க முடியும்…! என்று தான் சொல்கின்றேன்.

இதை ஏற்றுக் கொள்வார் இல்லை…!

சாமியைப் (ஞானகுரு) புகழ் பாட முடிகின்றது பாத நமஸ்காரம் செய்யத்தான் விரும்புகின்றார்கள். இது வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை.

1.அருள் ஒளியைப் பெறுங்கள்…
2.உங்களுக்குள் தீமைகள் வருவதை அடக்கிப் பழகுங்கள்…
3.உங்களால் முடியும்…! என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.