காலையில் 5 மணியிலிருந்து 6½ மணிக்குள் விழித்தவுடன் உங்கள் நினைவு எங்கே இருக்க வேண்டும்?
“ஈஸ்வரா” என்று உங்கள்
உயிருடன் ஒன்றி இருக்க வேண்டும்.
உங்களை உருவாக்கியது யார்? அம்மா அப்பா. அவர்களை நினைத்து வணங்க வேண்டும்.
அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று
உங்கள் கண்ணின் நினைவை புருவத்தியில் வைத்து
உயிருடன் தொடர் கொண்டு
துருவ நட்சத்திரத்தை எண்ணிப் பழக வேண்டும்.
கண்கள் விழித்தவுடனே இப்படிச் செய்யவேண்டும்.
இதற்காக வேண்டி தியானம்
செய்ய ஒரு இடம் வேண்டியதில்லை. இதில் என்ன கஷ்டம் வந்தது. தியானம் என்று சொன்னால்
பயந்து போய் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை (CONCENTRATION) என்று உழட்ட வேண்டியதில்லை.
காலையில் விழித்தவுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் எடுத்து உங்கள்
உடலுக்குள் செலுத்தி ஜீவ அணுக்கள், ஜீவான்மாக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.
திரும்பவும் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்துங்கள். மீண்டும்
அதைக் கவர்ந்து கண்ணின் துணை கொண்டு உங்கள் உடலுக்குள் பாய்ச்சுங்கள்.
இதைத் திருப்பித் திருப்பி ஐந்து தடவையாவது
சுழற்றுங்கள். இந்த எண்ணத்தை
உங்கள் உடலுக்குள் கலந்து கொண்டு வாருங்கள். ஒரு ஐந்து நிமிடம் முடியாதா?
கண்களை மூடவேண்டாம்,
கண்களைத் திறந்தே அதைப் பெறவேண்டும் என்று எங்குங்கள்.
ஐந்து நிமிடம் ஆனவுடன் கண்களை மூடுங்கள். உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின்
உணர்வு போனவுடனே ஆனந்தமாக இருக்கும், பார்க்கலாம் நீங்கள்.
(உடலில்) தண்ணீர் விட்டு அழுக்கு போனதும்
“சொடக்” எடுத்த மாதிரி இருக்கின்றதோ
இரவு படுத்த இந்த சங்கட உணர்வுகள் இதெல்லாம் காலையில் விழித்தவுடன் இப்படி நீங்கள்
எண்ணினால் “சொடக்” எடுத்த மாதிரி இருக்கும். இதை நன்றாகத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
எடுத்து எதை நினைக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் மனைவிக்குக்
கிடைக்க வேண்டும். அந்த அருள் சக்தி பெறவேண்டும், மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும்
என்று கணவர் ஒரு ஐந்து நிமிடம் எண்ண வேண்டும்.
இதே மாதிரி கணவர் வேறு ஊரில் இருந்தாலும் பெண்கள் இதைப் போன்று எண்ணி கணவர்
உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி படரவேண்டும்.
அவர் செய்யக்கூடியதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி
அவர் பெறவேண்டும் என்று பெண்கள் எண்ண வேண்டும்.
காலையில் விழித்தவுடன் இரண்டு பேரும்
இப்படி
உணர்வை எடுத்துப் பாய்ச்சிப் பழகவேண்டும்.
வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நாங்கள் வாழவேண்டும், நளாயினியைப் போன்று நாங்கள்
ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவேண்டும், சாவித்திரியைப் போன்று நாங்கள் ஒன்றி வாழவேண்டும்.
எங்கள் இரு மனமும் ஒன்றாக வேண்டும்,
இரு எண்ணங்களும் ஒன்றாக வேண்டும் என்று எண்ணினால்
இரண்டு உயிரும் ஒன்றாகிவிடுகின்றது.
நீங்கள் காலையில் காலையில்
இதே மாதிரிச் செய்து பாருங்கள். அங்கே கணவருக்கு ஒரு அடி விழுகிறதென்றால் இங்கே அடி
விழுந்த மாதிரித் தெரியும். மனைவிக்கு இங்கே சங்கடம் அதாவது ஒரு அடி விழுகிறதென்றால்
கணவருக்கு அங்கே தெரியும்.
இதை நீங்கள் பார்த்துக்
கொள்ளலாம். அந்தச் சங்கடத்தை நீக்கவேண்டும் என்ற உணர்வுகள் அங்கே தெரியும். இதிலே மாயமும் இல்லை மந்திரமும் இல்லை.
உங்கள் உணர்வுகள் ஞானிகள்
பெற்ற உண்மை வழியில் நீங்கள் எடுத்தீர்கள் என்றால் அந்த அருளாற்றலைப் பெறமுடியும்.
ஒரு மான் புலியைப்
பார்த்து மானின் உணர்வு புலியாகின்றது. இது இயற்கையின் நியதி.
இதைப் போல அந்த் அருள்ஞானிகளின்
அருள் உணர்வை நீங்கள் எடுத்துக் கொண்டால் அவர்கள் எப்படி ஒளியின் சரீரமாக ஆனார்களோ
அந்த உணர்வை நீங்கள் வளர்த்தால் நிச்சயம் ஒளியின் சரீரம் ஆகின்றீர்கள். பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.
இதில் ஏதாவது கஷ்டம்
இருக்கின்றதா?
நாங்கள் தியானித்துப்
பார்க்கின்றோம், எங்களால் “CONCENTRATION” பண்ண முடியவில்லை
அதெல்லாம் நீங்கள் எண்ணவேண்டியதே இல்லை. யாம் சொன்ன இந்த முறைப்படி நீங்கள் எண்ணிக்
கொண்டே வாருங்கள்.
இந்தச் சக்தி உங்களிடம் கூடுகிறதா.., இல்லையா..? என்று பாருங்கள்.