
விக்கல்
நம்முடைய நண்பர்கள்
பலராக நாம்
இருப்பினும் அமெரிக்காவில் ஒருவர் இருக்கிறார் என்றால் நம் நட்பின் தன்மை அவர்
உடலிலே பதிவாகி இருக்கும்.
அப்படிப் பதிவாகி
இருந்தால் அந்த நண்பன் நமக்குத் தக்க நேரத்தில் உதவி செய்தான் என்று நாம் எண்ணும் பொழுது இந்த உணர்வுகள்
அங்கே மோதி விக்கல் ஆகின்றது.
அப்பொழுது
அவர் நினைப்பார்… யாரோ என்னை நினைக்கிறார் என்று. இப்படி
நட்பினால் விக்கல் ஏற்படுவது ஒன்று.
அதே
சமயத்தில் தன் ஆசைகளால் ஏற்பட்ட உணர்வின் அணுக்களின் தன்மை அது அதிகமாகி விட்டால் இந்த நினைவின்
தன்மை அந்த அணுக்கள் மோதும் பொழுது ஈர்க்கும் சக்தி அதற்கு அதிகமாகும்.
அப்பொழுது
சிலருக்கு அது விக்கலாக அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அதை
நிறுத்துவதற்காக வைத்தியத்திற்குச் செல்வார்கள்.
நண்பன்
என்று வரும் பொழுது இவரின் நினைவின் ஆற்றல் அங்கே விக்கலாகின்றது. ஆனால்
1.ஆசையின் உணர்வுகள் அதைப் பெற வேண்டும் இதைப் பெற
வேண்டும் என்று இப்படி அதிகரித்து விட்டால்
2.இடைமறித்து அந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் இந்த உணர்வுகள்
இரண்டும் மோதும்
பொழுது
3.ஒன்று இதனுடைய
ஆசைக்கு இழுப்பதும் மற்றொன்று அதனுடைய ஆசைக்கு இழுப்பதும் இத்தகைய நிலை
வரும்பொழுது
4.அந்த ஏக்க
நிலைகளில் இரண்டும் அதனுடைய உணர்வுகள் எதிர்மறையாகி இழுக்கப்படும் பொழுது விக்கல் அதிகமாகும்.
அப்போது அதை நீக்க
மருத்துவரைத் தான்
தேடிச் செல்வார்கள். இந்த விக்கல் வேறு…
நட்பினால் ஏற்படும் விக்கல் வேறு.
இயற்கையின் இயக்க நிலைகள்
எவ்வாறு இருக்கிறது…? என்றும் நாம் நுகர்ந்த உணர்வுகளை
உயிர் எவ்வாறு இயக்குகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.