ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2015

மதி கொண்டு விதியை வென்றவர்கள்தான் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும்

நமது உயிர் ஒரு நட்சத்திரத்தின் தன்மை பெற்றது. கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் தூசுகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று அழுத்தமாகும்போது உயிர் உருவாகின்றது.

மின்னல் பாயும்போது அதிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகள் கல் மண் தாவர இனங்களில் இவைகளில் கலந்துவிடுகின்றது.

உயிர் எப்படித் துடிக்கின்றதோ, இதைப் போல இரண்டு நட்சத்திரங்களின் துடிப்பின் உணர்வலைகள் படரப்படும்போது தாவர இனங்களில் எதன் உணர்வு எதன் உணர்ச்சி கொண்டு அதிகரிக்கின்றதோ அதன் வலு கொண்டுதான் தாவர இனங்கள் விளைகின்றது. கல் மண்ணும் இப்படித்தான் விளைகினறது.

நம் உயிர் இந்தத் தாவர இனத்தை நுகர்ந்து உணவாக உட்கொள்ளும்போது இந்த உயிரின் துடிப்பு போன்று மூன்று என்ற நிலை வரும்.

இரண்டு நட்சத்திரங்களின் உணர்வுகள் எதிர்நிலையாகும்போது துடிப்பின் இயக்கச் சக்தி பெறுகின்றது.

தாவர இனத்தை நாம் நுகரப்படும்போது உயிருடன் வரும்போது அந்தத் தசைகள் உடலாகின்றது. அந்த உணர்வின் உணர்ச்சிகள் எண்ணமாகின்றது. எண்ணத்தின் உணர்வுகள் அணுத்தன்மையாக நம்மை இயக்கத் தொடங்குகின்றது.

இப்படித்தான் இயக்கங்கள் மாற்றங்கள் வருகின்றது.
கடவுள் என்ற தனித்தன்மை எதுவும் உண்மை இல்லை.
ஒன்று அல்ல கடவுள். பலவும் சேர்த்து ஒன்று.
அதாவது மூன்று நிலைகள் கொண்டு ஒரு உணர்வின் சத்தாகும் போது எந்தச் சத்தைக் கவர்ந்ததோ அதனை அதே உணர்வை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

இந்த உண்மைகளைக் கண்டவன் அகஸ்தியன். அவன் தன் வாழ்நாளில் நட்சத்திரங்களின் உணர்வைத் தனக்குள் நுகர்ந்தான்.

உயிர் எப்படி ஒளியானதோ இதைப் போல அந்த 27 நட்சத்திரங்களின் உணர்வினைத் தன் உடலிலுள்ள அணுக்களுக்குள் சிறுகச் சிறுகச் சேர்த்தான். மின்னல்கள் அது வெளிப்படும்போது அதை நுகர்ந்து நுகர்ந்து தன் உடலிலே மாற்றினான்.

ஆகவே, அந்த உணர்வின் அணுக்களை உயிரைப் போன்றே மாற்றியமைத்துத்தான் இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அப்பொழுது அதற்கு உணவு எது?

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்துவதை அந்த உணர்வுகளை உணவாக எடுத்துக்கொண்டு நஞ்சினை மாற்றி ஒளியாகச் செயல்படுத்துகின்றது.

சூரியன் தனக்குள் வெளிப்படும் பாதரசத்தால் தாக்கி நஞ்சினைப் பிரித்துவிடுகின்றது. மனிதனோ தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துவரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றான்.

நஞ்சினை நீக்கிடும் உணர்ச்சியை ஊட்டுகிறது. கார்த்திகேயா என்று நன்மை தீமை என்ற நிலையில் சர்வத்தையும் நாம் அறிந்துகொள்ளும் சக்தி பெறுகின்றது  தீமையை நீக்க பேருண்மையை நமக்குள் பெறவேண்டும்.

நாம் ஒன்றைப் பார்த்தால் நம் உடலுகுள் விதி என்ற அமைப்பு வந்துவிடுகிறது. அந்த உணர்ச்சியின் வேகம் கூடினால் அதை அதிகமாக வளர்த்தோம் என்றால் இந்த விதி நமக்குள் தீய விளைவுகளை உருவாக்கும்.

நாம் எத்தனை உணர்வுகளை நமக்குள் பாய்ச்சுகின்றோமோ
இவை அனைத்தும் ஊழ்வினை என்ற வித்தானாலும்
அது விதியாகவே மாறிவிடுகின்றது.

அதனதன் குணங்களில் அதனதன் நிலைகளில் வளர்க்கப்படும்போது எதன் எதன் இனம் எதன் கூட்டமாக இருக்கின்றதோ அதன் சக்திதான் வளர்கின்றது. இப்படித்தான் அந்த உணர்வின் தன்மைகள் விதியாகின்றது.

ஆனால், மனிதனுக்கோ விதியை மதியால் வெல்லக்கூடிய திறன் இருக்கின்றது. அந்த மதி கொண்டு விதியை வென்றவர்கள் தான் இன்று அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருப்பதும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும்.

ஆகவே இதைப் போன்ற உணர்வின் தன்மைகளை நமக்குள் விதியாக்குவதற்கு உயர்ந்த ஞானிகள் காட்டிய அருள்வழி கொண்டு நாம் மதி கொண்டு இந்த உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கினால் தீமை செய்யும் உணர்வுகளிலிருந்து விடுபட முடியும்.

நாம் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி
இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.