மெய் உணர்வுகளை குருநாதர் எனக்குக் கொடுத்தார். அதன் உணர்வின் தன்மையை
எனக்குள் வளர்த்தேன். அந்த அருள்வழிப்படி அவர் உபதேசித்த உணர்வின் வழிப்படியே தான்
உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.
1.ஏனென்றால் முந்திச் சொன்னது எல்லாம் வேறு..!
2.இதனுடைய உண்மையான பற்றுக்கு வரும் பொழுது அது வரும்.
தூண்டிலிலே ஒரு மீனுக்கு இரை போடுகின்றோம் என்றால் அதை உட்கொள்ளும் நிலையில்
பிடித்து எடுத்துக் கொள்கின்றோம்.
இதே மாதிரித்தான் உங்களுக்குள் இருக்கக்கூடிய ஆசையின் உணர்வுகளுக்கு அந்த
இரைகளைப் போடும் பொழுது “தொழில் நடக்க வேண்டும்… இலாபம் வேண்டும்…! என்று
வருகின்றீர்கள்.
அப்படி வரும் பொழுது அதன் வழிகளிலே எடுத்து அந்த அருள் ஞானத்தின் வித்தை
உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.
பதியச் செய்த வழியில் அந்த அருள் உணர்வை நீங்கள் பின்பற்றினால்… இந்த ஆசையின்
நிலைகள் எதுவோ
1.நீங்கள் தேடாமலே செல்வம் தேடி வரும்
2.தேடாமலே மகிழ்ச்சியும் தேடி வரும்.
3.மகிழ்ச்சி உருவாக்கப்படும் பொழுது செல்வத்தைத் தாரளமாகச் செலவழிக்க வேண்டி
வரும்.
ஆனால் இப்பொழுது செல்வம் இருந்தாலும் என்ன நடக்கிறது…?
இதைப் பாதுகாக்கும் ஞானம் இருக்காது. சிக்கனம் செய்வோம்… சாப்பிடாமல் பண்ணுவோம்.
பணம் இருக்கிறது என்றால் ஒருவரை வெறுத்துப் பேசுவோம் இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட
பின் அடுத்தவரிடம் சண்டைக்குப் போவோம்… அதன் வழியில் பணத்தைச் செலவழிப்போம்,
அதே சமயத்தில் பண்புடன் இருப்போம். பரிவுடன் இருப்போம் வேதனையுடன்
இருக்கின்றார் என்று ஒருவருக்கு உதவி செய்வோம். அந்த வேதனையைத் துடைக்கத்
தெரிவதில்லை. ஆக வேதனைப்பட்டோர் உணர்வு உள்ளுக்குள் வந்தவுடன் நோய்
வந்துவிடுகின்றது.
காசைக் கொண்டு அதற்குச் செலவழித்தாலும் செல்வம் குறையத் தொடங்கும். நோயைப் போக்க
செல்வம் போனாலும் கூட உடலை வாங்க முடியாது…!
1.காசை வைத்து ஆன்மாவை விலைக்கு வாங்க முடியாது…!
2.அருள் ஞானியின் உணர்வை அந்த அழியாச் செல்வமாக இன்றும் வாழ்ந்து
கொண்டிருக்கும்
3.அந்த மெய் ஞானிகளின் உணர்வினை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.
4.நம் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் அரை மணி நேரம் தியானித்தால் எனக்குச் சக்தி கிடைக்கும் என்பது
உட்கார்ந்திருந்தால் உணவுக்கு என்ன செய்வது…?
உட்கார்ந்து… தியானம் மட்டும் செய்து கொண்டிருந்தால் சோற்றுக்கு அப்புறம் என்ன
செய்வது…? சோறு யாரும் கொடுக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் நாம் ஏங்க
வேண்டியிருக்கும்.
ஆகவே நமக்குள் அந்த மன வலு கொண்டு தொழிலையும் இந்த உடலையும் காக்க வேண்டும்
என்றால் அதற்குப் பொருளும் வேண்டும். அதற்குத்தான் ஞாபகார்த்தமாகப் பிரசாதம்
கொடுக்கும் பொழுது நான் (ஞானகுரு) காசையும் சேர்த்துக் கொடுக்கின்றேன்.
அதை வாங்கிய பின் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி வரும்.
1.நீங்கள் அதையாவது எடுத்து அந்த அருள் ஞானத்தை வளர்த்துக் கொண்டால்
2.செல்வம் தன்னாலே வரும்…! என்று சொல்கிறோம்.
நான் தொழில் செய்கிறேன்…! ஆனால் எங்கெங்க…? என் கஷ்டம் என்னை விட்டுப் போக
மாட்டேன் என்கிறது.. வாங்கியவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்கவே மாட்டேன்
என்கிறார்கள் அதனால்.. பணம் வாங்கியவருக்குப் பணத்தைக் கொடுக்க முடியவில்லை…! என்ற
இந்த இராகத்தைத்தான் பாடுகின்றோம்.
இதை எல்லாம் அந்த ஞானிகளின் உணர்வின் தன்மை கொண்டு மாற்ற வேண்டும்.
வாழ்க்கையில் எது வரினும்… அந்த அருள் ஒளியைக் கூட்டிக் வளர்த்தால்… காலத்தால்
நமக்குள் மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டும். அந்த அருள் செல்வம் நமக்குள் வளரும்.
அருள்: செல்வம் நமக்குள் வளர வளர… எவர் பகைமையாக இருப்பினும் இந்த உணர்வுகள்
சேரச் சேர…
1.அந்த உண்மைகளை அங்கே உணர்த்தும்… தன்னுடைய தவறை உணர்வார்கள்.
2.ஆனால் அதே சமயத்தில் உணரவில்லை என்றாலும் இந்த உணர்வின் தன்மை அவர்களை
வலுவிழக்கச் செய்யும்.
3.அவர் செய்யும் தவறுகளில் மற்ற இடங்களில் சிக்க வைக்கும்.
ஆனால் நம்மைப் பாதிககாது. ஆக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலைகள்
வருகின்றது. நம் நல்லதைக் காக்கும் நிலையும் உருப்பெறுகின்றது.
இதை எல்லாம் நாம் வழிப்படுத்துதல் வேண்டும்…!