ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 2, 2023

“டென்ஷன்” (TENSION) என்று சாதாரணமாகச் சொல்கிறோம்… அந்த நேரத்தில் உடலுக்குள் என்ன நடக்கிறது…?

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! உயிரின் இயக்கத்தைப் பிரணவம் என்று சொல்கின்றோம். ஆனால் வெறுமென ஓ…ம்…! என்று சொல்வதல்ல. இயக்கத்தின் தன்மை அறிந்து கொள்வதற்கே ஓ...ம் என்று சொல்கின்றோம்.

நாம் எதை நுகர்கின்றோமோ… எதைப் பார்க்கின்றோமோ… அவை அனைத்தையும் உயிர் ஓ… என்று இயக்கி ம்... என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

எந்தக் குணத்தின் தன்மையை நாம் எண்ணுகின்றமோ…
1.அதனின் இயக்கமாக உணர்வின் எண்ணங்கள் வருகின்றது
2.அதன் உணர்வின் தன்மை கொண்டு உடல் இயங்குகிறது.

வேதனை என்ற உணர்வுகள் உயிரிலே படும் பொழுது அது குருக்ஷேத்திரப் போர். நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் கொண்டு நாம் ஒருவர் வேதனைப்படுகிறார் என்று பார்த்து நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டால் வேதனையின் வலு அதிகமாகிறது.

நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை இது அடக்கி விடுகின்றது உயிருக்குள் குருக்ஷேத்திரப் போராக நடக்கின்றது.

ஆனாலும் வேதனைப்பட்ட உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து விட்டால்… இரத்தம் உடல் முழுவதும் செல்லப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளால் ஆன நல்ல அணுக்களிலும் இது கலக்கின்றது.

அணுக்களின் மலம் தான் உடல் உறுப்புகளில் உள்ளது. அப்போது உடல் உறுப்புகளுக்குள் அந்த வேதனை என்ற உணர்வுகள் சென்றபின் மகாபாரதப் போராக மாறுகிறது.

வேதனை என்றாலே விஷம். அந்த விஷத்தின் தன்மை நுரையீரலுக்குச் சென்றால் அங்கே ஒரு வேதனை குடலுக்குள் சென்றால் குடல் வலி சிறுநீரகத்திற்குச் சென்றால் அங்கே வலி இருதயத்திற்குச் சென்றால் இருதய வலி கல்லீரலில் வலி... அதை உருவாக்கிய அணுக்களுக்கு வலி.

இதனால் சிறுநீரகம் சுத்தப்படுத்தும் தன்மையை அது இழக்கப்படும் பொழுது இருதயத்தில் அந்த அசுத்த இரத்தங்கள் செல்லப்படும் பொழுது இருதயம் சரியாக இயங்காதபடி அதையும் தடைப்படுத்துகிறது.

உடலில் உள்ள இரத்தத்தை நம் இருதயம் பம்ப் செய்து கொண்டே உள்ளது.
1.அதன் உணர்வை ஆவியாக அனுப்பி…
2.சிறு மூளை பாகங்களில் இந்த உணர்ச்சிகளை உந்தச் செய்யும் சக்தியாக வருகின்றது.

உதாரணமாக… ஒரு பெட்ரோல் இன்ஜினில் இன்ஜினுக்குள் அந்தப் பெட்ரோல் பம்ப் ஆகும் பொழுது அதனதன் உணர்வு கொண்டு செயல்பட்டு
1.அந்தப் பெட்ரோலை ஆவியாக மாற்றி
2.அதனுடைய அழுத்தங்கள் கொண்டு அந்த இயந்திரத்தை இயக்கச் செய்கின்றது.

நம் உடல் உறுப்புகளை இயக்கச் செய்வதற்கு…
1.எதன் உணர்வின் தன்மை நாம் சிறு மூளையில் படுகின்றதோ
2.அதனின் இயக்கத்திற்குத் தக்க அது இயங்கி
3.அந்த உணர்ச்சிகளை ஊட்டி நம்மை அறியச் செய்கின்றது.

நம் இருதயத்தில் அது சரியானபடி வடிகட்டப்பட்டுச் சுத்தப்படுத்தும் நிலை வரவில்லை என்றால்… அழுத்தம் அதிகமாகும் பொழுது ஒரு பக்கம் வலி.

அப்போது போகும் பாதையில் அடைப்பாகி விட்டால் இரத்தங்கள் தேங்கி விடுகின்றது. அதிகமாகத் தேங்கி விட்டால்…
1.இரத்தம் போகவில்லை என்றால் அழுத்தம் அதிகமாகி நெஞ்சு வலி வரும்.
2.மற்ற பாகங்களுக்கு இரத்தம் செல்லவில்லை என்றால் நெஞ்சு வலி வந்து விடுகின்றது.

நமது வாழ்க்கையில் நாம் அறியாமல் செயல்பட்டாலும் இதைப் போன்ற நிலைகள் ஏற்பட்டு விடுகிறது.

ஆகவே உடலில் வேதனை என்ற விஷத்தின் தன்மை அதிகரிக்கும் போது… கிட்னி இரத்தத்தைச் சரியாக சுத்திகரிக்கும் நிலையை இழந்து விடுகிறது.

அப்போது தெளிந்த இரத்தங்கள் செல்லாத பொழுது கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அது குறைவாகி விட்டால் மேலே எழுந்து செல்லப்படும் பொழுது இருதயத்தை உருவாக்கி அணுக்களும் பலவீனம் அடைகின்றது.

அது பலவீனம் அடைந்தால் மேலே இரத்தத்தைச் செலுத்தும் தன்மை குறைக்கப்படும் பொழுது தேங்கி நின்று வலியாகின்றது.
1.மேலே கொண்டு செல்லும் இயக்க உணர்வுகளுக்கு
2.இரத்தம் போக முடியவில்லை என்கிற பொழுது வெறும் வாயு தான் போகும்.

இது அடக்கும் தன்மை (கட்டாயப்படுத்தி) வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

சிறு மூளையில் உள்ள நுண்ணிய நிலைகளில் இந்த அழுத்தம் ஏற்பட்டால்
1.தலையிலே கிறுகிறுப்பு வருவதும் அத்தகைய இயற்கை நிலை வரும் பொழுது
2.நம் எண்ணங்களைச் செயல்படுத்த முடியாதபடி ஆகி விடுகின்றது.

ஒவ்வொரு நிமிடத்திலும் நம் வாழ்க்கையில் எதன் அழுத்தம் அதிகமோ அதற்குத் தக்கவாறு நம் உறுப்புகளின் இயக்கங்கள் மாறிக் கொண்டே வருகிறது.

இதை எல்லாம் சமப்படுத்த வேண்டுமா… இல்லையா…!