ஒருவர் இறந்து விட்டால் சாங்கிய சாஸ்திரப் பிரகாரம் உடலை சுட்டுக்
கருக்கிவிட்டு பின் சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைத்து விட்டால் மோட்சம்
அடைந்தார்…! என்று சொல்வார்கள்.
1.அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் எந்தெந்தக் குணங்களை அவர் எடுத்துக்
கொண்டாரோ
2.இந்த உணர்வுகள் அனைத்தும் அந்த உடலுடன் உண்டு.
3.ஆனால் இந்த உடலைக் கருக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து
4,அது அனைத்தையும் மீண்டும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து விடுகின்றது.
அதாவது இந்த உடலின் தசைகள் கரைந்தாலும் இந்த உணர்வின் தன்மையை மாற்றி விடுகின்றது
சூரியன். நம் பரமாத்மாவில் (காற்றிலே) இங்கே கலக்கின்றது.
இந்த உடலை விட்டு ஆன்மா போன பின்…. சுட்ட பின்…
1.இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள்
2.இந்த உடலை உருவாக்கிய அணுக்களின் இயக்கம் தான் இதற்குள் இழுத்துச்
சேர்க்கும் தன்மைகள்.
3.வெப்பத்தின் தன்மை கொண்டு இங்கே பிரிக்கப்படும் பொழுது
4.அதிலே சேர்த்துக் கொண்ட உணர்வின் உறைவிடமாக இருக்கின்றது. அந்த அணுக்களில்
(உணர்வின் ஒலிகளாக)
இப்பொழுது நாம் சொல்லால் சொல்கின்றோம். இந்த உணர்வுகள் எல்லாம் அதிலே
இருக்கும். அதே போல் அவர் மந்திர ஒலிகளைப் பதிவாக்கியிருந்தால் அதுவும் இருக்கும்.
இப்படி… இறந்த உடலைக் கருக்கிச் சாம்பலாக்கினாலும் இந்த உடலை உருவாக்கிய உணர்வின்
நிலைகள் அனைத்தையும் சூரியனின் காந்தப் புலன் அறிவு கவர்ந்து வைத்துக்
கொள்கின்றது.
பின் அது கவர்ந்த நிலைகள் அனைத்தும் அவர் சொன்ன அதே மந்திர ஒலிகளைச்
சொல்லப்படும் பொழுது இழுத்துக் கொண்டு வரும்.
எப்படி…?
ஏனென்றால் அவருடைய உணர்வின் தன்மை அங்கே சென்றது. அவர் அணிந்திருந்த ஆடையும்
அவர் நடந்து சென்ற பாத மண்ணும் அவர் தலை முடியும் இந்த மூன்றையும் எடுத்தால்…
அவருடைய உடலின் மணமும் பாத நிலைகளும் அதிலே இருக்கும்.
அவர் (இறந்தவர்) எந்தத் தெய்வத்தின் நிலைகள் கொண்டு பக்தி கொண்டு மந்திரங்களை
ஓதித் தனக்குள் வளர்த்துக் கொண்டாரோ இறந்த பின் மாந்திரீகம் செய்பவர்கள் அந்த
உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து அதை எடுத்துப் பில்லி சூனியம் ஏவல் போன்ற சில தவறான
வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
சாங்கியம் செய்து கரைத்து விட்டுக் கண ஹோமம் செய்து மோட்சத்திற்கு அனுப்பியதாகச்
சொல்வார்கள் ஒரு சாரர்.
அதே சாங்கியங்களைச் செய்து கரைத்த பின் விநாயகர் கோவிலில் கொண்டு போய்
மாவிளக்கை ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டால் மோட்ச தீபம் என்பார்கள் இன்னோரு சாரார்…!
1.இப்படி எல்லாம் சாங்கியங்களைச் செய்து வெளி வந்தாலும்
2.அந்த உணர்வுகள் எல்லாமே காற்றிலே தான் படர்ந்திருக்கும்.
3.அதை மாற்றும் வல்லமை இல்லை…!
அதை மாற்றி அமைக்க வேண்டும் என்றால்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க வேண்டும்
என்றால்… உயிருடன் ஒன்றிய உணர்வுகள் ஒளியாக மாறவேண்டும் என்றால்… என்ன செய்ய
வேண்டும்…?
அதிகாலை துருவ தியானத்தில் எவர் ஒருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
வலுவாக்கிக் கொள்கின்றாரோ… அதன் மூலம் அவர்கள் சார்புடையோரை உந்தித் தள்ளி விண் செலுத்த
முடியும்… சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.