ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2014

நாடி சாஸ்திரத்தின் உண்மை நிலை

அன்றைய அரசர்கள் சாகாக்கலை என்ற நிலையில் பல மந்திரங்களைச் செய்துள்ளார்கள். நாடி சாஸ்திரத்தை எழுதினார்கள். அந்த நாடியை வாசிக்கும் பொழுது,
அவன் எதைச் சொன்னானோ
வாசிப்பவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அவன் என்னென்ன மந்திரம் சொன்னானோ, அதையெல்லாம் இவன் வாசிப்பான். ஆனால், வாசிப்பவனுக்கு ஒன்றும் தெரியாது. அந்த எழுத்தே பண்டைய கால எழுத்தாக இருக்கும்.

அதை வாசித்து வந்தவருடைய நிலைகளையெல்லாம் இவன் சொல்வான். உனக்கு இந்த நேரம் வருகின்றது, நீ இதைப் பார், அதைப் பார் என்று சொல்வார்கள்.

நாடிகள் அது எத்தனையோ வகையான நாடிகள் இருக்கின்றது. ஆக, அந்த அரசன் இந்த மந்திரத்தைச் சொன்னவன், உடலுக்குள் வருகின்றான். அந்த அரசன் எப்படியெல்லாம் சுக போகங்களை அனுபவித்தானோ, அதே மாதிரி இந்த நாடி வாசிப்பவர்களுக்குள்ளும் அவனுடைய இச்சையை வளர்க்கும்.

நாடி வாசிப்பவர்களைப் பார்த்தால் மறைமுகமாகப் பல தவறுகளைச் செய்வார்கள். ஆக, இவன் எடுத்துக் கொண்ட ஆசையெல்லாம் பேயாசையாகத்தான் இருக்கும்.

அதிகமாக ஆசையை வளர்க்கக்கூடாது என்பதற்காக நாடியிலே சொல்லி இருக்கும். இத்தனாவது நிலைகள் வரும் பொழுது, இன்ன நிலைகளில் இவ்வாறு ஒருவர் வருவார் அவரிடத்தில் சொல்லிக் கொடுத்துவிடு என்று இருக்கும்.

ஆனால், இந்த நாடியை யாருக்குக் கொடுப்பது என்று சொந்தச் சொத்தாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதை வைத்துக் கொண்டு இப்படிச் செய்தால் மந்திரங்கள் வரும் என்று
அந்த நாடி சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட வழியில்தான்
பில்லி சூனியம் என்ற நிலைகளில்
சில ஆவியுடன் தொடர்பு கொண்டு
சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

நாடி சாஸ்திரத்தில், போன ஜென்மத்தில் இப்படி இருந்தான், இப்பொழுது இப்படி வந்தான் என்று எல்லாம் சொல்வார்கள். ஆனால். இதையெல்லாம் நாம் நிவர்த்தி செய்ய முடியாது.

அருள் ஞானிகள் பெற்ற உணர்வை நாம் பெற்றோம் என்றால்தான் இந்த நிலையிலிருந்து மீளமுடியும்.

ஏனென்றால், அரசன் வாழ்ந்த நிலைகள் நமக்குள் வந்தால் அது ஆட்சிபுரியும். இதே போலத்தான், அரசர்கள் பல மந்திர தந்திரங்கள் செய்தவர்கள்.

ஒரு உடலுக்குள் அந்த ஆன்மா வந்தவுடன்
பெரிய மந்திரவாதி என்றும்,
பெரிய யோகி என்றும்,
பெரிய சித்தர் என்றும் இப்படியெல்லாம் சிலர் சொல்வார்கள்.

நாடி வாசிப்போருடைய நிலை எத்தனையோ நிலைகள். ஆனால், தவறான நிலைகளைச் செய்வார்கள். கடைசி முடிவு என்ன ஆகின்றது? சாப அலை பிரகாரம் இந்த நாடியும் கடைசியில் பேசாது. இவனுக்கு நோய் என்ற நிலையே வரும்.

அதே போன்று இந்த நாடி சாஸ்திரம் படிப்போர் நிலைகளைப் பார்த்தால் தற்கொலை பண்ணுபவர்களும் உண்டு. அவன் குடும்பம் நோய்வாய்ப்பட்டு முடமாக மாறுவோரும் உண்டு.

ஆக, ஆசையின் உணர்வுகள் கொண்டு நமக்குள் எடுக்கப்படும் பொழுது, எதிர்மறையான உணர்வுகள் வந்து அங்கே மடிவோரும் உண்டு. இதுதான் அவர்களின் முடிவு.