ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2015

ஞானகுரு காட்டிய வழியில் எனக்குள் பெற்றுக் கொண்டிருக்கும் அனுபவம்

எனக்கு கம்ப்யூடரைப் பற்றித் தெரியாது. அது சம்பந்தமாகப் படிக்கவுமில்லை. எப்படி வேலை செய்கிறது என்பது SOFTWARE/HARDWARE எதுவும் தெரியாது.

மற்றவர்கள் வேலை பார்ப்பதைப் பார்த்து சிறுகச் சிறுகப் பழகியவன் தான். (2005-2010). 2011க்கு அப்புறம் அதிகமாக உபயோகிக்கத் தொடங்கியவன். சாமிகள் உபதேசங்களை E-MAIL மூலமாகவும் BLOGGER  2012லிருந்து முழுவதுமாக செய்து வந்தேன்.

சாமிகள் உபதேசம் சம்பந்தமாக கம்ப்யூட்டரில் எந்த வேலை பார்த்தாலும் என் இரண்டு கையையும் கம்ப்யூட்டரின் மேல் வைத்து கண்களை மூடி விண்ணிலே நினைவைச் செலுத்தி அகஸ்தியரை எண்ணி எண்ணித்தான் வேலை செய்து கொண்டிருப்பேன்.

சிறுகச் சிறுக அந்த மகரிஷிகளின் தொடர்பு ONLINE CONNECTION எனக்குள் இணைந்து மற்றவர்கள் யாருடைய உதவியும் இல்லாமலே பல புதிது புதிதாக வேலைகள் (சாமிகள் உபதேசத்தைத் தொகுக்கும்) நடக்கத் தொடங்கியது. என்னால் மிகத் தெளிவாக அதை உணர  முடிந்தது.

எதைச் செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? எப்படிச் செய்தால் வேலை நடக்கும்? ஏன் செய்ய வேண்டும்? செய்தால் என்ன நன்மை? யாருக்கு நன்மை? எப்படி நன்மை? இதற்கெல்லாம் விண்ணிலிருந்து விடைகள் வந்து கொண்டேயிருக்கும்.

உணர்வின் ஒலிகள் உயிரிலே மோதி அந்த உணர்ச்சிகள் இயங்கி அது செயலாகி செயலான பின் தான் எனக்கே இது எப்படி நடந்தது/முடிந்தது என்ற நிலையை உணர முடிந்தது.

தொடர்ந்து அதிலேயே வேலை பார்த்த்தால் அந்தக் கம்ப்யூட்டர் 2015 ஜனவரியில் ஒரு பழுது ஏற்பட்டது. கடையில் கொடுத்து சரி செய்தேன். நான்கு நாளில் மீண்டும் பழுதாகியது. அதே கடையில் மீண்டும் சரி செய்து கொடுத்தார்கள்.

இனிமேல் இது பழுதானால் அதிகமான விலை கொடுத்து பொருள்களை மாற்றி சரி செய்ய வேண்டும். அதற்குப் பதில் புதிது வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

சரி என்று உபயோகித்துக் கொண்டே இருந்தபோது மே மாதக் கடைசியில் ஒரு நாள் வீட்டில் ஒரு பிரச்னை பற்றிக் காரசாரமாகப் பேசிவிட்டு கம்ப்யூட்டரில் வேலை செய்யலாம் என்று வந்தேன்.

அது வரை நன்றாக இயங்கிக் கொண்டிருந்த கம்ப்யூட்டர் மீண்டும் அதே மாதிரி பழுதாகி விட்டது. சரி நாமே சரி செய்ய முயற்சி செய்வோம் என்று இரண்டு கைகளை வைத்து கண்களை மூடி விண்ணிலே செலுத்தி அகஸ்தியரை எண்ணி தியானித்தேன்.

பின், கம்ப்யூடரை சரி செய்ய என்ன செய்யவேண்டும் என்ற உபயாங்கள் தோன்றியது. ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கினேன். திருமபத் திரும்ப பழுதாவதும் சரியாவதுமாக மாறி மாறி இயங்கிக் கொண்டேயிருந்தது.

நானும் விடாப்பிடியாக அதை விடவில்லை. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கருவி அதுவாக எப்படி பழுதாகும்? பின் அதுவே தானாக எப்படி சரியாகும் என்ற நிலையில் உணர்வினை விண்ணிலே அகஸ்தியரை எண்ணிச் செலுத்தி சரி செய்யவேண்டும் என்ற வேக உணர்வில் செலுத்தித் தியானித்துக் கொண்டேயிருந்தேன்.

விண்ணின் ஆற்றல்மிக்க நிலைகளை மிக நுண்ணிய உணர்வலைகளை, ஊடுருவிச் செல்லும் சக்தி வாய்ந்த ஆற்றல் பெறவேண்டும் என்று ஒவ்வொரு தடவையும் மீண்டும் மீண்டும் பழுதாகும் பொழுதெல்லாம் இந்த வலுவைக் கூட்டிக் கொண்டேயிருந்தேன்.

இது மாதிரி ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை அல்ல. எனக்கே தெரியாது எத்தனை தடவை பழுதாகியது என்று. ஆனால், மீண்டும் அது இயங்கிக் கொண்டுதான் இருந்தது.

எனக்கே இது ஒரு பெரிய அதிசயமாக இருந்தது. முதலில் விளையாட்டாக சரி செய்யலாம் என்ற எண்ணமே இருந்தது. பின் அதுவே வலுவாகி வீரியமாக மாறி இதை விடுவதாக இல்லை, நன்றாக ஆகும் வரை விடக்கூடாது என்ற எண்ண வலு அதிகமாகிவிட்டது.

பழுதாகும்போது சோர்வடைவதும் சிறிது நேரமான பின் வீரியமான உணர்வாக மாறி எப்படியும் சரி செய்யவேண்டும் என்ற உணர்ச்சி வலுவாகி அதன் வழியில் இயக்கும் போது சரியாவதுமாக இது மாறி மாறி நடந்து கொண்டே இருந்தது.

ஆனால், தினசரி வேலை யாவுமே (ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) இந்தக் கம்யூட்டர் மூலமாக நடந்து கொண்டிருந்தது. ஓரிரு  நாட்களைத் தவிர.

புதிதாக வரும் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைக் கூட இதிலே கையாளக்கூடிய அளவிற்கு மேலும் மேலும் ADVANCE ஆக வேலை செய்து கொண்டே உள்ளது.

ஆனால், ஆரம்பத்தில் கடையில் கொடுத்து சரி செய்த பிறகு இதிலே ஒரு பொருளைக் கூட இன்னும் மாற்றவில்லை, ஒரு செலவும் செய்யவில்லை. ஆனால், ADVANCE ஆகிக் கொண்டேயுள்ளது.

ஒவ்வொரு முறையும் பழுதடையும் பொழுதும் பின்னாடி சென்ற மாதிரித் தெரியும். ஆனால், சரியான பின் பார்த்தால் ஏதாவது ஒரு முன்னேற்றம் தெரியும்.

எனக்கே இது ஒரு பழக்கமாகிவிட்டது. இந்த அனுபவம் ஒரு சிறு உதாரணம் தான் (SAMPLE).

வாழக்கையில் சந்திக்கும் எத்தகைய நிலைக்கும் இதே முறையைக் கையாளுகின்றேன். இதே போலத்தான் அந்த நிலைகளும் மகிழ்ந்திடச் செய்யும் நிலையாக நடந்து கொண்டேயுள்ளது. 

ஆக, நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் உபதேசித்த முறைப்படி அகண்ட அண்டத்திலிருந்து வரும் விஷத்தை உணவாக உட்கொண்டு உணர்வை ஒளியாக மாற்றிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை, அகஸ்தியனின் உணர்வை நாம் நுகர்ந்தால் எத்தகையை நிலை வந்தாலும் எத்தனை முறை வந்தாலும் அதை (அந்த இருளை) ஒளியாக மாற்றிடும் நிலையையே காட்டுகிறது.

பேரின்ப பெரு வாழ்வாக, பேரானந்த நிலையாக, பெரு மகிழ்ச்சி பெறும் நிலையாக வளர்ந்து கொண்டேயுள்ளது. குருவின் அருளால் ஈசன் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயத்திலும் அந்த அகஸ்தியனின் பூரண சக்தி படர்ந்து அனைவரும் அகஸ்தியரைப் போன்று உலகைக் காத்திடும் சக்தியாக மலர்ந்திட வேண்டும் என்று என் உயிரை, தாய் தந்தையரை, முன்னோர்களை மகரிஷிகளை வேண்டி விரும்பிப் பிரார்த்திக்கின்றேன்.


                ஓம் ஈஸ்வரா குருதேவா. ஓம் ஈஸ்வரா குருதேவா.