
நாம் அடைய வேண்டிய பரிணாம வளர்ச்சியின் சூட்சமம்
பல கோடிச் சரீரங்களில் தன்னைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்துத் தான் மனிதனாக
வந்திருக்கின்றோம்.
உதாரணமாக ஒரு குளவி
தனக்குள் ஊரும் உமிழ் நீரைக் கொண்டு தன் இனத்தைப் பெருக்க .அதற்கென்று
ஒரு கூட்டினை… ஒரு
கருவறையைத்
தேர்ந்தெடுக்கின்றது.
விஷத்தன்மை
கொண்ட மண்ணினைப் பிசைந்து வாயில் எடுத்து வந்து கூடுகள் அமைக்கின்றது. நஞ்சு கலந்த
உமிழ் நீரை அதற்குள் இணைக்கின்றது.
பின் பறந்து
சென்று தன் இனம் அல்லாத புழுக்களை தன் நஞ்சின் தன்மை கொண்டு கொட்டி
அதனை வலுவிழக்கச் செய்து தன்
உணர்வை அதற்குள் பாய்ச்சி அதைத் தூக்கி வந்து கூட்டுக்குள் இணைக்கின்றது.
1.இந்த
விஷத்தன்மை புழுவின்
உடலில் முழுமையாகப் படர்ந்து அது சருகு போல ஆகின்றது.
2.அதற்குள் இருக்கும் ஊணின் நிலைகளும் அது கலைந்து வர உடலை அமைத்த உணர்வுகள்
அணுக்களாக மாற்றப்பட்டு
3.உயிரின்
தன்மை கொண்டு இது எவ்வாறு என்ற நிலையை அதனை நினைவில் ஊட்டச் செய்து
4.புழுவைக் கூட்டிற்குள் தள்ளி மண்ணை வைத்து அதை அடைத்து விடுகின்றது.
தன் உடலில் எதைப் பெற்றதோ இதன் உணர்வைப் பதிவு செய்த
பின் தன் சிறகால் அதிர்வின்
தன்மை கொடுத்து புழுவின் உயிர் மடிந்து விடாது அதிர்வின் தன்மை கொண்டு
இயக்கி இந்த உணர்வின் நினைவு கொண்டு அதிலே அணுக்கள் விளைந்து
அதனின் தொடர் கொண்டு அது ஜீவிக்கும் நிலை வருகின்றது.
அதற்கு ஜீவன் ஊட்டிக் கொண்டேயிருப்பதற்காகக் குளவி இரைச்சல் கொடுத்து அதைக் காக்கின்றது.
கோழி தான்
இட்ட முட்டைகளை அடைகாக்கின்றது. தன்னுடைய உடலின் வெப்பத்தால் அதற்குள் இருக்கும் ஜீவ அணுவைத் துடிக்கச் செய்து அதனின் கருவாக விளையும் வரையிலும் அதை அடை
காக்கின்றது.
மூன்று
நாட்கள் ஆனாலும் நான்கு நாட்கள் ஆனாலும் அடை காத்து
1.அதற்குள்
இருக்கும் அணுக்களின் தன்மை அதனை நுகர்ந்து
வரும் பொழுது
2.வெப்பத்தின்
தன்மை கொண்டு தன் உணர்வலையைப் பாய்ச்சி அதன்
தன்மை கொண்டு அது கோழிக் குஞ்சாக
உருவாக்குவது போல
3.குளவி தான் கட்டிய கூட்டின்
மேல் ரீங்காரமிட்டு அதனின் நாதங்களை எழுப்புகின்றது.
4.அந்த அதிர்வினைப் புழுவின் உடலில் இருக்கும் காந்தப்புலன் இழுத்துக் கவர்கிறது.
எந்த உமிழ் நீரின் தன்மை
கொண்டு கூட்டினைக் குளவி அமைத்ததோ சூரியனின் காந்த சக்தி அதன் மீது படர்ந்தாலும் தாயினம் இடும்
மூச்சலையை இதன் வழி நுகர்ந்து அதனின் உணர்வின் துணையால் அதனின் கருவின் நினைவாக குளவியாக அது உருப் பெறுகின்றது.
இதைப்
போன்று தான் மனிதன் தனக்கென்று வீடு கட்ட வேண்டும் என்றாலும் ஒவ்வொன்றிலும் இது
வளர்க்கப்பட்டு தான் ஒவ்வொரு இணைப்பிலும் தனக்குப் பாதுகாப்பாக
இதைச்
செயல்படுத்துகின்றான்.
தன்னைக் காத்திடும்
உணர்வாக ஒவ்வொரு
சரீரத்திலும் ஒவ்வொரு நிலைகள் கொண்டு எடுத்து அதனதன் குணங்களுக்கு அதனதன் உணர்வின்
தன்மை கொண்டு தான் விளைந்து சர்வத்தையும் அறிந்திடும் நிலையும்
சர்வத்தையும் இயக்கிடும் நிலைகள் கொண்டும் சர்வத்தையும்
உருவாக்கும் நிலை கொண்டு உயிரின் நிலைகள் கொண்டு
1.உணர்வுகள்
அழிந்தாலும் அதிலே ஒவ்வொரு
உணர்வையும் இயக்கி
அதை ஒளியாக மாற்றி
2.உயிருடன் ஒன்றித் தன்னுடன்
இணைந்து ஒளியின் சரீரமாக மாற்றிடும் இந்த உண்மையினை அறிந்தவன் தான் “மகரிஷி…”
அந்த மகரிஷிகளின் அருள்
சக்தியை நாம் நுகர்ந்தால்
அவனைப் போல் ஆக முடியும். அவ்வாறு அவன் அடைந்த நிலையை நாம் அடைவதற்கே இந்த உபதேசம்.