எண்ணத்தால் எடுக்கும் ஜெபம் கொண்டு… உணர்வின் எண்ணத்தையே ஞான வளர்ச்சி எண்ணமுடன் செயல் கொள்ளும் உயர் காந்த மின் சக்தியை… நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் வலுப் பெறும் தன்மை கொள்வதினால்… வளர்ச்சி பெறும் தொடர் நிலை யாது…?
இந்த உடல் என்ற பிம்பமானது ஒரு அடுப்பைப் போன்றது.
1.அடுப்பில் எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ... “அதனை வேக வைப்பது தான் அடுப்பின் வேலை…”
2.சேர்க்கப்படும் பொருளின் சேர்க்கையின் சுவை கொண்டு... “சுவை கொள்வது ஆத்மாவின் வேலை…”
மோதுண்டு...மோதுண்டு... எந்தச் சுவையிலெல்லாம் தன் வலுவைக் கூட்டி இந்த உயிராத்மா வலுப் பெற்று வலுக் கொண்டதோ அந்த ஒவ்வொரு சேர்க்கையிலும் தன் வளர்ச்சி முலாமின் சக்தியை எடுப்பது உடலாக இருக்கின்றது.
அதே சமயத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலின்… “அணுச் சேர்க்கை சமைத்தனுப்பும் வலுவைத்தான்” இவ்வுயிராத்மா தனக்கு வலுவாக்கிக் கொள்கின்றது,
1.உண்ணும் உணவையும்
2.எண்ணும் எண்ணத்தையும்
3.செய்யும் செயலையும் இந்த உடலானது எடுத்து
4.அவை வளர்க்கும் அணுக்களின் வளர்ச்சியிலிருந்து
5.தன் வலுவை இந்த உயிராத்மா வளர்த்துக் கொள்கின்றது.
இந்த உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களின் தன்மையை நாம் எப்படி உணர்வது…?
அதன் செயலை அறிய நம் ஆத்ம பலம் கூடியிருந்தால் தான் உணர முடியும்.
ஏனென்றால் மற்ற (ஒவ்வொரு) உயிராத்மாவின் வலுவைக் காட்டிலும் “ஜீவன் கொண்ட உயிராத்மாவின் சுழற்சி நிலை… ஜீவ சக்தியின் ஈர்ப்புடன் செயல்படுகிறது…”
அந்த வலுக் கொண்டு…
1.இந்த உடலையே காந்த மின் அலை ஈர்க்கக்கூடிய ஆத்மாவின் சுழற்சியாக
2.இந்த உடல் முழுமைக்கும் கவசம் போல் இந்த உடலைச் சுற்றிக் கொண்டுள்ளது.
இந்த உடல் பிம்பமானது இயந்திரச் செயலைத்தான் செய்விக்கின்றதேயன்றி இவ்இயந்திரத்தில் எதை எதைப் போட்டுச் சமைக்கின்றோமோ அதிலுள்ள சக்தியைப் பெறுவது இந்தக் கவசம் போல் அமைந்துள்ள உயிராத்மா தான்.
பசி தூக்கம் தாகம் இவற்றின் உந்தலின் எண்ணமும் இந்த ஆத்மாவின் செயலுக்குகந்த சக்தி நிலைக்கு (வளர்ப்பு நிலைக்கு) தேவைக்குகந்த செயலுக்கொப்பத்தான் பிம்ப உடலின் உணர்வை ஏற்படுத்திக் கொள்கிறது.
அந்தந்த உணர்வைக் கொண்டு எண்ணத் தோன்றல் உந்தப்பட்டு இவ்வெண்ணத்தால் செயல்படுத்துவது தான் இந்தப் பிம்ப உடலின் உடலுக்குகந்த நிலையை இவ்வுடல் எடுக்கும் முறை.
ஜீவாதாரத் தேவை என்பது இந்த உடலின் உந்தலின் செயல் உயிராத்மாவின் உந்தலுக்குகந்த செயல் தான். அதனால் தான் பல பெரியோர்கள்
1.இந்த உடலை வாடகை வீடு என்றும்
2.இந்த உடல் என்பது வெறும் சக்கைதான்… என்றும்
3.இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்றும்
4.ஆத்ம தியானத்தால் தான் இந்த மனித ஆத்மா வளர முடியும்…! என்று பகர்ந்தனர்... அதனின் உட்பொருளும் இதுவே.
பல மோதலில் வலுக் கொண்ட உயிராத்மா ஜீவாத்மாவின் தன்மைக்கு வந்து வார்ப்பாகி… வார்ப்பில் வலுவைப் பெறும் செயலுக்குத்தான்… ஒவ்வொரு உயிராத்மாவும் “பல பிறப்பிற்கு…” வருகின்றது.
இச்சுழற்சி ஈர்ப்பின் பிடியிலேயே மோதுண்டு...மோதுண்டு… வலுப் பெற்ற தன்மை கொண்டு… வலுவான காந்த சக்தி கொண்ட தன்மை கூடிய பிறகு தான்… இந்த உடல் பிம்பம் கொண்ட மனித ஆத்மாவின் எண்ண ஞான வளர்ச்சி செயல் நிலைக்கு இந்த ஆத்மா வலுப் பெறுகின்றது.
1.வலுக் கொண்ட உயிராத்மாவின் கவசம் பூண்ட ஜீவ பிம்ப மனிதன்
2.இந்த ஆத்ம உயிருக்கு மேலும் வலுத் தரக்கூடிய தன்மையை
3.தன் எண்ணத்தால் எடுக்கும் “உயிர் ஞானத்தை” வளர்க்கக்கூடிய தன்மை கொண்டு தான் வளர்க்க முடியும்.
மிருகங்களின் நிலைக்கு எண்ணம் இருந்தாலும்… ஞானம் இருந்தாலும்… பகுத்தறிந்து செயல்படக்கூடிய உயர் ஞானத்தை வளர்க்கும் ஆற்றல் வலு ஈர்ப்புச் செயல் அற்றதனால்… மனிதனை ஒத்த ஆத்ம வளர்ச்சியைப் பெருக்கக்கூடிய சக்தி அதற்கில்லை.
ஆனாலும் ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு தனித் தன்மை வாய்ந்த உயர்ந்த குண வார்ப்பு அமில ஜீவ சக்தித் தன்மை உண்டு.
மனிதன் தன்னுடைய சாதாரண வாழ்க்கை முறைக்கு மிருகங்களை உணவாகவும் தன் செயலுக்குகந்த நிலைக்கும் அதனைப் பயன்படுத்துகின்றான்.
ஆனால் உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகள்…
1.தான் உடலுடன் உள்ள பொழுதே தன் உயிராத்மாவின் பலத்திற்கு தன் வலுவைக் கூட்டிக் கொள்ள
2.எந்தப் புவியின் ஈர்ப்பில் தன் உயிராத்மாவானது வலுக் கொண்டு வலுப்பெற்றதோ
3.அந்த வலுவுக்குகந்த வலுத் தன்மை கொள்ள
4.இந்தப் புவியில் வளர்ந்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே
5.அணுவுக்குள் அணுவாக ஊடுருவி அணுவின் தன்மையிலெல்லாம் மோதுண்டு
6.இந்தப் புவி ஈர்ப்பில் அணு அமிலத் தன்மையின் பலவற்றின் நிலையையும்
7.தன் எண்ண ஞானத்தால் தன் உயிராத்மாவிற்கு வலுக் கொண்டனரப்பா…!