ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2020

இறந்தவர்கள் அஸ்தியைக் கரைப்பதன் உண்மையான பொருள் என்ன..?


தினசரி காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தினால் நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானித்தோமோ அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்கு எளிதில் அனுப்ப முடியும்.

1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.இந்த உணர்வுகள் பட்டு உடல் பெறும் உணர்வைக் கரைத்துவிடும்.
3.ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் அனைவருமே உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைப்பது என்றால் அடுத்துக் காலை சூரிய உதயம் வருகின்றது. இந்த உடலிலிருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை… அந்த விஷத்தை… அது கவர்ந்து செல்கின்றது. ஏனென்றால் இதிலே பிரித்தது.

உதாரணமாக கருணைக் கிழங்கை வேக வைத்தால் அந்த விஷத் தன்மைகள் பிரிந்து செல்கிறது. பிரிந்தாலும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக அதை மாற்றி வைத்துக் கொள்கின்றது.

இயற்கையில் விளைந்த உணர்வானாலும்… நாம் வேக வைத்து விஷத்தை நீக்கினாலும்…
1.இது எதன் கலவையுடன் கலந்து இந்த உணர்வினை வெளிப்படுத்துகின்றோமோ
2.இந்த உணர்வின் அலைகள் வெளிப்படுத்திய பின் - நாம் கருணைக் கிழங்கை உணவாக உட்கொண்டாலும்
3.அந்த உணர்வின் தன்மை சூரியன் காந்த சக்தி எடுத்து வைத்திருப்பதை நம் உணர்வின் அணுக்களாக்கப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து அதை நமக்குள் வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் அதை உணவாக உட்கொள்ளும் பொழுது அதனதன் உணர்வின் தன்மை கொண்டு உடலில்  அணுக்களாக உருவாகின்றது.

ஆனால் அதே சமயத்தில்
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தைப் பதிவு செய்கின்றோமோ
2.அந்தப் பதிவின் நிலை கொண்டு அந்த அணுக்கள் மாற்றம் அடைகின்றது.
3.இதை நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும் (முக்கியமானது).

இதைப் போல் நாம் எடுக்கும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் சூரியனின் காந்த சக்தி இங்கே எடுத்துக் கொள்கின்றது.

ஆனால் நாம் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியிலே செலுத்தப்படும் பொழுது அந்தக் காலையில் சூரிய உதயம் வரப்படும் பொழுது ஓசோன் திரை என்று விஷத்தின் தன்மை அடர்த்தியாகித் தன்னுடன் அந்த விஷத்தை (உடல் பெறும் உணர்வை) இணைத்துக் கொள்கின்றது.

சூரியனிலிருந்தும் மற்ற பிரபஞ்சங்களிலிருந்தும் வரக்கூடியதை நம் பூமி கவரும் நிலையில்
1.அது பூமியின் சுழற்சி வட்டத்தில் ஒரு அடர்த்தியாக ஆன பின் தான்
2.விஷத் தன்மைகள் உட்புகாது தடுக்கும் நிலை வருகின்றது.
3.அது தான் ஒசோன் திரை என்பது.

சூரியனிலிருந்து வரக்கூடியது “அல்ட்ரா வயலட்” - விஷத்தின் தன்மை கொண்டது. அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக் கதிர்கள் வெகு தூரத்தில் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது. நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத்தின் தன்மைகளைப் பிரிகின்றது.

பிரித்தாலும்… இந்த மோதலில் வெப்ப மின் அணு போன்று ஆகும் பொழுது ஈர்த்துத் தனக்குள் இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மை அடைகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வரும் போது
1.நம் பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியாக ஆன பின் (ஓசோன் திரை)
2.நம் பூமியில் ஜீவ அணுக்கள் மற்ற அனைத்தும் வாழும் தகுதி பெறுகின்றது
3.நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையும் நமக்குள் அடக்கச் சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்று தான் நாம் விண் செலுத்தும் ஆன்மாக்கள் பிரபஞ்சத்தை விட்டு வெளியிலே சென்ற பின் உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் ஓசோன் திரையுடன் அதனின் அடர்த்தியில் கலந்து விடுகின்றது.

இப்படி இந்த மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் மீண்டும் அடுத்த உடலைத் தான் இந்த உயிர் இங்கே உருவாக்கும்.

அதாவது…
1.இந்த உடலில் எத்தகைய உணர்வை எடுத்துக் கொண்டதோ
2.அந்த உணர்வுக்கொப்ப உடலைத் தேடிச் சென்று அந்த உணர்வின் தன்மை கொண்ட உடலாக உருவாக்கும்.