இன்று எடுத்துக் கொண்டோம்
என்றால் பிள்ளைகளைக் கடத்திக்
கொண்டு அடிமை வேலைகளுக்கு அனுப்புகின்றார்கள்.
ஒரு சமயம் நான் வட நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது,
ஒருவர் எம்மைச் சந்தித்தார்.
அவர் கோர்ட்டில் வேலை பார்க்கின்றவர். என்னுடைய இரண்டு
பெண்கள் படிக்கச் சென்றவர்கள் காணாமல் போய்விட்டார்கள். ஒரு பெண் B.A. படித்துக் கொண்டிருக்கின்றது இன்னொரு பெண் M.A. படித்துக்கொண்டிருந்தது.
பள்ளிக்குச் சென்றவர்கள் திரும்ப வரவேயில்லை. காணாமல்
போய் இரண்டு மாதம் ஆகிவிட்டது என்று சொல்கின்றார்.
அப்பொழுது குருநாதர் சொன்ன நிலைகளைச் செய்யப்படும் பொழுது,
அங்கே தெரிகின்றது. அந்த இரண்டு பெண்களையும் கடத்திக் கொண்டு போகின்றார்கள்.
பம்பாயில் கப்பல் மூலமாக அரபு நாடுகளுக்குக் கடத்திக்
கொண்டு போவதற்காகத் தயார் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த இரு பெண்களையும் மயக்க
நிலையில் வைத்திருக்கின்றார்கள்.
அப்பொழுது நமது குருநாதர் சொன்னபடி நான் எண்ணினேன்.
உடனே அங்கே அவர்களுக்கு சுய நினைவு வருகின்றது. சுய நினைவு
வந்தவுடனே, “சடார்..,” என்று அந்தப் பெண்கள் போலீசில்
போய் attend ஆகிவிட்டனர்.
“எங்களைக் காப்பாற்றுங்கள்..,” என்று சொல்கின்றனர்.
இங்கே, இவர் என்னிடம்
சொல்லி மூன்று மணி நேரம்
இருக்கும்.
அதற்குள் அங்கே இருந்து தந்தி வருகின்றது.
பிறகு அங்கே இவர் போய் பெண்களைக் கூட்டிக் கொண்டு வந்தார்.
என்ன? என்று அந்தப் பெண்களைக் கேட்டால், ஒன்றுமே தெரியவில்லை.
சுய நினைவு வரும் போதுதான் கடத்திக் கொண்டு போகின்றார்கள்
என்று எங்களுக்குத் தெரிந்தது. இப்பொழுது நாங்கள் தப்பி வந்துவிட்டோம் என்றார்கள்.
இது நடந்த நிகழ்ச்சி.