ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2026

“நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற வேண்டும்…” என்று சொல்வதன் முக்கிய காரணம்

“நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற வேண்டும்…” என்று சொல்வதன் முக்கிய காரணம்


பாம்பு தன் நஞ்சினை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதை உணவாக எடுத்து அது தனக்குள் விளைந்து விளைந்து உயிருடன் உணர்வுகள் அமில சுரப்பியாக ஆனாலும்…” மற்றதைக் கொன்று புசித்திட்ட உணர்வுகளும் மற்றது தன்னைக் கொல்ல வரும் நிலைகளிலும் நினைவின் ஆற்றல் கொண்டு உணர்வின் சக்தி வெளி வந்த பின் நஞ்சை உணவாக எடுத்துக் கொண்ட நிலைகள் அது நாகரத்தினமாக மாறுகின்றது.
 
அதைப் போல் யானையும் வலுக் கொண்ட உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் அது முதிர்ந்த நிலைகள் கொண்டு அதற்குள் வைரம் போன்ற முத்தாக விளைகின்றது.
 
பாம்பிற்குள் நாகரத்தினமாக எப்படி விளைந்ததோ இதைப் போல்
1.மனிதன் மற்ற நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தனக்குள் செயலாற்றதாக ஆக்கி
2.அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நஞ்சினை ஒடுக்கி
3.துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
 
உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு உணர்வின் இயக்கம் ஒளியாக மாறினான் மனிதன். ஆனால் நாகமோ நஞ்சினை உறையச் செய்து ஒளியின் சுடராக விளைகின்றது.
 
தன் உணர்வின் நிலைகளுக்காக முதிர்ந்த நாகம் நாகரத்தினமாக ஆனாலும் உமிழ்த்தி ஒளியின் சுரிலே… கண் ஒளிகள் மங்கினால் இந்த உணர்வின் அலைகள் கொண்டு உணவைத் தேடும் நிலையாகச் செல்கின்றது உடலின் நிலைகளுக்கு…!
 
ஆனால் நஞ்சு கொண்ட உணர்வுகள் மற்றது தாக்கப்படும் பொழுது வேதனை கொண்டு கவர்ந்த உணர்வுகள் எதனை உற்று நோக்கியதோ அதனின் உணர்வின் துணை கொண்டு உயிரான்மா வெளி சென்ற பின் எதைக் கொன்று புசிக்க வேண்டும் என்று விரும்பியதோ அதன் உடலுக்குள் சென்று விடுகின்றது.
 
1.இதனில் விளைந்த நஞ்சு தன் உணவுக்குத் தான் உதவ முடிந்தது.
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகவில்லை.
 
ஆனால்
1.மனிதனுக்குள் எத்தனையோ வேதனை போன்ற உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகள் உணர்வுகளை இணைக்கச் செய்து
2.நஞ்சை அடக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சிகரமாக மாற்றிச் சென்ற அவனின் உணர்வுகளை நமக்குள் எடுத்தோம் என்றால்
3.என்றும் பதினாறு என்ற நிலையில் பெரு வீடு பெருநிலை என்ற அழியா நிலைகள் கொண்டு வேகாக் கலை ஆகின்றது… வேகா நிலை ஆகின்றது.
4.எந்த நெருப்பும் எந்த நஞ்சும் இந்த உணர்வை வெல்ல முடியாது.
 
துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவும் மாய்த்திடாது.
 
சூரியனோ கோள்களோ மிகச் சக்தி வாய்ந்த கதிரியக்கத்தை உமிழ்த்தும் நட்சத்திரங்களோ இவை அனைத்துமே மடிந்திடும் நிலைகள் கொண்டது தான்.
 
நட்சத்திரங்கள் சூரியனாக மாறலாம். சூரியனாகிப் படைக்கும் தன்மை வந்தாலும் மிருக நிலையிலிருந்து மாறி மனிதன் முதுமை அடைந்து போல் சூரியனும் முதுமை அடைந்து விடும்.
 
பிரபஞ்சத்திற்குள் உயிரணுவின் தோற்றமாகி மற்ற ஏனைய உடலில் இருந்து பெற்று மனிதனான நாம்
1.மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டால் வேகா நிலையாக என்றும் நிலைத்திருக்க முடியும்.
2.என்றும் பதினாறு என்ற நிலையில் வளர்ந்து கொண்டே இருக்கும்.
 
அதற்குத்தான் மார்க்கண்டேயன் கதையைக் காட்டுகின்றார்கள். மார்க்கண்டேயன் எதைப் பற்றுகின்றான்…? கீழிருக்கும் ஆவடையப் பற்றவில்லை. (ஆவடை என்பது உடல்).
 
1.உயிர் தன்னை இயக்கிய நிலைகள் கொண்டு தாவி அந்த லிங்கத்தைத் தான் ஆலிங்கனம் செய்கின்றான்… அது ஜீவன் உள்ளது
2.உயிரின் தன்மை வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதை உயிரைப் பற்றுடன் பற்றி
3.அதனுடன் ஒன்றி உணர்வினை ளியாக மாற்றினான் என்ற நிலையை நினைவுபடுத்துவதற்காக அவ்வாறு காட்டுகின்றார்கள்.
 
அவ்வாறு மார்க்கண்டேயன் உயிருடன் ஒன்றிய நிலைகள் வரப்படும் பொழுது மனால் வனைக் கவர முடியவில்லை…” என்று சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் ண்ணம் ஞானிகள் இதை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.