ஒருவருக்கொருவர்
பிடிக்கவில்லை என்றால் உன் குடும்பம் நாசமாகப் போகும்…! என்று சொல்வார்கள். நீ முடமாகப்
போவாய்… உன் கண்கள் குருடாகும்… உனக்கு இப்படி எல்லாம் கெடுதல் ஆகும்…! என்று சாபமிடுவார்கள்.
அவர்களுக்கு
ஒன்றும் ஆவதில்லை. ஆனால்…
1.கர்ப்பமுற்ற
தாய் இதைக் கேட்டுக் கொண்டிருந்தால்
2.கருவிலிருக்கும்
அந்தச் சிசுவிற்கு உணர்வுகள் பட்டபின் அது பதிவாகின்றது.
3.கருவில்
இருக்கும் சிசுவின் தன்மை குருடாகிவிடுகின்றது.
4.கால்
முடமாகின்றது. விபரீத உருவம் கொண்ட குழந்தையாகப் பிறக்கின்றது,
இது
எல்லாம் மூதாதையரின் உணர்வுகள்…!
1.மனிதன்
என்ற வாழ்க்கையில் வரும் பொழுது
2.அந்த
உடல் ரீதியில் இரத்த நாளங்களில் கவர்ந்து
3.அது
தொடர்ந்து இதே மாதிரிச் சில குடும்பங்களில் பார்த்தால் இந்த மாதிரி இருக்கும்.
குழந்தைக்குப்
பன்னிரெண்டு வயதாகி விட்டால் அதற்கப்புறம் வளர்ச்சி இருக்காது. நரம்புகள் எல்லாம்
குன்றும்… அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் குறுகி நடக்க முடியாமல் போய் உயிரே
போய்விடும்…! இப்படி நரக வேதனைப்படுகின்றனர்.
ஆனால்
அந்தக் குழந்தைகள் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் இட்ட
சாபங்கள் இந்த நிலையைச் செய்கின்றது.
ஒரு
சமயம் இங்கே தபோவனத்திற்குச் சிலர் வந்தார்கள். எங்களுக்கு மூன்று குழந்தைகள்.
இந்த மூன்று குழந்தைகளுக்குமே பன்னிரெண்டு வயது ஆகி விட்டாலே கை கால் எல்லாம்
குறுகிக் கொண்டே போகிறது என்றார்கள்.
உங்கள்
வீட்டில் யாராவது இதற்கு முன்னாடி சாபம் இட்டார்களா..? என்று அவர்களிடம் நான்
(ஞானகுரு) விபரம் கேட்டேன். இல்லவே இல்லை…! என்றார்கள்.
பின்
வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு நன்றாகத் தெரிந்து கொண்டு வாருங்கள்..! என்று
சொன்னேன்.
அவர்கள்
குடும்பத்தில் முன்னாடி வாழ்ந்தவர்கள் அண்ணன் தம்பிக்குள் வெறுப்பான பின்
குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு குழியைத் தோண்டி இம்சித்து அதைப்
புதைத்திருக்கின்றார்கள்.
உயிருடன்
அப்படிச் செய்ததால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுகி வேதனைப்பட்டு இறந்தது. அடப்
பாவிகளா…! எனக்கு வந்த கதி உன் குடும்பத்திற்கும் உன் குழந்தைகளுக்கும் சாடும்…!
என்று சொன்னது.
அதன்
வழி அந்த வம்சத்தில் வந்த (பெண்) தாய் வகையில் சம்பந்தப்பட்டுப் போன குடும்பம்
எல்லாமே பாதிப்பானது.
பிறகு
நான் விபரத்தைச் சொன்னேன். இந்த மாதிரித்தான் உங்கள் வம்ச வழியில் இருக்கும்
என்றேன். அது எப்படிச் சாபமிட்டுப் போனதோ இந்த உனர்வுகள் தொடர்ந்து சார்புடைய தாய்
வழியில் வருகின்றது.
யார்
இங்கே குற்றம் செய்தது. பிறக்கும் குழந்தைகள் தவறு செய்யவில்லையே.
மனிதனாக
ஆன பின் தாய் கருவில் இருக்கும் பொழுது இதைப் போன்ற சாடல்கள் இருந்தால் அந்தக்
குழந்தையின் தாய் தந்தையர்களும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.
இன்று
பார்த்தால் வேறு வேறு குடும்பத்தில் தான் பெரும்பகுதி சம்பந்தம் செய்கின்றார்கள். இருந்தாலும்
தாய் வழியில் வந்தால் தந்தை வழியில் வந்தாலும் இந்த நிலை ஆகின்றது.
இப்படிப்பட்ட
விபரீதக் குழந்தைகள் வரப்படும் பொழுது அதனுடைய சார்புடைய மற்ற மக்களும் இதனை
நுகர்கின்றார்கள். ஏனென்றால் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் சூரியனின்
காந்தப் புலன் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது,
அதன்
வழி வரப்படும் பொழுது அனைவருக்குமே இத்தகைய பாதிப்பு ஆகின்றது. இப்படியும் பல
நிலைகள் மனித வாழ்க்கையில் வருகின்றது.
இதைத்
தடுக்க நாம் என்ன சக்தி வைத்திருக்கின்றோம்..!