ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2026

நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் சில விஞ்ஞான அலைவரிசைகள்

நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் சில விஞ்ஞான அலைவரிசைகள்


இன்று விஞ்ஞான அறிவின் துணை கொண்டு எத்தனையோ பல நிலைகளை இருந்த இடத்திலிருந்தே காணுகின்றோம். எங்கோ ஒலி/ஒளி அலைகள் ஒளிபரப்பு செய்வதை வீட்டிலிருந்து நாம் டிவி மற்றும் எத்தனையோ சாதனங்கள் மூலம் காணுகின்றோம்.
 
அதைப் போன்று எத்தனையோ உணர்வுகள் நம் உடலுக்குள் உண்டு. அதுவும் அலை வரிசையில் தான் இயங்குகின்றது. அதில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைவரிசையை நாம் காணுகின்றோம்.
 
உலகில் யார் யாரையெல்லாம் நாம் சந்திக்கின்றோமோ இந்த உணர்வுகள் அது எல்லாம் ஒவ்வொரு ஸ்டேஷனாக அமைகின்றது. தீங்கு செய்தவரை எண்ணினால் அவரின் உணர்வலைகள் படர்ந்து இருப்பதை நுகர்ந்து அவர் மேல் வெறுப்பும் வேதனையும் கொள்கின்றோம்.
 
அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை நாம் அறிந்து கொண்டால் அதே உணர்வுகள் பதிவாக்கிய பின் அந்த ஸ்டேஷனைத் திறந்து வைத்தால் அந்த வேதனை உணர்வுகள் நமக்குள் வருகின்றது.
 
விஞ்ஞான அறிவிற்கும் இதற்கும் நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் அணுவாக விளைகின்றது.... அந்த அணுவினைப் பெருக்கி விடுகின்றது.
 
சாதனங்கள் மூலம் அதை அறிய முடிகின்றது இயக்கும்போது உணர முடிகின்றது பின் அழிந்து விடுகின்றது. ப்படி ஒளிபரப்பும் உணர்வுகள் இயந்திரத்தில் தான் இயக்குகின்றார்கள்.
 
இயந்திரத்தில் உருவாக்கிய உணர்வின் தன்மை நாம் அதை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் அதை உடலுக்குள் ணுவாக மாற்றி விடுகின்றது உயிர்.
 
தீமைகள் எங்கெல்லாம் நடக்கின்றதோ அவை ஒளிபரப்பாகிவிட்டால் இந்த உணர்வின் தன்மை கொண்டு தீமை என்று அதை எண்ணினாலும் அது வேதனை உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
 
வேதனையைத் தூண்டும் போது வேதனையை உருவாக்கும் அணுவாகவே உருவாகி விடுகின்றது. பின் அதனின் உணர்வை நமக்குள் வளர்க்க எதன் அலைவரிசையில் எதை வெளிப்படுத்தினார்களோ அதை மீண்டும் நாம் நுகர நேர்கின்றது.
 
உதாரணமாக உலகில் எங்கோ நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைப் படமாக்கி அதன் வழி வெளிப்படுத்தும் போது அதே அதிர்ச்சியான உணர்வைக் கண் கொண்டு பதிவாக்கும் பொழுது அதிலிருந்து வெளிப்பட்ட அலைகளை நாம் நுகர முடிகின்றது. தே அதிர்ச்சியின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.
 
அவ்வாறு வெளி வரும் பொழுது அழியும் சரீரங்களை நாம் பார்க்கப்படும் பொழுது உடலுக்குள் அழித்திடும் அணுக்களாக டி.பி. போன்ற கொடூர நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.
 
அதே போல வைரஸ் நோய்களும் ஊடுருவி உடலில் உள்ள அணுக்களைச் செயலாற்றதாக மாற்றும் நிலை வருகின்றது. எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் இது போன்று ஏற்படுகிறது.
 
விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் நாம் கண்டு வந்தாலும் அலைவரிசையில் வெளிப்படுத்தும் போது அதிலிருந்து நுகர்ந்த உணர்வு நமக்குள் அணுவின் தன்மையாக அடையச் செய்கின்றது நம் உயிர்.
 
1.இதை வென்றிட்ட அருள் மகரிஷிகள் உணர்வைக் காலை துருவ தியான நேரங்களில் கணவனும் மனைவியும் எடுத்து
2/.அதைக் கணவனுக்குக் கிடைக்க வேண்டுமென்று மனைவியும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும்
3.யாரெல்லாம் இதைச் சீராகச் செயல்படுத்துகின்றார்களோ இந்த உணர்வுகள் கூர்மையாக
4.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்தில் இருந்தும் அந்த சக்திகளை எடுக்கப்படும் பொழுது
5.அதன் அவதாரமாக இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் ஒளிச் சரீரமாகப் பிறவி இல்லாத நிலை அடைய உதவும்.
 
குரு வழியில் அருள் மகரிஷிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை வென்று இருளை வென்றிடும் உணர்வுகளை நீங்கள் பெற்று இருளை வென்றிடும் சக்தியாக உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியின் சுடராக ஆகி வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
 
மகரிஷிகள் அருள் சக்தியும் குரு அருளும் நீங்கள் பெற எமது அருள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கின்றேன்.