ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 26, 2020

இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து கொண்டே உயர் ஞான நிலையில் வளர்ச்சியைப் பெற முடியுமா...? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சகலத்தின் சக்தியையும் சகலமாக்கித் தன்னைத்தானே தான் உணரும் உயர் ஞான ஒளி சக்தியாய் உயரும் வழித் தொடருக்கு... எண்ணத்தின் உணர்வு பக்குவ முறை கொள்தல் வேண்டும்.

இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சியில் இருந்து விடுபட எண்ணத்தின் வலுவை முதலில் பக்குவ நிலைக்கு நாம் செயல் படுத்துதல் வேண்டும்.

வாழ்க்கையில் இருந்தே நம் தியான முறையை வழிப்படுத்தும் சமமான நற்குண செயல் வழியை எண்ணத்தின் உணர்வு செயல்படும் முறை பக்குவத்தில்
1.உடல் உணர்வில் உந்தப்படும் இல்லற உணர்வின் வழித் தொடர் உகந்ததா...?
2.அந்த உடல் உணர்வின் உந்தலைச் சமப்படுத்தும் பக்குவத்தில் அடக்கும் பக்குவம் உகந்தந்தா...?
3.உடல் இச்சையின் உணர்வின் உந்தலில் எப்படிச் செயல்படுவது...? என்ற வினா ஒவ்வொருவருக்கும் எழும்பலாம்.

அதாவது தாம்பத்ய வாழ்க்கை உகந்த நிலையா...? பிரம்மச்சர்ய நிலையில் உயர்வு நிலை பெற முடியுமா...? என்ற வினா எழும்பலாம்.

ஆரம்ப மனித உணர்வின் வழித்தொடரே தாவர நிலைக்கடுத்த வளர்ச்சி நிலை யாவையும் நீரிலிருந்து உயிர் ஆத்ம ஜீவன்கள் பிறப்பெடுத்து வந்தது.

அதன் பின் (கடல் வாழ்) தாவர இனங்களில் இருந்து வளரும் புழு பூச்சிகள் உடல் உணர்வின் ஆண் பெண் இனச் சேர்க்கையில் வளரும் நிலை இல்லாமல் தாவரங்களின் உஷ்ண அலை வெளிக் கக்கும் அமிலத்தின் பிசின் போன்ற வழுவழுப்பான அமிலத்தின் கெட்டித் தன்மையில் உயிர் அணுக்கள் சிறு புழு பூச்சிகள் உற்பத்தியாகும் நிலை இனச் சேர்க்கையின்றி வளரும் நிலை தான் உண்டு.

நீரிலிருந்து உயிரணு தோன்றும் வளர்ச்சியில் இனச் சேர்க்கையில் ஆண் பெண் என்ற நிலை அபூர்வமாகச் சில இனங்களுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் ஜீவப் பிராணிகள் பெரும்பகுதி இனச் சேர்க்கையின் தொடர்பு கொண்டுதான் இனப் பெருக்கம் செயல் கொள்கின்றது.

இவற்றின் தொடர்பில் மனித உணர்வில் பகுத்தறியும் ஞான வித்தின் முதல் நிலையில்
1.அன்பான உணர்வின் குணம் தான்
2.உந்தப் பெறும் மனித நிலையின் குணத்தின் “முதல் நிலை...”

தன் உணர்வில் உந்தும் இச்சையின் ஆசையில்... உதிரத்தில் பிறக்கும் உயிர் ஜீவனே அந்த அன்பின் உணர்வுத் தொடரில் பிறக்கும். அன்பின் ஆசை நிலை அதற்கடுத்த நிலை.

உதிரத்தில் அன்பின் உணர்வு கொண்டு பிறக்கும் சிசுத் தொடரில்
1.ஆசையும் பாசமும் தன் உணர்வின் இச்சையிலேயே பிறக்கா விட்டால்
2.எஜ்ஜீவ சக்தியையும் எந்த ரிஷிகளாலும்... ஆதிசக்தியாலுமே... வளர்க்க முடியாது.
3.அன்பின் எண்ண உணர்வில் ஆசையின் பாசமில்லை என்றால் மனிதன் என்ற நிலையே உருவாகாது.

உயர் ஞான நிலைக்கு மனித உணர்வின் எண்ணத்தைச் சம குணப்படுத்தக் கூடிய வழி முறைக்கு வயது முதிர்ந்தவர்கள் தான் செயல்படுத்த முடியுமா...? சிறுவர்களும் புதிதாக மணமான  தம்பதியர்களும் எப்படி அந்நிலை பெற முடியும்...? என்ற வினா எழும்பலாம்.

நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வின் ஆரம்ப உணர்வே... அன்பென்னும் ஆசையில்... பாசம் கொண்டு வளர வேண்டிய வழித் தொடரில் தான்... சத்திய நிலையின் ஜீவனை வளர்க்க முடியும்,

1.தம்பதியர்களின் உணர்வுகளில் உடல் உணர்வில் அன்பின் ஆசை கொண்டு பிறக்கும் சிசுவின் பாசம் எப்படி வளர்கின்றதோ
2.வாழ்க்கையில் உண்ண உறங்க உடுக்க எப்படி சம நிலை குணங்களைப் பக்குவப்படுத்தச் சொல்லிப் போதனைப்படுத்தினோமோ
3.மணமான சிறு வயது தம்பதியர்கள் அவர்களின் வம்சத்தின் கொழுந்து பிறக்கக்கூடிய காலத்திலேயே
4.எப்படி உடல் உணர்வில் சிசு பிறக்கின்றதோ அதைப் போல் ஆத்ம ஐக்கிய உணர்வு கொண்டு இரு எண்ணங்களும் ஒன்றுபோல் ஆகி
5.உயர்ந்த ஞானத்தின் உணர்வுடன் ரிஷிகளின் தொடர்பால் எடுக்கும் தியானத்தின் மூலம்
6.ஆத்ம ஐக்கிய உணர்வில் இரண்டு ஆத்மாக்களும் இணையக் கூடிய பக்குவ நிலை பெற்று
7.சாதாரண வாழ்க்கை நிலையில் ஆத்ம உயிருக்கு நம் அன்பின் ஆசையின் ஜீவன் தந்து பிறக்கும் குழந்தையைக் காட்டிலும்
8.ஆத்ம ஐக்கியம் கொண்டு ரிஷிகளின் தொடர்பில் எடுக்கும் ஜெபத் தொடர்பின் அலை ஈர்ப்பினால்
9.புது மணம் கொண்ட தம்பதியரின் ஈர்ப்பில் உயர்ந்த ஞான வித்தின் ஆத்ம உயிர்களுக்கு ஜீவன் தரும் பாக்கியத்தைப் பெற முடியும்.

இப்பூமியில் பிறப்பெடுத்து ஞானத்தின் வழியில் சித்து நிலையால் உயர்ந்த ரிஷிகளுக்குப் போக முடியாத பல நல்ல ஆத்மாக்கள் இன்றும் உள்ளன. அந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் ஜீவன் கிடைக்கச் செய்யலாம்.

நாமெடுக்கக்கூடிய (தாய் தந்தை) ஆத்ம ஐக்கியத்தால் எடுக்கும் உயர் குணத்தைக் கொண்டு அத்தகைய ஆத்மாக்களுக்கு... தான் பெற முடியாத ரிஷி சக்தியின் செயலைச் செயலாக்கி வழிதரக் கூடிய நிலையை...
1.ஒவ்வொரு தம்பதியரும் ஆத்ம ஐக்கியத்தில் நல்ல உணர்வின் செயல் வாழ்க்கையால்
2.இப்பூமியைப் பக்குவப்படுத்தக் கூடிய இல்லற உணர்வின் இச்சையின் ஆசைக்கு
3.உடல் உணர்வின் உந்தலைப் பக்குவப்படுத்தும் நிலை செயல்படுத்தலாம்.

வாழ்க்கை வழிமுறையில் துறவறம் என்ற பிரமச்சரிய முறையால் ஆண்டவனை அடைய முடியுமா...? உயர்ஞான வாழ்க்கைக்கு எம்முறை உகந்தது...? என்ற வினா எழும்பலாம்.

உணர்வின் எண்ண குணத்தைச் சமப்படுத்தும் பக்குவத்தால்... ஒவ்வொரு நாளும் இப்பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து ரிஷிகளின் எண்ணத்துடனும்... விண்ணின் ஆற்றலைப் பெறும் எண்ணத்துடனும்
1.எண்ணத்தின் உணர்வைத் தினசரி எடுக்கக்கூடிய தியான முறையில்
2.உணவின் இன்பம் அனைத்தும் ஏகாந்தத்தின் இன்பத்தை உணரும் பக்குவ இன்பத்தில்
3.இனிமை சுரக்கும் அன்பின் ஆசை உணர்வு கொண்டு பெறப்படும் பக்குவத்தில் ஆத்ம ஒளியே ஒளிரும் நிலை பெற்றுவிட்டால்
4.உடல் உணர்வின் இச்சை எச்சுவையையும் தனித்து எடுக்கக்கூடிய ஏக்கத்தின் உணவிற்கு
5.நம் எண்ணத்தின் உணர்வே செல்லாது (இதை அனுபவத்தில் பார்க்கலாம்).

ஏகாந்தத்தின் இன்பத்தை நுகரும் பக்குவத்தை... ஆத்ம ஐக்கியத் தொடர்பு கொண்டு... இரண்டு ஆத்மாக்களுக்கும் ஒரே எண்ணத்தின் வழிப்படுத்தும் வழி முறையில் கிடைக்கும் ஆத்ம ஐக்கிய ஒளியால்... எச்சிருஷ்டியையும் சிருஷ்டிக்கவல்ல தன்மையைப் பெறலாம்.

ஆனால் இரண்டு எண்ணங்களின் குண நிலை மாற்றப்பட்டு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ரிஷி சக்தியின் தொடர்பில் அதைச் சீர்படுத்தும் பக்குவ நிலையாக ஜெப ஈர்ப்பில்
1.ஒருவர் மேல் ஒருவர் எண்ணத்தைச் செலுத்தி
2.ஆத்ம ஐக்கிய உயர் ஞானம் பெற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டே
3.இரு நிலையையும் ஒரு நிலையாகக்கூடிய தன்மைக்கு
4.நிச்சயம் செயல்படுத்திட முடியும்.

May 25, 2020

உயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்


“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…' என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் அவரவர்கள் உயிரை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும்.

நமது குருநாதர் பெயரும் ஈஸ்வரன் தான்…! நம் உயிருக்குப் பெயரும் ஈஸ்வரன் தான்…!

நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் அணுக்கருக்களாக உருவாக்குகின்றது. கருவான பின் உருப் பெறுகின்றது. உருப் பெறச் செய்கின்றது.

1.நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ
2.அவை அனைத்தையும் கருவாக்கி நம் இரத்த நாளங்களிலே மிதக்க விடுகின்றது. (1)
3.அதே சமயத்தில் நாம் எண்ணும் உணர்வுகளை ஊழ் வினை என்ற வித்தாக எலும்பினுள் அது பதிவாக்கி விடுகின்றது. (2)

இது எல்லாம் நம் உயிரின் வேலைகள்.

இப்போது மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றி இங்கே பேசும்போது நீங்கள் கூர்மையாகப் பார்த்து இந்தப் பேச்சின் உணர்வை நுகர்ந்தறியும் போது… அந்த உணர்வின் செயலாக உணர முடிகின்றது. உணரும் தன்மையை கருவாக உருவாக்கி… இரத்தத்தில் அது மிதக்க விடுகின்றது.

1.நாம் எக்குணத்தின் தன்மை பெற்றோமோ
2.அக்கருவின் தன்மை அக்குணத்தை உருவாக்கும் அணுவாகத்தான் அது வெளிப்படுகின்றது.

அதே சமயத்தில் கூர்மையாகப் பார்த்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்பினுள் பதிவாகி விடுகின்றது.

ஏனென்றால் முதலில் வித்தை ஊன்றினால் தான் வித்து தனது சத்தைக் கவர்ந்து… அது இலையையும் தனது மலரையும் தன் விதையையும் அது உருவாக்கும்.

இதைப் போன்று நாம் எதைக் கூர்மையாக உற்று நோக்கி அந்த உணர்வினைப் பெற வேண்டுமென்று ஏங்குகின்றோமோ அவை நம் எலும்பினுள் உள்ள ஊன்களில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்படுகின்றது. (மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்)

நாம் எக்குணத்தின் தன்மையை நுகருகின்றோமோ… அந்த உணர்வுகள் நுகரப்பட்டு
1.நம்மை அறியச் செய்கின்றன... உணரச் செய்கின்றன… உணர்த்துகின்றன….
2.இந்த மூன்று வேலையும் செய்கின்றன.

உணர்த்தினாலும் இரத்தத்தில் அது கருவாக மாற்றி விடுகின்றது... ஒரு முட்டையாக…! அவ்வாறு கருவாக உருவாகி விட்டால் நம் இரத்த நாளங்களிலே மிதக்கச் செய்கிறது.

நாம் எண்ணக்கூடியதை ஓ…! என்று பிரணவமாக்கி (ஜீவன் பெறச் செய்து) நாம் எண்ணிய உணர்வை ஓ… ம்… என்று ஜீவ அணுவாக நம் உடலாக இணைத்து விடுகின்றது உயிர். இது தான் ஓ…ம் ஈஸ்வரா.

நாம் எண்ணுவது அனைத்தையும் நம் உடலுக்குள் உருவாகி விட்டால் அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று எண்ணும் போதெல்லாம் அல்லது சொல்லும் போதெல்லாம் அவரவர் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும்.

அவரவர்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் இந்த உயிரே குருவாக இருக்கின்றது.

உயர்ந்த ஞானத்தின் வழிகளில் இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.நமது குருநாதர் “ஈஸ்வரர்…” அவர் அவருக்குள் உருவாக்கிய உணர்வை
2.எமக்குள் (ஞானகுரு) ஓதப்பட்டு அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
3.அதே உணர்வை மீண்டும் உங்களில் ஓதப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் உங்களுக்குள் அந்த உங்கள் உயிரான ஈசனிலே பட்டு ஜீவன் பெற்று
5.நம் குரு ஈஸ்வரரால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வும் இரண்டும் கலந்து ஒன்றாகி
6.அவர் உருவாக்கிய அருள் ஞானத்தை இங்கே ஈசனாக உருவாக்கும் செயலாக உருப்பெறுகின்றது.

ஆகையினால் தான் ஓ...ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரையும்… உயர்ந்த ஞானத்தை ஊட்டும் அந்த உணர்வின் கருவாக உருவாகும் அச்சக்தியை ஈசனாகவும்… மதித்தல் வேண்டும்.

அப்படி மதித்து நமது குரு காட்டிய அவருள் விளைய வைத்த உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வை நமக்குள் உருவாக்கும். குரு பெற்ற சக்தியை குரு அடைந்த ஒளி நிலையை நாமும் பெறலாம்.

May 24, 2020

“உயிர்…” ஞான வழியை… அறியக்கூடிய நிலை மனிதனுக்கு மட்டும் தான் உண்டு என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.ஆதியின்… படைப்பின் கடவுள்… இறைவன்… தெய்வம் என்ற தொடரில்…
2.மனித ஒளி சரீரத்தின் ஒளித் தன்மை கொண்டு…
3.அவ்வொளியின் நாத உயர்வில் இறை நிலை பெற்ற மனிதன் “தெய்வத் தன்மை பெறுகின்றான்…”

பூமிக்கும்… பூமியில் வளரும் சகல ஜீவராசிகளும் ஒளித் தன்மையின் நிலை பெற்றிருந்தாலும்… ஒவ்வொன்றின் தொடர்பலையில் வலுக் கொண்ட ஒளி நிலை பெற்று… ஒளி சக்தியை வளர்க்கும்
1.உயிர் ஞான வழியை அறியக்கூடிய நிலை
2.மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

குயில் அழகாக… இனிமையாக… அதனுடைய குரல் ஒலியை எழுப்பினாலும்… மனிதனின் எண்ணத்தின் உணர்வு ஞானம் அதற்கு இல்லை.

மனித உணர்வுடன் ஒட்டி… ஒன்றின் தொடரில் வளர்ச்சியின் நிலை பெருக்கத் தொடருக்கு… ஞானத்தை உயர்த்தித் தன் பகுத்தறிவைக் கொண்டு “பல நிலைகளை மாற்றியமைக்கும்” செயல் மனிதனுக்குத் தான் உண்டு.

ஒலியின் நாதத்தை உணர்வின் எண்ண ஊட்டத்தில் பகுத்தறியும் ஞானத்தால் மனிதன் இச்சரீர உயர்வை எண்ணி… இவ்வுணர்வால் இறை சக்தியின் உன்னத நிலையான இவ்வுயிர் ஆத்மாவை… இறை குணத்தை… உணர்வின் எண்ண ஞானத்தால் பகுத்தறியும் செயலைக் கொண்டு இவ்வுடலையே இறையாக்கி… இறைவன் படைப்பில் இறை சக்தியை எடுக்கக்கூடிய ஒலி நாதத்தைத் தன் ஆத்ம உயிருக்காக இறை உணர்வு பெற்றுத் “தெய்வ நிலை பெறும் சத்திய நிலையை…” மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதன் இன்று எடுத்துள்ள உடல் பிம்ப வாழ்க்கைக்குகந்த பேராசைப் பிடிப்பையே தெய்வ நிலை பெறக்கூடிய பேராசையாய் உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.

ஒளியின் ஒளிப் பெருக்கை பெருக்கவல்ல தொடரைப் பூமியில் படைத்த
1.ரிஷிகளின் சக்திக்கு ஒளி கூட்டும் ஒளி நிலை பெற
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஒலி கொண்டு
3.நம்முள் உள்ள இருளகற்றி ஒளி நிலையை நாம் பெற்றோமானால்
4.ஒளி கொண்டு மற்ற இருளையும் அகற்றும் சித்தை
5.நம் சித்தத்தின் உணர்வால் ஒவ்வொருவரும் பெறலாம்.

இச்சரீர அமைப்பைச் சிருஷ்டிக்கவல்ல சித்து சக்தியையே… இக்காற்றலையில் கலந்துள்ள சகல சத்திலிருந்து உருவை உருவாக்கும் சக்தியைப் பிரித்தெடுத்துச் செயலாக்கும் முறையை உயர் ஞானி அன்றைய தன் ஞானத்தால் செயல்படுத்திக் காட்டினான்.

ஆனால் இன்றைய விஞ்ஞானி தன்னைத்தான் தான் நம்பாமல் “இயந்திரங்களின் இயக்க ஒலி சக்தி கொண்டு தான்” விஞ்ஞானத்தில் சாதிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளான்.

பல முன்னேற்றங்கள் விஞ்ஞானத்தால் இன்று வளர்ந்திருந்தாலும் தன் ஆத்ம உயிருக்குக் கூட்டக் கூடிய ஒளியின் உயர்வைக் கூட்டாததால் அழிக்கும் நிலைக்குத் தன் உயிர் ஆத்மாவை மங்கச் செய்யும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

அன்று ஞானிகள் காட்டிய உண்மைகளை எல்லாம்… ஞானிகள் தொடர்பால் இன்றும் எல்லோராலும் பெற முடியும்.

எண்ணத்தின் உணர்வை மனிதனுக்கு மனிதன்… தான்… எவ் ஒலி இறை உணர்வைப் பெற்று இச்சரீர உணர்வால் செயல்படுகின்றானோ அதே தொடர்தான் தன்னை ஒத்த மனித உணர்விலும் உள்ளதை அறிந்து கொண்டால்
1.தன் ஆத்ம பலத்தின் உயர்வைக் கூட்டிக் கொள்ளக் கூடிய உரம்
2.மனித உணர்வுடன் ஒட்டிய தொடர்பால்
3.பிறரிடம் இருந்து எதிர்படும் மூச்சலைகள்
4.நல் அலையின் உணர்வு கொண்டு பெறப்படும் தொடர்பால்
5.மனித உணர்வின் ஆத்ம உயிர் ஒலித் தன்மையின் வலு நிலையை
6.சம குணத்தின் அறுகுண ஈர்ப்பால் உயர்ந்த ஒளி ஞானியாகலாம்.

அதாவது… மனித உணர்வின் எண்ண வேட்கையின் சமைப்பின் ஒளி நிலை கொண்டு
1.ஒருவரின் மேல் உயர்ந்த குணத்தைப் பலரும் செலுத்தச் செலுத்த
2.அவ்வுரத்தின் உணர்வால் மனிதன் தெய்வமாகும் நிலையை
3.அன்றைய ஞானி உணர்ந்ததால் தான் அன்பையே தெய்வமாகக் காட்டினான்.

உணர்வுகள் உந்தப்பட்டாலும் அதைச் சமமாக்கும் பக்குவத்தை எவனொருவன் செயல்படுத்தி.. செயல் வழியில் உரத்தைப் பெறுகின்றானோ… அன்றே தெய்வ நிலை கொண்ட ஒளித் தன்மையில் செயல் கொள்ள முடியும்.

இக்காற்றலையின் சுழற்சியில்… மனித உணர்வில் பல உணர்வின் வேட்கை அலைக்கு மத்தியில்… “தன் ஞானத்தை உயர்வாக்க… உயர்ந்த ரிஷி சக்திகளின் எண்ண ஜெபத்தால்… உயர் காந்த மின் ஒளியின் தியானத்தைக் கொண்டு… மனிதன் தன்னைத் தானே தான் உணர்ந்து… தெய்வ நிலை பெறும் வழி நிலையை… அமைத்துக் கொள்ளல் வேண்டும்…”

உலகையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் உருவான விதம்


1.அணு குண்டும் ஹைட்ரஜன் குண்டும் போய்…
2.மனிதனுக்கு மனிதன் தீவிரவாதம் என்ற நிலைகளும் போய்
3.அவைகளிலிருந்து வந்த விஷத் தன்மைகள் கலந்து மற்ற விஷப் பூச்சிகளில் பட்டு அது இறந்து
4.விஷக் கிருமிகளாக மாறி மனிதனைக் கொல்லும் தன்மைக்கு இன்று வந்து விட்டது.

அதே சமயத்தில் நாம் சுவாசித்த இந்த உணர்வுகளோ நம் உடலுக்குள் போய் நல்ல அணுக்களை எல்லாம் மாற்றி
1.விஷ அணுக்களாக உருவாக்கி நமக்குள் நோயும்
2.நம் உடலிலிருந்து வரக்கூடியது நம்மைச் சார்புடையோர்களுக்கும் பாய்ந்து
3.அவர்களுக்கும் இந்த நோய்கள் வந்துவிடுகின்றது.

உலகம் முழுவதும் இப்படிப் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று நம் உடலுக்குள் நாம் இதைப் பெருக்கி கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பத்திரிக்கை வாயிலாகவோ டி.வியின் நிலைகளாகவோ உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை பதிவாகிக் கொண்டே உள்ளது.

அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த விஷத்தின் தன்மையை உடலில் வளர்த்து நமக்குள் விஷக் கிருமிகளைத் தான் உருவாக்குகின்றோம். அதனா நமக்குள் கடும் நோய்களே வந்து விடுகின்றது.

புதுப் புது நோய்கள் வரக் காரணமே…. இதைப் போன்று கேட்ட உணர்வை நுகர்ந்து… பதிவாக்கி… மீண்டும் அதையே நுகரும் நிலை ஆகி… அது நம் இரத்த நாளங்களிலே விஷக் கிருமிகளாக மாறுகின்றது.

இதன் உணர்வைச் சொல்லாகவோ… செயலாகவோ… நம் பார்வையில் பார்க்கப்படும்போது நமக்குள்ளும்… நம்மை சார்புடையோர் உடல்களிலும்… பாய்ச்ச முடிகின்றது.

இப்படி விஷத்தின் தன்மை கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரான ஈசனைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.

அவன் தான் (உயிர்) நம்மை இந்த உடலை உருவாக்கியவன் என்றும் இந்த மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைக் காக்க
1.ஞானியர் கண்ட உண்மையின் உணர்வை இங்கே உபதேச வாயிலாகப் பதிவு செய்வதை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.விஷக் கிருமிகளை ஒடுக்கி உங்கள் உடலுக்குள் அறியாத சேர்ந்த தீமைகளைத் தூய்மையாக்கிப் பழக வேண்டும்.

தங்கத்திற்குள் செம்பும் வெள்ளியும் வைத்து ஆபரணங்கள் செய்தாலும் அவைகளும் அதிலே இரண்டறக் கலந்து விடுகின்றது. மீண்டும் நகை செய்ய வேண்டும் என்றால் அவைகளைப் பிரிக்க நாம் திரவத்தை ஊற்றித் தங்கத்தைச் சுத்தமாக்குகின்றோம்.

இதைப் போலத்தான் எல்லாவற்றையும் ஒளியாக மாற்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால்… உடலிலுள்ள உறுப்புகளில் அதை அடிக்கடி செலுத்தப்படும்போது
1.விஷக் கிருமிகள் காற்றுடன் வந்து நம்முடன் கலந்திருந்தாலும்
2.அது பலவீனமாகி நல்ல உணர்வின் தன்மையாக மாற்றிவிடும்.

ஆனால்  நோய்களையும் கிருமிகளையும் அகற்ற விஞ்ஞான அறிவு கொண்டு உடலில் உள்ள இரத்தங்களில் மருந்துகளைச் செலுத்தப்படுபோது உடல் முழுவதும் பரவி தீமையின் உணர்வை மாற்றுவது போல மாற்றினாலும்
1,கடுமையான மருந்துகளைக் கொடுக்கப்படும் போது
2.உடலில் உள்ள கிட்னிக்கு வரப்படும்போது அதைப் பலவீனப்படுத்தி
3.மறுபடியும் வேறொரு நோய் வருகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முறைப்படி நீங்கள் செயல்படுத்தும் போது உங்களுக்குள் வந்த தீமைகளையும் நோய்களையும் நீக்கும்... நம் கிட்னியையும் வலுவாக்கும்.

வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும்…? எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்ற நிலைகளையும் நாம் பெற முடியும்.

ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான். இருந்தாலும்  சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வால் வேதனைப்படுவதும் கவலைப்படுவதும் வெறுப்படைவதும் கோபப்படுவதும் தற்கொலை பண்ணுவதும் இந்த மாதிரி நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

ஆக மனிதனின் ஆசைகள் நிறைவேறவில்லை என்றால்…
1.நல்லது செய்து நல்லதைப் பழக்கப்பட்ட மனிதன்…
2.நல்லது செய்தே நொந்து போன மனிதன்
3.இது என்ன வாழ்க்கை…? என்று பேய் மனமாகி
4.இன்னொரு உடலுக்குள் சென்று அதே ஆசையின் உணர்வுகளாகி அவனையும் வீழ்த்தி
5.அதிக வேதனையை உருவாக்கிக் கொண்டு அடுத்து மனிதனல்லாத பிறவிக்கே போய் விடுகின்றது.

இது போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு அருள் உணர்வு பெற்று அருள் வாழ்க்கையில் நீங்கள் வாழ எமது ஆசிகள் (ஞானகுரு) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

குரு அருள் பெற்று… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… சந்தர்ப்பத்தால் அறியாது சேரும் தீய வினைகளை நீக்கி… அருள் உணர்வைப் பெருக்கி… உடல் நலம் பெற்று மன பலம் பெற்று… இந்த வாழ்க்கையில் அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்து… பிறவியில்லா நிலை அடையும் அந்த அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும்.

குடும்பத்தில் பண்பும் பாசமும் பரிவும் வளர்ந்து… தொழிலில் அரவணைத்து அன்புடன் வாழும் அருள் சக்தி பெற்று… தெளிந்த மனமும் மகிழ்ந்த உணர்வும் பெற்று… அருள்வாழ்க்கை வாழ்ந்து பேரின்ப பெருவாழ்வு பெற
1.இங்கே உபதேசித்த உணர்வுகள் உள் நின்று உங்களுக்கு நல்வழி காட்டி
2.அருள்வழி வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள்சக்தி பெற
3.எமது அருளும் குரு அருளும் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்.

May 23, 2020

நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக வளரக்கூடிய சந்தர்ப்பம் எது...?


மெய் ஞானியின் அருள் உணர்வை செவி வழியாக உங்களுக்குள் ஈர்க்கச் செய்து அந்த மெய் ஒளி பெறும் சந்தர்ப்பத்தை இந்த உபதேச வாயிலாக உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்திக் கொண்டு
1.நாம் மெய் ஒளி பெறுவேன்...
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவேன்...
3.நான் அழியா ஒளி நிலை பெறுவேன்...
4.என் மூச்சும் பேச்சும் இருளை மாய்த்து ஒளியாகக் கூட்டும் அலைகளாகப் பெறுவேன்...! என்ற நிலைக்கு வளர வேண்டும்

தன்னம்பிக்கையுடன் நீங்கள் வளர வேண்டுமென்ற அந்த ஆசையில் தான் இதை உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு). ஒவ்வொரு நிமிடமும் நமது குருநாதர் அருள் ஒளி கொண்டு அவர் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று அதை நீங்கள் பெறுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் சொல்வது போல “என்னத்த...!” என்று சோர்வை ஊட்டி கொடுக்கும் நல்ல உணர்வை அழித்துவிடாதீர்கள்.

இந்த மனித வாழ்க்கையில் வந்த இருளை அகற்றிவிட்டு நிச்சயம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களைச் சந்திந்தாலும்...
1.அந்தத் துன்பம் வரும் நேரம் தான்
2.மெய் ஒளியின் உணர்வைக் கூட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.

எப்பொழுது துன்பம் உங்களைத் தாக்குகின்றதோ அப்பொழுது ஈஸ்வரா........! என்று உயிருடன் தொடர்பு கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெற வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
3.இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்தும் போது
4.நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டவுடனே அதில் உள்ள விஷத்தை மாய்ப்பது போல்
5.துன்பத்தை ஊட்டும் உணர்வுகளை அது ஒடுக்கி விடுகின்றது.

பாலுக்குள் விஷத்தைப் போட்டால் அதைக் குடிப்போரை மயங்கச் செய்கின்றது. மகிழ்ச்சியான நிலைகளில் நாம் இருக்கும்போது வேதனைப்படும் நிகழ்ச்சிகள் நடந்தால் அது நம்மைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது... நல்லதைச் சிந்திக்கும் செயலை இழந்துவிடுகின்றோம்.

ஆனால் நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டவுடன் விஷத்தின் தன்மை மாய்ந்து... நெருப்பின் சுடர் பெருகி... ஏகமாக அங்கே ஒளியாகக் காண முடிகின்றது.

அதைப் போன்று தான் எத்தகைய துன்பம் வந்தாலும் அந்த விஷத்தின் தன்மையை அந்த மெய் ஞானியின் அருள் ஒளி கொண்டு... அந்த நெருப்பான சக்தியை நமக்குள் கூட்டும்போது...
1.அந்த விஷத்தின் தன்மை மாய்ந்து
2.நம் எண்ணங்கள் தெளிவாகி சிந்திக்கும் நிலை பெருகி
3.மறைந்த பொருளை அறிந்துணர்ந்திடும் உணர்வின் ஆற்றலைப் பெருக்கவும் இது உதவும்.

ஆகவே வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை மறந்து அந்த மெய் ஞானியின் அருளைப் பெறுவோம். அந்த அருள் ஒளியாலே நம் சொல்லும் செயலும் நம் பேச்சும் மூச்சும் உலகிற்கு ஒளிச் சுடராக்கும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்படிப்பட்ட உறுதியான நிலைகளை நீங்கள் பெறுவதற்கு
1.எந்த மகரிஷிகள் அந்த ஆற்றலை அவர்களுக்குள் விளைய வைத்தார்களோ
2.அந்த உணர்வின் சக்திகளை எல்லாம் உங்களுக்குள் அந்த சிலிகன்களாகப் பதிவு செய்திருக்கின்றோம்.
3.அதை உங்களுக்குள் கூட்டிப் பெருக்குவது இனி உங்கள் கையில் தான் இருக்கின்றது.

நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. அதை நான் (ஞானகுரு) பதிவு செய்கின்றேன். என் மூச்சும் பேச்சும் உலக நன்மை பெற வேண்டுமென்று எண்ணத்தைச் செலுத்தி அதையே உங்களிடம் பரப்புகின்றேன்.

அதே போல் நீங்களும் எடுத்து உங்கள் உடலுக்குள்  பெருக்கும்போது உங்கள் மூச்சின் நிலைகள் பிறரை நன்மை பெறச் செய்யும் சக்தியாக மலரத் தொடங்குகின்றது.

குருநாதர் காட்டிய அருள்வழிப்படி இதைப் பெறுவோம்...! விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்...! என்று உறுதி கொள்ளுங்கள்.
1.உடலை விட்டு எப்போது சென்றாலும் அந்த மகரிஷிகளின் ஒளி அலைகளுடன் கலந்து
2.ஒளியுடன் ஒளியாக நாம் பேரொளியாகக் கலப்போம்.

சாதாரண வாழ்க்கையிலிருந்தே மெய் ஞானத்தைப் பெற்ற ஞான ரிஷிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.இச்சரீர உணர்வில் பெறும் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும்
2.அதிலே வரும் அந்தத் துன்ப உணர்விலிருந்து மீளும் நிலை எப்படி...? என்று அறிந்து
3.தன் வாழ்க்கையில் மோதப்பட்ட அத்தகைய சம்பவங்களினால் தான் சகல ஞானிகளும் மகரிஷிகளும் உருவானார்கள்.

வால்மீகியார் வேட்டையாடிப் புசிக்கும் வேடுவ குலத்தில் பிறந்து வேட்டை ஆடச் சென்ற காலத்தில் ஜோடியாக இருந்த இரண்டு புறாக்களில் ஒன்றை அம்பெய்து வீழ்த்துகின்றார்.

வீழ்ந்த புறா வேதனையில் துடிப்பதையும் வேதனையில் துடிக்கும் புறாவின் நிலையை அதனுடைய ஜோடிப் புறா பார்த்துத் துடிதுடிக்கின்றது.

பாச உணர்வால் துடிதுடிக்கும் புறாவின் வேதனையை தன் எண்ணத்தின் உணர்வில் உற்றுப் பார்த்த வேடனான வால்மீகியார்...
1.தாக்கும் நிலையை விடுத்துத் தன் ஞானத்தின் உயர்வை
2.வானை நோக்கி ஏகும் போது உண்மையை உணர்கின்றார்.

அந்த எண்ண அலைத் தொடரைக் கொண்டு அன்று அவருக்குப் பிறந்த ஞானம்தான் இராமாயணக் காவியமாக உருவாகியது.

அதற்குப் பிந்திய காலத்தில் மீனவனாய்ப் பிறந்த வியாசர்... மீன் பிடித்துத் தன் வாழ்க்கையை நடத்திச் சென்ற வழித்தொடரில்... கடலில் மீன் பிடிக்கச் சென்ற பொழுது கடலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு மீன் (டால்பின்) அவரைக் கரை சேர்க்கின்றது.

1.எந்த மீன் இனத்தைத் தான் இம்சித்தோமோ அதே இன ஜீவன்
2.தன்னைக் காத்ததை எண்ணி அப்பொழுது ஏங்குகின்றார்.

அந்த நேரத்தில் உதித்த ஞானத்தின் உணர்வுதான் அவரின் உயர் ஞான சித்தில் மனித வாழ்க்கைக்கு உயரும் பக்குவமான “கீதையின் உபதேசமாகத் தன் தத்துவத்தை” வடித்து வெளிப்படுத்தினார்.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்... இந்த மனித வாழ்க்கையில் மனிதன் எந்த நிலைக்குச் செல்ல முடியும்...? எதை எதைப் பெற முடியும்...? என்ற ஞான உணர்வில் அகஸ்தியர் காடுகளில் ஜெபமிருந்தார்.

அப்பொழுது ஓரிடத்தில் பிரசவ வேதனையுடன் ஓர் பெண்ணின் அழு குரல் கேட்டு அருகில் சென்று பார்க்கும் பொழுது... குழந்தையைப் பிரசவித்த நிலையில் நீருக்காக அத்தாய் அழுவதைப் பார்க்கின்றார்.

அது படும் வேதனையைப் பார்த்து அப்பெண்ணைக் கூட்டி வந்த பெண்ணும் தாகம் தீர்க்கத் தண்ணீருக்கு ஓடிய நிலையைக் கேட்டு அறிகின்றார்.

அப்பெண் தாகத்திற்காகத் துடிக்கும் நிலையறிந்து தண்ணீர் கொண்டு வருவதற்குள் தாகத்தால் அந்தத் தாய் உயிர் நீத்துவிடுகின்றது.

இதைக் கண்ட அகஸ்தியர் இத்தனை காலங்களாக தன்னால் சாதிக்க முடியாத ஜெப சக்தியை நாம் பெற்றுள்ளோம். இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பெண்ணின் தாகத்திற்கு
1.நீரைக் கொடுக்கக் கூடிய சக்தி இருந்திருந்ததென்றால்...
2.தாகத்தால் உயிர் நீத்த அத்தாய்க்கு
3.தன்னால் நீர் தர முடிந்திருக்கும் என்ற உணர்வின் ஏக்கம் கொள்கின்றார்.

அந்த எண்ணத்தைக் கொண்டு வீரிய ஜெபம் இருக்கின்றார். அதன் வழி வந்த ஞானத்தால்
1.தான் பெற்ற அகத்தின் உணர்வின் ஸ்திரத்தால் அகஸ்தியர் என்ற நாமம் பெற்று
2.அவரின் சித்தின் உயர்வின் ரிஷி சக்தியால்...
3.அவர் அமர்ந்திருந்த இடங்களில் எல்லாம்
4.ஜீவ நதிகள் உற்பத்தியாகும் வழித்தொடர் உருப் பெறுகின்றது

மனித உணர்வுக்கு ஒத்த ஜீவ நீர் அலைத் தொடரில் “தன் சக்தியை” இன்றும் செயலாக்கிக் கொண்டுள்ளார்.

இப்பூமியில் குறுகிய காலத்தொடரில் கொங்கணவர் பெற்ற வழித்தொடரும் இதே முறையில் தான்.
காட்சி:
குன்றுகள் போன்று சிறு சிறு மலைகள் தெரிகின்றன. மேடான ஒரு மலையில் ஓலை வேயப்பட்டுச் சிறு சிறு குடிசைகளும் அதற்குப் பக்கத்தில் சாணியைக் கொண்டு மெழுகிய தரை விசாலமாகவும் தெரிகின்றன.

அதற்குச் சிறிது தூரத்தில் சிறு சிறு பையன்கள் குதித்து விளையாடுவதைப் போன்றும், விளையாடும் பையன்களைப் பார்த்து அந்த வழியாகச் சிறு மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு வந்த பையன் மற்றச் சிறுவர்களுடன் தானும் விளையாடப் போகின்றான்.

எதிர்பாராது ஓர் கூர்மையான கல்லில் இடிபட்டுப் பலத்த காயமுடன் விழுந்து அலறுகின்றான். குடிசையிலிருந்த ஓர் தாய் அச்சிறுவனை அக்குடிசைக்குள் படுக்க வைத்து அச்சிறுவனுக்கு உண்டான காயங்களுக்கு மருந்திட்டுப் பாதுகாக்கின்றது.

பின் அதே சிறுவன் அத்தாயுடன் சிறிது வளர்ந்த நிலையில் அத்தாய்க்கு உதவியாக மருந்து அரைத்துத் தருகின்றான்.

அதன் பிறகு ஓர் கல்லறையும் அக்கலறையில் மண் மேட்டில் அதே சிறுவன் மீண்டும் வளர்ந்த நிலையில் அக்கல்லறையின் கால்மாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அக்கல்லறையிலிருந்து அச்சிறுவனுக்கு உதவிய தாயே வெளிச்சமுடன் கூடிய உருவமாய் அச்சிறுவனின் உருவமுடன் ஒன்றியதைப் போன்றும்... மேடான ஓரிடத்தில் ஓர் மரத்தை வெட்டி அம்மரம் ஐந்து ஆறு அடி உயரத்தில் உயர்ந்த மேடை போன்று இருப்பதைப் போன்றும்... அந்த இடத்தில் சிறுவனாய் இருந்து பெரியவனான அப்பையன் அமர்ந்திருப்பதைப் போன்றும்... அதே பையனின் உருவம் வயது முதிர்ந்த நிலையில் தெரிகின்றது.

மற்ற ரிஷிகள் தெரியும் பொழுது அடர்ந்த முடி தெரியும். ஆனால் இவரின் நிலை சிறு சிறு முடியுடன் சன்னமான தேகமுடன் அமர்ந்திருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அவரை வணங்கி யாரோ ஆசீர்வாதம் கேட்கும் பொழுது... என்னிடம் ஒன்றுமில்லை... அத்தாய் சக்திதான்...! என்று அத்தாயை எண்ணி அவர் வணங்குகின்றார்.

அவருக்கு முன் ஒளியாக அத்தாயின் உருவம் தெரிந்து அத்தாயிடம் தான் ஆசீர்வாதம் பெற்றுத் தன்னிடம் ஆசீர்வாதம் வேண்டி நின்றவர்களுக்கு இவர் அருள் புரிகின்றார்.

இதனுடைய உண்மைத் தத்துவம் அனாதையான சிறுவன் பட்ட துன்பத்தை நிவர்த்தித்து ஆதரவு தந்து அத்தாயின் சக்தியால் உயர்ந்த கொங்கணவர்...
1.அத்தாயின் உணர்வுடனே தன்னையும் ஐக்கியப்படுத்தி
2.தனக்கு ஆதரவு தந்து தன்னை உருவாக்கிய அத்தாய் சக்திக்குத்தான் தன் சக்தி சொந்தமென்று தவிர்த்து
3.தன்னை உயர்த்திக் கொள்ளாமல் தாயின் ஜெபத்துடனே தன் உயர்வைக் கொண்டு
4.தாயின் உயர்வுடனே சகல சித்துத் தன்மையையும் பெற்ற பக்குவ நிலை கொண்டு செயல்பட்டார்.

ரிஷி சக்திகளின் உண்மைத் தொடர்பு ஆரம்ப வாழ்க்கை நிலைகள் எல்லாமே சகல மனிதர்களை ஒத்த நிலைதான்...!

ஆனால்... தங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
1.எண்ணத்தின் உணர்வில் எதிர்ப்படும் மோதல் காலங்களில்
2.ஞானத்தின் உயர் ஞானத்தைக் கொண்டு உயர்ந்தவர்கள் தான் சகல மாமகரிஷிகளும்.