ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 13, 2015

குடும்பத்திலுள்ள கஷ்டங்களை எளிதில் போக்கிக் கொள்ளவே யாம் கூட்டுத் தியானத்தை அமைத்துள்ளோம் - ஞானகுரு

கேள்வி:
சிலர் கூட்டுத் தியானத்தில் ஆரம்பத்தில் கலந்து கொள்கிறார்கள். பழகிக் கொண்டபின் நாங்கள் தனியாகவே செய்து கொள்கிறோம் என்று போய் விடுகிறார்கள்.

கூட்டுத்தியானம் செய்யும்போது ஆரம்பத்தில் நிறையப் பேர் வந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது குறைந்துவிட்டது. விளக்கம் தேவை.

ஞானகுருவின் பதில்:
அதாவது சுய நலம் கொண்டவர்கள் என்று அர்த்தம். வீட்டில் வேறு சந்தர்ப்பமாக இருந்து தியானத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் அது வேறு.

இப்பொழுது ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடியுமோ? பல நூல்களைச் சேர்த்தால் கனமான பொருளைத் தூக்கலாம்.

அதைப் போன்று உங்கள் குடும்பத்திலுள்ள கஷ்டங்களை உங்களால் தாங்க முடியவில்லை. அதிலிருந்து மீள முடியவில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

நான்கு குடும்பங்கள் ஒன்று சேர்த்து யாம் சொல்லும் இந்தத் தியானத்தை எடுத்து அந்தக் குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும், குடும்பத்திலுள்ளோர் அறியாது சேர்ந்த தீய வினைகள், பாவ வினைகள், சாப வினைகள், பூர்வ ஜென்ம வினைகள் நீங்க வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

அந்தக் குடும்பத்தில் உள்ளோர் இதை நுகர நேருகின்றது. அந்தச் சக்திகள் கிடைக்கின்றது. அவர்களால் முடியாததை நான்கு குடும்பங்கள் ஒன்று சேர்த்துச் சொல்லப்படும்போது அவர்கள் இதைச் சுவாசிக்கிறார்கள்.

இந்த உணர்வுகள் அவர்கள் இரத்தத்தில் கலக்கப்படும்போது அந்த ஆற்றல் அங்கே  விளைகின்றது.
தீமைகளை அகற்ற முடிகிறது.
மன பலம் பெற ஏதுவாகிறது.

ஆனால், நான் தியானம் எடுத்துப் பழகி விட்டேன். நான் தியானித்து அடுத்தவர்கள் எதற்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் இது சுய நலத்தைத்தான் காட்டும். ஒன்று சேர்த்து வாழும் நிலை வராது.

ஏனென்றால், நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளுக்குள் உள்ள அணுக்களில் எதிர் நிலையான அணுக்களானால் மேல் வலி வருகின்றது. ஆகவே, எதிர் நிலையான நிலைகள் புற உணர்வால் நுகரப்பட்டதுதான்.

அதைப் போன்று, பிறருடைய வலுவான உணர்வுகளை எடுத்து உங்கள் குடும்பத்தில் சாப அலைகள், பாவ அலைகள், தீய அலைகள், பூர்வ ஜென்ம அலைகள் நீங்கவேண்டும் என்று சொல்லும்போது இது வலு கொண்டதாக மாறுகின்றது.

ஓருவன் திட்டினான் என்று அவனைத் திருப்பி எண்ணினால் நாம் சிந்தித்து ஒரு கணக்கையோ, ஒரு வேலையையோ செய்ய முடிவதில்லை. அவனை எண்ணும்போது அந்தக் குறைபாடு நாம் வாகனம் ஒட்டினாலும் இதே போல இயக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு ஒன்றுபட்டு வாழ்வதற்குத்தான் கூட்டு தியானங்களை அமைக்கச் சொல்வது. உங்களால் முடியவில்லை என்றாலும் நண்பர்களின் உணர்வுகள் வலு சேர்க்கப்படும்போது தீமைகளை எளிதில் அகற்ற முடியும்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீரின் தரம் குறையும். அதே போன்று சங்கடம் என்ற நிலையில் நீங்கள் இருக்கப்படும்போது தியானத்தின் மூலம் இத்தகையை வலு சேர்க்கப்படும்பொழுது இது வலிமை பெறுகிறது.

ஆனால், அவர்கள் கூட்டுத் தியானத்தில் கலந்துகொள்ளவிலலை என்று நாம் வருத்தப்படவேண்டியதில்லை.

ஏனென்றால் அவருடைய எண்ணங்கள் நாம் ஒன்று சேர்ந்து வாழும் நிலை பெற்று அனைவரும் நலம் பெறவேண்டும் என்று இல்லாதபடி நான் தியானத்தில் எடுத்தேன்.., எனக்குப் போதும்.., பிறருக்கு என்ன பார்ப்பது..?

நம் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் பிற மண்டலங்களிலிருந்து எடுக்கவில்லையென்றால் இந்தப் பிரபஞ்சம் வாழ முடியாது. அதனின் உணர்வுகளை எடுத்து வடிகட்டி நம் பிரபஞ்சம் வாழுகின்றது. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடியதை எடுத்துத்தான் மற்ற பிரபஞ்சங்களும் வாழ்கிறது.

இதைப் போல மனிதனுக்கு மனிதன் தனிப்பட்ட முறையில் எவரும் வாழ்ந்ததில்லை.

தீமை என்ற உணர்வுகளை எடுக்கும்போது
தீமை என்ற உணர்ச்சிகளை நமக்கு ஊட்டுகிறது.

அதே சமயத்தில், தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று ஒன்று சேர்த்த வலிமையின் தன்மை பெறப்படும்பொழுது தீமையிலிருந்து விடுபடும் உணர்வினை வளர்த்துக் கொள்கிறோம். அதற்காகத்தான் கூட்டுத் தியானங்களை வைத்தது.

இப்பொழுது சொல்வது அர்த்தமாகிறது அல்லவா. எல்லோரும் ஒன்று சேர்த்து நல்லதாக ஆகவேண்டும் என்ற உணர்வினைச் சொன்னால் இந்த வலிமையைப் பெற்று குடும்பத்திலுள்ள கஷ்டங்களைப் போக்கலாம் அல்லவா.

ஒருவருக்கொருவர் ஒன்று சேர்த்து உதவி செய்யக்கூடிய மனப்பான்மை வரவேண்டும் என்பதற்குத்தான் யாம் கூட்டுத் தியானங்களை அமைத்தது.