ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 9, 2014

குருநாதர் அருளால் நடந்த அற்புதங்கள், ஞானகுரு - 3

1. ஜவுளிக் கடைக்காரருக்கு நடந்தது
ஒரு ஜவுளிக் கடைக்காரர் அவர் என்ன செய்வார். அடித்தார் என்றால் “டமார்., டமார்., என்று தரையெல்லாம் பெயர்த்துக் கொண்டு போகும்.

“ஐய்யய்யோ.., என்னைக் காப்பாற்றுங்கள் என்று அவரை அறியாமலே கத்துவார்.

என்னிடம் கூப்பிட்டு வந்தார்கள்.

அவருடைய சம்சாரத்தைக் கூப்பிட்டு நீ இந்த மாதிரி வேண்டிக்கொள்ளம்மா என்று சொன்னவுடன், அதுவும் வேண்டிக் கொண்டது.

வேண்டிக் கொண்டவுடனே என்ன செய்கின்றார். சரியாகின்றது. கொஞ்ச நேரம்தான். மறுபடியும் வந்துவிட்டது. “டப் டப் என்று அடிக்கின்றார். என்னைக் காப்பாற்றுங்கள் என்கிறார்.

இந்த மாதிரி திரும்ப வந்தவுடன் நான் சில இதுகளைச் செய்தவுடன், “பளீர்., என்று ஓடி விட்டது. அங்கே அப்பொழுது ஜன்னல் கதவு போட்டிருக்கின்றார்கள்.

அவருக்குள் இருந்த ஆவி அது வெளியிலே செல்லும் பொழுது, அந்தக் ஜன்னல் கதவு பிய்த்துக்கொண்டு விழுந்துவிட்டது.

அவருக்கு சரியாகிவிட்டது.

ஏனென்றால், இன்னும் நிறையச் சொல்லலாம். நடந்த நிகழ்ச்சிகள் ஏராளம். கொஞ்சநஞ்சமல்ல.
2. ரவுடிக்கு நடந்தது
அங்கிருந்து மீண்டும் இங்கே ஊருக்கு வந்தேன்.

வந்ததும் இங்கே ஒரு ரவுடி என்ன செய்தான்? உன்னை என்ன செய்கிறேன் பார்? என்று கத்தியை எடுத்து வருகின்றான்.

ஆனால், கத்தி நின்று போனது. குத்த முடியவில்லை.

தானாக அவனுக்கு வயிற்று வலி வர ஆரம்பித்தது. வண்டியை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்கின்றார்கள். வலி நிற்கவில்லை, அவனால் தாங்க முடியவில்லை.

இந்த நிலை ஆனபிற்பாடு ஒன்றைச் சொல்லி இந்த நிலைகளைக் கற்றுக் கொள் என்று சொன்னேன்.
முதலில் உன் மனைவி குழந்தைகளைக் காப்பாற்று,
அர்த்தமில்லாமல் ரவுடித்தனம் செய்தாய் என்றால்
உனக்கு இந்த நிலை வரும் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

நன்றாக ஆனபின், அவனே கடைசியில் என்ன செய்தான்?

குமாரபாளையத்திற்கு வந்து விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டான். “சாமி, இந்த சாமிகள் என்று நோட்டீஸ் கொடுத்து, மைக் வைத்து announce பண்ண ஆரம்பித்துவிட்டான். நடந்த நிகழ்ச்சி.