ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2020

டி.பி. கேன்சர் இருதய அடைப்பு போன்ற கடுமையான நோய்களைப் போக்கும் மருத்துவம்


வெள்ளாடு நஞ்சினை அடக்கும் சக்தி பெற்றது. விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொண்டுக நல்ல நிலையை அது வெளிப்படுத்துகின்றது.

அந்த வெள்ளாட்டுப் புழுக்கையை எடுத்து நன்றாகக் காய வைத்து… லேசான நிலைகளில் சூடாக்கி… அந்த ஆவி வருகின்ற மாதிரி… கொதிகலனாக ஆகாதபடி அதிலிருந்து ஒரு வெப்பம் வரும் பொழுது அதை நுகர்ந்து பாருங்கள்.

அதைச் சுவாசித்து உடலுக்குள் செல்லப்படும் பொழுது நீங்கள் மருந்து சாப்பிடுவது போன்று உடலில் அறியாது சேர்ந்த விஷத்தை இது ஒடுக்கும் வல்லமை பெறுகின்றது.

1.அந்த ஆவி இரத்தநாளங்களில் செல்லப்படும் பொழுது
2.டி.பி. ஆனாலும் கேன்சர் ஆனாலும் மற்ற கடும் நோயாக இருந்தாலும் அது எல்லாம் குணமாகும்
3.இருதய வாயிலில் அடைப்பாக இருந்தாலும் கூடக் கொஞ்ச நேரம் சுவாசித்துப் பழகுங்கள்… குணமாகும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தை எடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களிலே கலந்து எனக்குள் இருக்கும் தீமைகள் அகல வேண்டும் என்று தியானியுங்கள்.
1.எனக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்
2.உங்களுக்கு எந்த நோயோ அது நீங்க வேண்டும் என்று எண்ணி அதைச் சுவாசியுங்கள்.

இன்று ஆஸ்த்மா நோயுள்ளவர்கள் அதிகம் உண்டு. இது எல்லாம் பரம்பரையாக வருவது. சர்க்கரை நோயும் கூட இப்பொழுது பரம்பரையாக வருகின்றது.

பிறந்த குழந்தைக்கே சர்க்கரைச் சத்து இருக்கிறது என்று சொல்கிறார்கள். மூன்று வயது நான்கு வயதிலேயே இன்சுலின் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் தாய் வழியில் வருகின்றது.

காசு இருக்கின்ற வரையிலும் போடுகின்றோம். காசில்லாதவர்கள் விட்டு விடுகின்றோம். போன பிற்பாடு ஐயோ.. இந்த மாதிரி இருந்தானே…! போய் விட்டானே,,,! என்று சொல்கிறோம். அந்த உணர்வை உடலில் எடுத்து இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொள்கின்றோம்.

ஆக குறைக்க வழியில்லை…!

நான் கோவிலுக்குச் சென்றேன்… அதைச் செய்தேன்… விரதம் இருந்தேன்…! என்று இந்தப் பாவத்தைப் போக்க சிலதுகளைச் செய்து “காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கும்” இந்த நிலைகளில் தான் இன்று இருக்கின்றது.

இது எல்லாம் நம் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. வளர்ச்சி பெற்ற அந்த அருள் ஞானியின் உணர்வை நாம் நுகர்ந்து பழக வேண்டும்.

உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் மற்ற வலு கொண்ட உணர்வை நுகர்ந்து நுகர்ந்து அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள இந்த உணர்வு வளர்ச்சி கொண்ட பின் அதன் உடலிலே புகுந்து அதன் தன்மைக்கு மாறுபட்டு வருகின்றது.

இதைப் போல்…
1.மனிதனின் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்ற
2.மெய் ஞானிகள் பாதையில் நாம் எடுத்து அவர்கள் உணர்வினை வளர்த்துக் கொண்டோம் என்றால்
3.அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றிவிட்டு
4.பத்தாவது நிலை என்ற முழுமை அடைகின்றோம்.

அதைத்தான் “வைகுண்ட ஏகாதசி” என்று சொல்வது. ஏகாந்த நிலைகள் பெறும் தகுதியும் நமக்கு வருகின்றது.

மனிதனாக ஆன பின் ஏகாந்தம்… அகண்ட அண்டத்தில் எத்தகைய நஞ்சு வந்தாலும் ஒளியாக மாற்றிடும் திறன் நாம் பெறுகின்றோம்.