இன்று பத்திரிக்கையைப் பார்த்தாலே பல நிகழ்ச்சிகளை நாம்
அறிய, நுகர நேர்கிறது. ஒரு
இடத்தில் விபத்து நடந்தது என்று படித்தபின் அந்த பயமான
உணர்வுகள் நமக்குள் பதிவாகிவிடுகிறது.
நமக்குள் உயர்ந்த
குணங்கள் இருந்தாலும், பய உணர்வுகள் கலந்தபின் நம்முடைய
நல்ல உணர்வலைகளைச் சரியாக இயக்கவிடுவதில்லை.
இதைப் போன்று ஒவ்வொரு நிமிடத்திலும் நம்மையறியாது நமக்குள்
பதியச் செய்த இந்த உணர்வுகள் நம்மை அறியாது இயக்குகிறது. ஒரு வயலிலே வித்தைப்
போட்டால் அதனின் சத்தை எடுத்துக் கவர்கிறது.
இயற்கையில் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட நிலைகள் அதனதன்
தன்மையில் அது அது வளர்வது போல் நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வின் எண்ண
அலைகளும், உணர்வின் வித்துக்களும், எண்ணங்களும்
காற்றிலே பரவியிருக்கும் தன் இனமான எண்ணத்தை எடுத்து
நமது ஆன்மாவாக உடலின் முன் பக்கமாக
நம் நெஞ்சுக்கு முன் கொண்டுவந்துவிடும்.
நெஞ்சுக்கு முன் ஒரு கடிகாரம் போன்று துடித்துக் கொண்டிருக்கும்.
அதை எல்லோரும் பார்க்கலாம், எல்லோருக்கும் இது உண்டு.
அந்தத் துடிப்பலையில் உள்ள காந்தம் நமக்கு முன் பரவலாகக்
குவித்தாலும் அது சீராக நம் மூக்குக்கு நேராகக்
கொண்டுவந்துவிடும்.
இதை நாம் சீராகப் பதிவு செய்தபின்
நம் உயிரிலே நெற்றியிலே உள்ள காந்தப்புலன் இழுக்கும்.
உள் புறமாக இழுத்து உயிருடன்
உராயச் செய்யும் பொழுதுதான் இந்த உணர்வலைகள் உடல் முழுவதும் படர்கிறது.
நமக்குள் நெஞ்சின் பாகம் இருக்கும் நடு மையமான குறுத்தெலும்பு
அந்தக் கடிகாரத் துடிப்பைப் போல இயக்கும். நம் உடலில் எத்தனை குணங்களைப் பதிவு
செய்திருக்கிறோமோ அதை அனைத்தும் இழுத்து இங்கே குவித்துக் கொடுக்கும்.
சாப அலைகள் அதிகமாகக் கலந்தால் இது ஆன்மாவில் குவிந்து ஒரு
பக்கத்தில் சேமித்துவிட்டால் அது எடுத்து இங்கிருந்து எடுத்துக் கொடுக்கும். இதற்கும் அதற்கும் தொடர்பு
இருக்கிறது.
அப்பொழுது நம் உயிரிலே உராயப்படும் பொழுது அந்த உணர்வலைகளை
இயக்கிக் காட்டுகிறது உயிர். அந்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் படர்ந்து தன் தன்
இனமான உணர்வுகளை இயக்கி நமக்குள் அந்த நிமிடம்
இந்த உடலை இயக்கும்.
அதன் வழிகளிலே தான் நம் சொல்லும் இருக்கும்,
அந்த உணர்ச்சியின் தன்மைகொண்டுதான் நம் உடலின் இயக்கம்.
அதற்குத்தகுந்த மாதிரி இந்த உடலில் வழி நடத்தும்
அதற்குத் தகுந்த மாதிரி நம் முன்னே சொல்லைச் சொல்லும்.
அந்த உணர்வுக்கொப்பத்தான் கண் பார்வையும் இருக்கும்.
எனக்கு இப்படி இருக்கிறதே என்ற நிலைகளில் கண்ணால் பார்த்து நல்லதை
நாம் நினைத்து எடுக்கும் திறனற்றுப் போய்விடுகிறது.
சாப அலைகள் இருப்பவரைப் பாருங்கள். எதையோ பறி கொடுத்தவரைப்
போலவே இருப்பார்கள்.
முன்னாடி ஒரு பொருள் இருந்தாலும் கூட அவர்களுக்குத் தெரியாது. சில நேரங்களில் நண்பனே தன் எதிரில் வந்தாலும் கூட அந்த நண்பனைக்
காணவிடாது.
“பாருடா.., நான் வந்திருக்கிறேன்
கொஞ்சம்கூட நம்மைக் கவனிக்கவில்லை பார்.., கொஞ்சம்கூட மரியாதை
இல்லை பார்” என்றுதான் நம்மை நினைக்க வைக்கும். அந்த அலைகள் தடுத்து நண்பனைப் பார்க்கவிடாது செய்யும்.
நண்பன் எண்ணும்பொழுது என்ன மனிதன்? வாங்க என்று கூப்பிடவில்லை. இவனைத் தேடி
வந்து விஷயம் சொல்லலாம் என்று வந்தேன், வா என்று கூப்பிடவில்லை
இவனிடம் நான் என்ன சொல்கிறது? என்ற நிலை ஆகிவிடும்.
ஆக நல்ல காரியத்தைப் பற்றிச் சிந்திக்கவேண்டும் என்று நண்பன்
சொல்ல வரும்போது இந்த சாப அலைகள் நண்பனைப் பகைமையூட்டும் ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து கண்களிலே அந்த அலைகள் பாயும்.
சில நேரங்களில் நீங்கள் பார்க்கலாம். கொஞ்சம் சோர்வோ, சஞ்சலமோ, வெறுப்போ இந்த மாதிரி உணர்வுகள் இருந்தால் உங்களுக்கு முன் நண்பர் இருந்தாலும்கூடத்
தெரியாது.
சாப அலைகள் உள் நின்று இத்தனை வேலைகளையும் செய்யும். அதே சமயத்தில் அன்றன்று வாழ்க்கையில் படும் வெறுப்பின் உணர்வுகளும்
இதுவும் அந்தச் சாப அலைகளுடன் சேர்ந்து இயக்கும்.
நஞ்சுக்குள் நல்ல பொருளை இட்டாலும் அதையும் தனக்குள் இணைத்து
நஞ்சின் செயலாகவே ஆக்கும். அதைப் போன்று சாப அலைகள் நம் வாழ்க்கையில் வரும்
எதிர்ப்பின் தன்மைகளை உருவாக்கி அந்த அலைகளையேதான் மீண்டும் உருவாக்கும்.
நம் நண்பனிடத்திலும் இதே வெறுப்பின் உணர்வுகளையே உருவாக்கும். அதே அலைகளைக் குவித்து நம் ஆன்மாவாக வரப்படும் பொழுது மன நோயையும்,
சஞ்சலத்தையும்தான் இது உருவாக்கிக் கொண்டிருக்கும்.
இது ஒவ்வொரு குடும்பத்திலேயும்
இது உண்டு. நாம் தவறு செய்யவில்லை. இதைப் போன்று இன்றைய
காலங்களில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது.
நல்லவர்களாக இருந்தாலும் சரி, அழகான
குழந்தையாக இருக்கும். சாப அலைகள் வரும்போது அந்த அலையின் தொடர்பில்
குழந்தை “பிட்ஸ்” வந்து துடித்துக் கொண்டிருக்கும்.
அதைப் பார்க்கும் தாய் தந்தையர், அவர்களைச் சார்ந்தோர் அனைவரும் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
செல்வம் இருக்கும்.
செல்வம் இருந்தாலும் மன நிம்மதி இருக்காது.
ஆக, நிம்மதியற்ற நிலையில் இந்த வேதனையான உணர்வுகள்
உடலிலே விளையும். விளைந்து நோயாகி இறந்தபின் அந்தச் செல்வத்தைக்
கூடக் காணமுடியாது.
செல்வத்தால் கண்ட சுகமும் அழிந்து வேதனையான உணர்வுகளை உடலுக்குள்
சேர்த்து உயிருடன் ஒன்றி விளைந்தபின் மனிதனல்லாத உயிரினமாகத்தான் அடுத்து பிறக்க நேரிடுகிறது.
இதை உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன். ஏனென்றால் யாரும் நாம் தவறு செய்யவில்லை.
சந்தர்ப்பத்தால் முந்தைய நிலைகள் இணைந்து நமக்குள் அது வழி தொடர்ந்து
வந்தது. அந்த உணர்வே நமக்குள் இன்றும் அந்த இயக்கத்தைத்
தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நாம் அந்த அருள் ஞானிகளின் துணை கொண்டு சாப அலைகளிலிருந்து விடுபடவேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள்
சேர்த்து தீய வினைகள், சாப வினைகள்,
பாவ வினைகள், பூர்வ ஜென்ம வினைகள் அனைத்திலும்
இருந்து நீங்கள் விடுபடுங்கள்.
என்றுமே உயிருடன் ஒன்றிய பேரானந்த பெருநிலைகள் பெற்று அந்த அருள் ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் நீங்கள் வாழ முடியும். அதற்குத்தான் இதை உபதேசித்தது.