யார்
நமக்குத் தீங்கு செய்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வு பெறவேண்டும் என்று அதை
வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அந்தத் தீங்கின் உணர்வை எடுக்காதீர்கள்.
ஏனென்றால்
இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகளைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அது உங்களுக்குள்
ஆழமாகப் பதிவாகின்றது.
பதிவு
செய்த உணர்வின் வலிமை கொண்டு அந்த மகரிஷிகளை நீங்கள் எண்ணும் பொழுது
1.எத்தகைய
தீமைகளோ பகைமைகளோ இருப்பினும்
2.இரக்கமற்றுக்
கொன்று குவிக்கும் உணர்வுடன் மற்றவர்கள் வந்தாலும்
3.ஒருவனைத்
தாக்கிக் கொன்றிட வேண்டும்…! என்ற உணர்வுகள் வருவதை
4.அந்த
அசுர குணங்களிலிருந்து நாம் அவசியம் தப்புதல் வேண்டும்.
அதற்காகத்தான்
நம் குருநாதர் காட்டிய அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவின்
நினைவை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
1.அந்தத்
துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஒன்றச் செய்யுங்கள்.
2.துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்தநாளங்களில் கலக்கட்டும்.
3.உங்கள்
உடலில் உள்ள பகைமை உணர்வுகள் அனைத்தும் அதனுடைய வலிமை ஒடுங்கட்டும்.
ஆகவே அருள்
ஒளியின் உணர்வை உங்களுக்குள் செலுத்துங்கள். அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள்
வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஞானிகள் வாழ்ந்த வாழ்க்கையை நீங்கள் பெறவேண்டும்.
உங்கள்
பார்வையில் இந்த நாட்டில் உள்ள பகைமைகள் அனைத்தும் நீங்க வேண்டும். மனிதன் என்ற தன்
நிலையை அடைந்து சகோதர உணர்வுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும்.
1.நீங்கள்
வெளி விடும் மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள
2.விஞ்ஞானத்தால்
வந்த அசுர உணர்வுகளை எல்லாம் அழிக்கட்டும்…!
3.அருள்
ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளரட்டும்.
விஞ்ஞானத்தின்
வளர்ச்சியில் அணுகுண்டுகளைத் தயார் செய்து அதை வெடிக்கச் செய்து மற்றதை அழிக்கச்
செய்கின்றான். அதே போல் அதை வைத்து மற்ற இயந்திரங்களையும் துரிதமாக இயக்கச் செய்கின்றான்.
அதாவது
குறைந்த எடை கொண்ட கதிரியக்கச் சக்திகளை வைத்து அதிகச் செலவில்லாதபடி இயக்கத்தின்
வேகத்தை அதிகமாகக் கூட்டி மற்ற சாதனங்களை இயக்கச் செய்கின்றான்.
அப்படி
இயக்கினாலும்…
1.இந்த கதிரியக்கங்கள்
கசிவாக்கப்படும் பொழுது இயக்க ஓட்டத்தை மிகவும் துரிதமாக்குகின்றது
2.மனிதனின்
ஆசைக்குள் அந்தக் கதிர்வீச்சுகளை நுகரப்படும் பொழுது
3.நம்முடைய
எண்ணங்கள் துரித நிலைகளில் இயக்கப்படுகின்றது
4.சிறிது தடைப்பட்டால்
வெடிக்கும் நிலையே வருகின்றது.
நம்
எண்ணங்கள் எதை உற்று நோக்குகின்றோமோ… சீராக வரவில்லை என்றால் அந்த உணர்வின் தன்மை
நமக்குள் சிதறுண்டு போகும் மனங்களாகத்தான் மாற்றுகின்றது.
ஒன்றின்
வீரியத் தன்மைகள் கொண்டு நுகரப்படும் பொழுது…
1.மற்றொன்று
நாம் எதிர்பார்க்கும் உணர்வுகள் அது துரித நிலையில் நடக்கவில்லை என்றால்
2.உணர்வின்
மோதலால் அது சிதறுண்டு நம் சிந்தனைகள் இழக்கப்படுகின்றது
3.நம்மைத் தவறு
செயபவனாக மாற்றுகின்றது…
4.இந்த
விஞ்ஞான அறிவால் வந்த நிலைகள் தான் இது…!
இதைப்
போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டுமா இல்லையா..?
ஆனால்… இதை
எல்லாம் நான் படித்துப் பேசவில்லை. அந்த உணர்வின் இயக்கத்தைக் குருநாதர் எனக்கு
நேரடியாக உணர்த்தியதை உங்களுக்கும் அப்படியே சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
இந்த உலகம் மிகவும் சுருங்கிக் கொண்டு வருகின்றது.
இத்தகையை சூழ்நிலையில் அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்திலேயே நாம் ஒன்றி வாழ
வேண்டும்.