
இரண்யன் மூன்று லோகத்தை அடக்கினான் என்றால் பொருள் என்ன…?
மனிதனான பின் அசுர உணர்வுகளைச்
சந்தர்ப்பவசத்தால் நாம் எடுத்துக்
கொண்டால்…
1.நாம்
எண்ணத்தால் எடுத்துக் கொண்ட அந்த நிலைப்படி இந்திரலோகத்தை மாற்றி அமைத்து
2.அதை அந்த அசர உணர்வுகளே ஆட்சி புரியும் நிலைக்கு வருகின்றது.
3.இந்திரலோலகம்
என்பது ரத்த நாளங்கள்.
இதைத் தான் காவியங்களில் இரண்யன் மூன்று லோகத்தையும் அடக்கினான் அடிமைப்படுத்தினான்
இந்திரலோகத்தில் உள்ள அனைவரையும் தனக்குக் கீழ் அடிமைப்படுத்தினான் என்று
சொல்வது.
உடலான இந்திரலோகத்திற்குள்ளும் இவன் அடக்குகின்றான்
காற்றுப் பகுதியில் உள்ள உணர்வுகளையும் இவன்
செயல்படுத்துகின்றான்… காற்று
மண்டலத்தையும் அதுவாக மாற்றுகின்றான்.
சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்விலும் இந்த உணர்வுகள் இணைந்து மற்றவர்களை இது
அடக்கிடும்
சக்திகளாகப்
பரப்புகின்றான்.
இப்படி மூன்று நிலைகளாகப் பரவுவதை “மூன்று
லோகம்” என்று
காரணப் பெயரை
வைத்து அழைத்தனர் ஞானிகள்.
1.உடலான ஒரு
லோகமும்
2.புறத்தால் தன்
சுற்றுப்புற சூழ்நிலையில் உள்ள உணர்வுகளும்
3.சூரியனிலிருந்து
வரும் உணர்வின்
தன்மை விஷத்தின் தன்மை உமிழ்த்தப்படும் போது இவனிடும் உணர்வுகளே
அதனின் செயலாகச்
செயல்படுகிறது.
அசுர குணங்கள் கொண்டு நாம் பேசினால் சுற்றுப்புற சூழ்நிலைகள்
இந்த லோகத்தையே இது கவர்ந்து விடுகின்றது. அதற்குள் வாழும் மக்களும் சிறிதளவு நுகர்ந்தபின்
உடலுக்குள் அந்த உடலையும் அடக்குகின்றது. அச்சுறுத்தி வாழும் நிலை வருகின்றது.
ஒரு இடத்திலே போக்கிரி இருக்கிறான் என்றால் அவன் கடுமையாகப்
பேசப்படும் பொழுது அவன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை அடக்குகின்றான்.
நல்ல உணர்வின் தன்மை அடங்கிச் சொல்லாக வெளிப்படும் பொழுது
கேட்போர் உடலுக்குள்ளும்
இந்த உணர்வுகளே உள் புகுந்து அவர்களை அச்சுறுத்தும்படிச்
செய்கின்றது.
அதே சமயத்தில் சூரியனால் கவரும் சூரியனிலிருந்து
வெளிப்படும் வெப்ப காந்தத்திலும் மற்றவைகளுடன்
இணைந்து… உணர்வின் அலைகளாகப் படரப் படும் பொழுது “அந்தச்
சூரியனின் வெப்ப காந்தமும் இவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வைக் கலந்து” அதனின் உணர்வாக ஆட்சி செய்யும் நிலையாக அமைந்து விடுகின்றது.
இவனின் ஆக்கிரமிப்புத் தன்மைகள்
வரும்போது இவனின்று
விளையும் தன்மையே
1.உடலையும்
2.காற்று
மண்டலத்தையும்
3.சூரியனுடைய
உணர்வுகளையும்
4.இந்த மூன்று
மண்டலங்களையும் வீரியத்தன்மை கொண்டு ஆட்சி புரியத் தொடங்கி விடுகின்றது.
இதை நுகர்ந்தோர் அனைவரும் மடியும் நிலையும் அசுர உணர்வுகள்
கொண்டவர்களாகவே வந்து
விடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
ஆனால் நஞ்சினை
வென்றிட்ட அஅகஸ்தியன்
துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் மெய்ப் பொருளைக் காணச் செய்யும் நிலையாக.. இருளைப் போக்கிடும் அருள் ஒளியாக
வளர்த்திடும் அரும்பெரும் சக்தியாக இது அமையும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்த்துத்தான் நம்மை அறியாது வரும்
2.அந்த அசுர உணர்வினை நாம்
மாற்றி அமைக்க முடியும்.