ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2025

ஞானிகள் உணர்வைச் சிறு குழந்தைகளைப் போல் பதிவு செய்து கொண்டால்… ஞானிகள் செய்ததை நாமும் செய்ய முடியும்

ஞானிகள் உணர்வைச் சிறு குழந்தைகளைப் போல் பதிவு செய்து கொண்டால்… ஞானிகள் செய்ததை நாமும் செய்ய முடியும்


ஞானிகள் உணர்வைத் திரும்பத் திரும்ப உங்களுக்கு உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.
1.இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால்
2.இப்பொழுதே அதை முழுமையாகப் பெறவும் செய்யலாம்.
 
ஆனால் ஒரு சிலருடைய எண்ணங்கள் எப்படி இருக்கிறது…? என்றால் நான் படித்திருக்கின்றேன் எல்லாப் புத்தகங்களையும் படித்து இருக்கின்றேன்…! ஆனால் சாமி சொல்லும் தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை…! என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.
 
நமக்கே முடியவில்லை மற்றவர்கள் எப்படித் தெரிந்து கொள்வார்கள்…! என்பார்கள். நான் எல்லாவற்றையும் படித்திருக்கின்றேன்
1.சாமி சொல்வதை என்னாலேயே பின்பற்ற முடியவில்லை… சாதாரண ஆட்களால் எப்படி முடியும்…?
2.இப்படிப் பிறரை எண்ணித் தன்னைத் தாழ்த்திக் கொள்வோர் தான் உண்டு.
 
மூன்று வயது நான்கு வயது சிறு குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் படிக்கவே இல்லை. டிவி.க்கு முன் உட்கார வைத்து அந்தக் குழந்தைகள் அதைக் கூர்ந்து கவனித்தால் போதும். அதில் பாடும் பாட்டை அப்படியே பாடும் அங்கே ஆடும் ஆட்டங்களையும் ஆடும்.
 
ஆனால் பெரியவர்கள் நம்மால் அப்படிச் செயல்படுத்த முடியுமா…?
 
1.குழந்தை கூர்மையாகக் கவனித்தது
2.அதற்குள் அந்த உணர்வுகள் பதிவானது
3.அதுவே மீண்டும் அங்கே செயலாக்குகின்றது.
 
நாம் அதைப் பார்த்துவிட்டுச் சொல்வோம். டிவி.யில் பாடிய பாட்டை என் குழந்தை அப்படியே பாடுகின்றது அப்படியே ஆடுகிறது…! என்று எல்லோரிடமும் பெருமை பேசுவோம் புகழ் பாடுவோம்.
 
ஆனால் தன்னால் அதைச் செயல்படுத்த முடிகிறதா…? என்றால் இல்லை…! குழந்தை எதைப் பதிவு செய்ததோ அந்த உணர்வுகள் அங்கே இயங்குகின்றது.
 
அதைப் போன்று தான் யாம் உபதேசிக்கும் இந்த நிலைகளில் நாம் அனைவருமே இப்பொழுது குழந்தைப் பருவம் போன்று தான்…”
1.ஞானிகள் உணர்வுகளைக் குழந்தைகளைப் போல் பதிவு செய்து கொண்டால்
2.அவர்கள் செய்த நிலைகளை எல்லாம் நாமும் செய்ய முடியும்.
3.அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்.
 
அப்படி இல்லாது எங்கே…!” நான் எத்தனையோ புத்தகங்கள் படித்து இருக்கின்றேன். சாமி புதிதாகச் சொல்கிறார். அதை என்னால் கிரகிக்க முடியவில்லை பின்பற்ற முடியவில்லை…! என்று இப்படிச் சொல்லி விடுகின்றார்கள்.
 
பெரும்பகுதியானவர்கள் தன்னைத் தானே தாழ்த்தி தாழ்த்திடும் நிலைகளுக்குத் தான் கொண்டு செல்கின்றார்கள்.
 
காரணம்
1.எதை எல்லாம் அதிகமாகப் படித்துப் பதிவாக்கி வைத்திருக்கின்றோமோ அந்த வழிப்படிதான் நம்முடைய எண்ணங்கள் செல்லும்.
2.இந்த உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதன் வழிக்கே தான் நம்மை இழுத்துச் செல்லும்.
3.யாம் சொல்வதை அது காலி செய்து கொண்டே இருக்கும்.
4.படித்தது மட்டும்தான் முன்னாடி நிற்கும்சாமி என்னத்தைச் சொல்கிறார்…? என்று அதை ஒதுக்கிவிடும்.
 
சிறு குழந்தைகள் ஒன்றாவது வகுப்பிலே படிக்கின்றது. அடுத்து இரண்டாவது வகுப்பு வந்த பின் முதலில் படித்ததைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றது நான் எப்படிப் படிக்கப் போகின்றேன்…!” என்று எண்ணினால் இரண்டாவதைப் படிக்க முடியாது.
 
ஆக படிப்படியாகப் படித்து வளர்ச்சியாகித் தான் எல்லாவற்றையும் தெரிந்து விஞ்ஞானியாக ஆவதும் அதன் மூலம் தானே…!” இந்த நினைவே வருவதில்லை.
 
தத்துவஞானிகள் அனைத்தையும் கொடுத்துச் சென்றார்கள். ஆனால் அது ஏமாற்றுபவன் கையிலே சிக்கித் திசை திரும்பி விட்டது. பக்தி என்ற நிலையில் நினைவுகள் எல்லாம் வெளியிலே சென்றுவிட்டது.
 
அபிஷேகம் செய்து ஆராதனை செய்து யாகங்கள் செய்து விட்டால் எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று காசு கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைக்குச் சென்று அதிலே தான் நம் நம்பிக்கையும் சென்று விட்டது…”
 
1.ஆனால் நாம் எண்ணுவதை எல்லாம் நம் உயிர் நெருப்பாக இருந்து
2.அது தான் நமக்குள் உருவாக்குகின்றது என்ற இந்த நம்பிக்கை வருவதில்லை.
 
இதையெல்லாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.