ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 2, 2026

பிறருக்கு உதவி செய்தாலும்… அவரிடமிருந்து வரும் இருளான உணர்வுகள் நம்மை இயக்கி விடக் கூடாது

பிறருக்கு உதவி செய்தாலும்… அவரிடமிருந்து வரும் இருளான உணர்வுகள் நம்மை இயக்கி விடக் கூடாது


பெரும்பகுதியான மக்கள்…கான்களை நேரடியாகச் சந்திக்கும் பொழுது தங்களுக்குப் பொருள் வேண்டும் செல்வம் வேண்டும் என்று தான் அணுகுகிறார்கள். மகான்கள் கூறும் உண்மையின் உணர்வைப் பெறுவதில்லை… அதைக் கடைப்பிடிப்பதில்லை.
 
தன் வாழ்க்கைத் தேவைக்குத் தான் மகான்களைச் சந்தித்தார்கள். தன் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்குமா…? என்று பார்க்கிறார்கள்.
 
இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது.
 
பிழைப்புக்குக் கிடைக்க வேண்டும் என்றாலும் ஞானம் இல்லை என்றால் அப்படி வந்த பணத்தைச் சீராகப் பாதுகாக்க முடியாது.
1.செல்வங்கள் வந்தாலும் அந்த ஞானம் இல்லை என்கிற பொழுது ஆசையினால் கடைசியில் இப்படி ஆகிவிட்டதே…” என்று வந்துவிடும்.
2.காரணம் ஒன்று கிடைத்தாலும் கூட அந்த ஆசை அதோடு திருப்தி அடைவதில்லை.
3.இதைப் பெற்றால் பரவாயில்லை என்று முதலில் நினைப்போம்.
4.நன்றாக வந்தது என்று அதை வைத்து இன்னொன்றைப் பெருக்கலாம் என்று ஆசை வரும்.
5.அதில் நஷ்டமாகி விட்டால் வேதனை…!
6.வேதனை வந்தபின் முதலில் வந்து கொண்டிருந்ததும் போய் விடுகின்றது… அடுத்துளர்வதும் போய் விடுகின்றது.
7.இரண்டும் சேர்த்து வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்து உடலில் நோயாக உருவாக்கத்தான் தயாராகின்றது.
8.நோயான பின் நான் இப்படி எல்லாம் செய்தேனே நன்றாக முயற்சி செய்தேனே…” என்று சொல்வார்கள்.
 
பணம் அதிகமாக இருந்தால் தாராளமாகச் செலவழிப்பார்கள். பிறருக்கு உதவியும் செய்வார்கள். ஆனால் அந்தக் கஷ்டப்பட்டவர்கள் வேதனை எல்லாம் நுகர்ந்து விடுவார்கள். அதைத் துடைக்கத் தெரிவதில்லை.
 
நான் எல்லாம் செய்தேன் ஆண்டவன் கடைசியில் என்னை இப்படி ஆக்கிவிட்டான்…! என்று புலம்புவார்கள்.
 
ஆலயங்களுக்குச் சென்றால் “தர்மம் செய்ய வேண்டும் ஆண்டவன் அப்போது தான் மெச்சுவான்” என்று எல்லா மதங்களுமே சொல்லுகின்றது. அதன் வழி நாமும் தர்மம் செய்கின்றோம்.
 
ஆனால் அப்படிச் செய்யும் பொழுது என்ன நடக்கிறது…?
 
அவனோ பாவத்தின் எல்லையில் இருக்கின்றான் தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
1.ஆனால் நம்மிடம் உதவி பெற்ற பின் ஆ…! “ஆஹா…!” இன்று அந்த ஆசையிலே அவன் உணர்ச்சிகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றான்.
2.அவனை உற்று நோக்கி அவன் ஏங்கிப் பெறும் உணர்வுகளை நாமும் நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.
 
நல்லது தான் செய்கின்றோம் ஆனால் அவருடைய உணர்வுகள் இங்கே வந்து அவனுடைய தரித்திரத்தை இங்கே கொண்டு வந்து விடுகிறது. அதை நீக்கத் தெரிவதில்லை.
 
இதைப் போன்று பிறரது இருள் சூழும் உணர்வுகள் நமக்குள் வருவதைத் தூய்மைப்படுத்தாதபடி ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான் என்று தான் எண்ணுகின்றோம்.
 
ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன்…? நமது உயிர் தான்.
 
1.ஈகை பண்புடன் தான் உதவி செய்தோம்
2.ஆனால் அவருடைய இருள் சூழ்ந்த உணர்வுகள் இங்கே நமக்குள் விடுகின்றது.
3.அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.
 
உதாரணமாக எத்தனையோ உணவுப் பொருள்களைச் செய்கின்றோம் அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி மற்ற அசுத்தங்கள் படத்தான் செய்யும்.
 
அப்போது அதை மூடி வைக்க வேண்டும் அல்லவா.
 
மூடி வைக்காதபடி நான் நன்றாகத் தான் செய்தேன். அதிலே மண் தூசி எல்லாம் வந்து விட்டதே…! என்று சொன்னால் எப்படிச் சரியாகும்…?
 
இதைப் போன்று தான்
1.அந்தப் பாதுகாப்பு நிலை இல்லை என்றால் நம் ஆன்மாவில் மற்றவருடைய இருளான உணர்வுகள் புகுந்து
2.உடலுக்குள் அணுக்களாக விளைந்து கடும் விளைவுகளை உண்டாக்கி விடும்.
 
அதனால் தான் அடிக்கடி ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து ஞாபகப்படுத்துகின்றோம்.
 
எந்தக் காரியத்தைச் செய்தாலும் காரியத்தைச் செய்வதற்கு முன்பும் பின்பும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று இதை உடலுக்குள் வலுவாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.
 
1.நம் பார்வை சொல் செயல் அனைத்தும் அந்த மகரிஷிகள் உணர்வின் தன்மையாகவே நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.எத்தகைய நிலையிலும் பிறரின் உணர்வு நம்மை இயக்கி விடக்கூடாது… அது உடலுக்குள் அணுக்களாக விளைந்து விடக்கூடாது.