
குருநாதர் எனக்கு நேரடியாகக் காட்டியதைத் தான் உங்களிடம் சொல்கிறேன்
எந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக ஆனானோ அதிலிருந்து வரும் சக்திகள்
இந்தப் பூமியிலே
படர்ந்துள்ளது. அதை நுகரும் திறன் நாம் பெற வேண்டும். துருவ
நட்சத்திரத்தின் சக்தியை நாம் நுகர்ந்து அதை வளர்க்க வேண்டும். அனைவரையும்
பெறச் செய்ய வேண்டும்.
பின் அதனின் உணர்வை வலுவாக இயக்கப்படும் பொழுது தீமைகளை
அது கரைத்து விடும்.
விறகுக் கட்டைக்குள் இருக்கும் எண்ணெய்ச் சத்து நெருப்பை வைத்து
எரிக்கப்படும் பொழுது கட்டையைக் கருக்கிவிட்டு ஒளியாக மாற்றுகின்றது.
இதைப் போல
1.தீமையை
உருவாக்கும் வீரியச் சத்தை மகரிஷிகள் ஒளி கொண்டு எரித்து ஒளியாக மாற்ற வேண்டும்.
2.ஏனென்றால் அப்படி
ஒளியாக மாற்றியவர்கள் தான் மகரிஷிகள்.
ஆகவே எந்தத் தீமை வந்தாலும் அந்தத் தீமைகளை மகரிஷிகளின் உணர்வு கொண்டு கருக்கி விட்டு ஒளியின் தன்மையாக மாற்றிக் கொண்டே
இருக்க வேண்டும்.
அப்படி மாற்றப்பட்ட நிலைகள் அருள் ஞானிகள் உணர்வை
இணைத்து விட்டால்
1.தன்னிச்சையாக நமக்குள் இருக்கும் தீமைகளை எரிபொருளாக மாற்றி
2.அதனை ஒளியின்
சக்தியாக மாற்றும் தன்மை வருகின்றது.
3.இதையெல்லாம்
குருநாதர் எமக்கு நேரடியாகக் காட்டுகின்றார்.
நான் சொல்வதெல்லாம் உங்களுக்கு அதிசயமாகத்
தெரியலாம். ஆனால்
இதையெல்லாம் நீங்கள் பார்க்கும் பொழுது என்னிடம் சொல்வீர்கள். சாமி…
இதையெல்லாம் என்னால் பார்க்க முடிந்தது… என்னால்
தீமைகளைப் போக்க
முடிந்தது என்ற அந்த
மகிழ்ச்சியான நிலைகள் உங்களுக்குள் வரும்.
நான் ஒன்றும் அறியாதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன்.
எங்கிருந்து பேசுகின்றேன்…? குருநாதர் பதிய வைத்தது
எனக்குள் விளந்தது தான் அவ்வாறு இயக்குகிறது.
1.நான் புத்தகங்களைப்
படித்ததும் இல்லை… படிக்க விரும்பவும் இல்லை
2.படித்தாலும்
அர்த்தம் புரிவதில்லை.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதி இருப்பார்கள்.
திருவள்ளுவர் திருக்குறளைப் பாடியிருக்கிறார் என்றால் படித்தவர்களுக்கு அதனுடைய
விளக்கம் தெரியும். நான் படித்தால் எனக்கு என்ன அர்த்தம் தெரியும்…?
இராமாயணத்தைக் கவியாகப் பாடி
உள்ளார்கள். எனக்கு
என்ன அர்த்தம் தெரியும்…? கவி தெரிந்தவர்கள் விளக்கம் சொன்னால் சரியாக இருக்கும்.
ஆனாலும் அவரவர்கள்
உணர்வுகளை இணைத்துக் கொள்ளும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள்.
1.வேறு
விதமாக அமைந்து விடுகிறது.
2.படித்ததன் உணர்வுகள் அதனுடன் ஒன்றிச்
செயல்படும் பொழுது
3.அதற்கொப்பத் தான் அவர்கள்
உணர்வின் எண்ணங்களும் செயல்களும் வருகின்றது
4.அந்தக் கருத்தைக்
கேட்பவர்களுக்கும் உணர்வுகள் மாறுகின்றது