பழனியில் நடந்த நிகழ்ச்சி
யாம் (ஞானகுரு) சித்தாகிய நேரத்தில், பழனியில் இருக்கும் பொழுது
இரண்டு பெண்கள் வந்தார்கள்.
அதாவது, அந்தப் பெண்களைத் திருமணத்திற்காகக் பெண் கேட்டு
வந்திருக்கின்றார்கள். பெண்ணைக்
கொடுக்க மாட்டோம் என்று சொன்னவுடன் ஏவல் பண்ணிவிட்டார்கள்.
உடலிலே ஈக்கியாகக் கோர்க்கின்றது. ஜோதிடக்காரரிடம் சென்று
கேட்டால், நீ பழனி மலையைச் சுற்றிவா, உனக்கு விமோசனம் கிடைக்கும். இத்தனை மணிக்குச்
சுற்று. இரவு பனிரெண்டு மணிக்குச் சுற்று என்கிறார்கள். பிறகு என்ன ஆயிற்று?
பழனி கோவிலுக்குப் பின்னால் அழகு நாச்சியம்மன் கோவிலுக்குச்
செல் என்கிறார்கள். உடலில் கோர்த்த ஈக்கியெல்லாம் எடுப்பார்கள். எடுத்தவுடன், மறுபடியும்
ஈக்கி கோர்த்துவிடுகின்றது. எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கின்றது.
இப்படியே அந்தப் பெண்கள் இருவரும் மலையைக் கிரி சுற்றிக்
கொண்டேயிருந்தார்கள்.
நம் குருநாதர் என்ன சொன்னார்? என்னை, அந்த அழகு நாச்சியம்மன்
கோவிலுக்குப் போகச் சொன்னார். அங்கு சென்று, அந்தப் பெண்கள் மேல் பாய்ந்த ஈக்கியெல்லாம்
நானே எடுத்தேன்.
எடுத்தபின், இந்த விபூதியைக் கொஞ்சம் வைத்துக் கொள்ளம்மா
என்று சொன்னேன். மூன்று தரம் கிரி சுற்றி வரச் சொன்னேன். கிரி சுற்றி வந்தவுடன் ஈக்கி
உடலில் பாயவில்லை.
பின், நேராக மலைக்குப் போய் அந்த துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற அந்த உணர்வை எடுத்து தியானம் செய்துவிட்டு வா என்று சொன்னேன்.
அப்புறம் வந்த பிற்பாடு நன்றாக ஆகிவிட்டது.
ஏனென்றால், சில குடும்பங்களில் தனது சுயநலங்களுக்காக வேண்டி
இப்படியெல்லாம் ஏவல் பண்ணி சில நிலைகளைச் செய்கின்றார்கள்.
இதையெல்லாம் என் அனுபவத்திலே தெரிந்து இதை உங்களுக்குச்
சொல்கின்றேன். இப்படி இந்த மனித வாழ்க்கையில் சாப்பாட்டுப் பிழைப்பிற்காக வேண்டி எத்தனையோ
வேலைகளைச் செய்கின்றார்கள்.
இதைப் போன்ற நிலைகளில்
இருந்தெல்லாம் நீங்கள் மீளவேண்டும்.