ஒரு சமயம் நம் தியான வழி அன்பரின் குழந்தையை ஒரு வெறி
நாய் கழுத்திலே பிடித்துத் தூக்கிக் கொண்டு போகின்றது. அந்தப் பையன் பயப்படவேயில்லை.
ஆனால், பையனை நாய் தூக்கிக் கொண்டு போகிறது என்று அந்த
நாயைத் துரத்தி வந்திருக்கின்றார்கள். அதிலே ஒருவரைக் கடித்து சதையெல்லாம் பிய்த்துவிட்டது.
ஆனால், இந்தப் பையன் தைரியமாக இருக்கின்றான். பயப்படவேயில்லை.
“ஈஸ்வரா., குருதேவா.,” அதையேதான் சொல்லிக் கொண்டு வந்திருக்கின்றான். அந்த நாயோ வெறி
பிடித்த நாய்.
ஆக, அந்த எண்ணத்திலே வலு வரும் பொழுது அவனை ஒன்றும் பாதிக்கவில்லை.
ஆனால், குழந்தை பையன். ஒன்றும் தெரியாது.
சாமி சொன்னார் “ஈஸ்வரா., குருதேவா., ஈஸ்வரா., குருதேவா.,”
அதுதான் அவனுக்குத் தெரியும்.
அதைத் தான் அங்கே சொல்கின்றான்.
ஏனென்றால், அந்தக் குழந்தைப் பருவத்திலே அந்த உணர்வுகள் பதிந்துவிடுகின்றது.
ஆனால், பெரியவர்களாக இருக்கும் நாம் என்ன செய்கின்றோம்?
ஏதோதோ நினைக்கின்றோம், கொஞ்சம் பார்க்கின்றோம், ஒன்றும் ஆகவில்லையென்றால் சோர்வடைகின்றோம்.
ஆக சோர்வடையும்
தன்மையை எடுத்து, உடனே நமது வலுவை இழந்து விடுகின்றோம். இந்த மாதிரி
நிலைகள் எல்லாம் வருகின்றது.
இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான்
யாம் பல நிலைகளை உணர்த்தி, உங்களுக்குள் அந்த மன பலம் பெற உபதேசிக்கின்றோம்.