ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 21, 2014

ஆத்ம சுத்தி தீமையை எப்படி நீக்குகின்றது?

"ஆத்மசுத்தி", "ஓம் ஈஸ்வரா" என்று உயிரை புருவ மத்தியில் எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள்பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிஅது ங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

நம் புலனறிவு கொண்டு முன்னால் பார்ப்பது, 
வெகு தூரத்தில் உள்ளதைக் கூர்ந்து கவனித்து,
அப்பொருளை நாம் காண முயற்சிக்கின்றோம்.
அந்தப் பொருளின் சத்தின் தன்மையை, நாம் அறிகின்றோம்.

நம் உணர்வுக்குள் அனைத்து நிலைகளிலும் கண் இணைக்கப்பட்டிருக்கின்றது, நாம் எதை நினைவுபடுத்துகின்றோமோஅந்த உணர்வின் நினைவலைகள் உயிரிலே பட்டுஅதன் வழிதான் தெரியும்.

அதைப்போல அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்  நாம் பெறவேண்டும், என்ற ஏக்க உணர்வுடன் கண்ணின் நினனைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் ங்கள் ஜீவாத்மா பெற வேண்டுமென்று, உள் நினைவிலே உங்களுக்குள் செலுத்தப்படும்போது,  அனைத்து அணுக்களிலும் அந்த சக்தி இணைகின்றது.

அப்படி இணையும் பொழுது, நமக்குள் நம்மையறியாமல் உட்புகுந்த,
அணுக்களுக்குள் சேரும் தீமைகளை
வேக வைத்து ஆவியாக மாற்றி
நம் உடலிலிருந்து அப்புறப்படுத்திவிடுகின்றது.

நம்  உடலில் தீமை செய்யும் அணுக்கள் உற்பத்தியாவதில்லை.  அதாவது தீய வினைகள் நமக்குள் வளர்வதில்லை. நம் எண்ணங்களும் மாசுபடுவதில்லை. ஆன்மா பரிசுத்தமடைகின்றது. ஆக, இது ஆத்ம சுத்தி.

இந்த ஆத்மசுத்தியை உங்கள் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள். நீங்கள் தனித்து நாள் முழுவதும் இருந்து பெறமுடியாத சக்தியை, ஒரு பத்து நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்றபின்அடுத்து,
உங்கள் வாழ்க்கையில் எதிர்ப்படும்,
நீங்கள் சந்திக்கும் துன்பங்களிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ள
இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதம் உங்களுக்குப் பயன்படும்.