ஆயுள் ஹோமம் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்று செய்வார்கள். பல பொருள்களை
யாகத் தீயில் போட்டு மந்திரங்களைச் சொல்வார்கள்.
அந்த உணர்வு கொண்டு நாம் இயங்கிக் கொண்டிருப்போம்.
ஆனால், ஹோமம் செய்து தருபவன் நாம் இறந்தால் இதே மந்திரத்தைச்
சொல்லி நம் ஆன்மாவைக் (நம்மை) கைவல்யப்படுத்திக் கொள்வான்.
அவன் ஆட்டிப்படைக்கும்
பொம்மையாக
(குட்டிச் சாத்தானாக) நம்மை மாற்றிவிடுவான்.
ஆகவே, இனிமேலாவது இந்த உபதேசத்தைப் படிப்பவர்கள் யாகங்கள்
செய்து பாவங்கள் செய்வதிலிருந்து நீங்கள் விடுபடுங்கள்.
ஏனென்றால், உண்மையான யாகத் தீ எது?
அருள் ஓளி என்ற தன்மை, அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை உங்களுக்குள் சேர்ப்பதே
உண்மையான யாகம்.
அந்த உயர்ந்த குணங்களின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும், அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எண்ணும் இந்த உணர்வை உயிர் அணுவாக மாற்றும்.
பின் வளர்ச்சி அடைய அடைய,
அது உணவுக்காக ஏங்கும்.
அந்த அருள் உணர்வை நுகரப்படும் பொழுதுதான்
ஞானத்தின் வழி வரும்.
ஆகவே, உங்கள் வாழ்க்கையில் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும்
உணர்வும் பெறவேண்டும் என்றால் நீங்கள் இதைச் செய்யுங்கள்.