
அகஸ்தியனின் புலன்
ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான். சந்தர்ப்பத்திலே அதைப் பார்க்கின்றோம். அந்த வேதனையை நாமும் நுகர நேர்கின்றது… நம்மையும் அது இயக்குகிறது.
அதே போன்றுதான் தீமைகளிலிருந்து
விடுபட வேண்டும் என்ற சந்தர்ப்பம் அகஸ்தியனின் தாய் தந்தையருக்குக் கிடைத்தது. எப்படி…?
1.மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகப் பச்சிலை மூலிகைகளைப் பயன்படுத்தினார்கள்.
2.அந்த
மணங்களைச் சுவாசித்த பின் அந்தச் சந்தர்ப்பம் பல
விஷத் தன்மை முறிக்கும் நிலை வந்தது.
3.அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்
கொண்டார்கள்… ஏனென்றால் மிருகங்கள் தங்களைக் கொன்று விடும்… தன்னைக் காக்க வேண்டும் என்று.
4.அந்தச்
சந்தர்ப்பத்தால் தீமைகளை வெல்லும் சக்தி
பெற்றார்கள்.
நுகரும் உணர்வுகள் புலனறிவாக எப்படி
இயக்குகிறது…? என்று “புலஸ்தியர்…” என்று அக்கால மக்களைச் சொல்வார்கள்.
இன்று விஞ்ஞானிகள் மெய் ஞானிகள் என்று சொல்கிறோம் அல்லவா. அது போல
1.புலனின் உணர்வுகளைத் தெரிந்து கொண்டவர்கள்… புலஸ்தியர்… பூமியின் முதல் மனிதர்கள்.
2.ஒரு தாவர இனத்தைத் தனக்குள் சேர்த்துக் கொண்டால் அதனின்
அறிவு என்ன செய்கிறது…? என்ற உண்மையின்
இயக்கத்தை அறிந்தவர்கள்.
அந்த ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் காலை துருவ தியான
நேரத்திலே அகஸ்தியன் துருவ
நட்சத்திரமான அந்தச் சக்தியைத்
தொடர்ந்து எடுக்கும்படி சொல்கின்றோம்.
அந்தத் துருவ
நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து “உங்கள்
உடலுக்குள் அது அணுவாகும் தத்துவத்தைத் தான்…” குரு வழியில் உபதேசிக்கின்றோம்.
எல்லா நேரமும் நாம் தியானம் செய்யலாம். இருந்தாலும் இந்த அதிகாலை நேரத்தில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த உணர்வுகளைக் கலந்து உங்களுக்குள் அந்த உண்மையின் உணர்வை ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ள ஏற்படுத்துகின்றோம்.
உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது…? நாம் ஏன்
கோபப்படுகின்றோம்…? நாம் ஏன் வேதனைப்படுகின்றோம்…? நாம் ஏன் தீமை செய்கின்றோம்…? என்று சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்.
ஒருவன் தவறு செய்கிறேன் என்றால் அவனை நாம் குற்றவாளியாக ஆக்குவதற்கு மாறாக
அவன் உணர்வை நாம் எடுத்தால் பல தடவை
அதைக் கேட்டறிந்தால் சந்தர்ப்பம் நம்மையும் குற்றம் இழைக்கக்கூடிய
நிலையாக… குற்றம் செய்பவனாக வளர்த்து
விடுகின்றது.
நான் தவறே செய்ய
மாட்டேன் என்பார்கள். ஆனால் தவறு செய்தவர்களை அடிக்கடி உற்று
நோக்கினார்கள் என்றால் இவர்களும் அதைச் செய்ய
ஆரம்பிப்பார்கள்.
1.எல்லாமே சந்தர்ப்பம் தான்.
2.ஆகவே நல்ல சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.
பகைமையோ வெறுப்பையோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ வரும் பொழுது துருவ தியானத்தில் உங்களுக்குக்
கொடுத்த சக்தியின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின்
பேரருளை பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தித் தீமையை வலுவிழக்கச் செய்து அந்த
உணர்வினை நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.
தெளிந்து தெளிவான நிலைகள் கொண்டு வாழ்ந்து தீமைகளை அகற்றி வாழ்வதற்குத்
தான் குருநாதர் சொன்ன வழியினைப் போதிக்கின்றோம்.
1.அகஸ்தியன்
அருளை… அவன் எப்படிப் புலனின் நிலையை
அறிந்தானோ
2.அந்த புலனின் தன்மையை நுகரச்
செய்து உங்கள் நல்ல புலனாக அறிந்திடும் அறிவின் புலனாக
3.அகஸ்தியனின் புலனை… அவன் ஒளியான
உணர்வின் புலனை உங்களுக்குள் செவி வழி கேட்கும் படிச் செய்து
4.உங்களை நுகரச் செய்து உங்கள் ஆகாரத்தின் வழி ரத்தத்தில் கலக்கச் செய்து கொண்டிருக்கின்றேன்.
இதை நீங்கள் தொடர்ந்து வளர்த்துக் கொண்டால் துருவ
நட்சத்திரத்துடன் இணைந்து கல்கி என்ர நிலையை அடைய முடியும்.
ராமேஸ்வரம் - எண்ணத்தால்
உருவாக்கப்பட்ட இந்த உடல்…! தனுசு கோடி
- ஒவ்வொரு நிமிடமும் தீமை என்ற உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தின்
சக்தி கொண்டு மாற்றிக் கொண்டே வரவேண்டும்.
1.கோடிக்கணக்கான உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.
2.அதற்குள்
துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து கொண்டே வந்தால் தனுசு கோடி.
எத்தனை கோடி உணர்வுகள் வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொள்ளும் சக்தி பெற்றது
துருவ நட்சத்திரம்.
1.அந்த ஆற்றலை நாமும் நிச்சயம் பெற முடியும்
2.அகஸ்தியனின் புலன் கொண்டு அந்த முழுமையை அடைய முடியும்.