3000 ஆண்டுகளுக்கு முன் வியாசகன் தான் கடலில் மீன்
பிடிக்கச் செல்லும்போது கடலிலே விழுந்து விடுகின்றான். அப்படித் தத்தளிக்கும்போது
தான் எப்படியும் மீளவேண்டும் என்ற மனப் போராட்டம்
அதிகமாகின்றது.
அப்பொழுது கடல் வாழ் மீன் இனம் இவனைக் காப்பாற்றிக்
கரை சேர்க்கின்றது. கடல்
வாழ் மீன் இனம் இவனைக் காத்தபின் அவன்
சிந்திக்கின்றான்.
நாம் எதைக்
கொன்றோமோ அந்த மீன் இனமே தன்னைக்
காத்தது என்று திரும்பிப் பார்ர்கும்போது
தன் தவறை உணர்ந்து உயரந்த
குணங்களை எண்ணி ஏங்குகின்றான்.
அன்று வாழ்ந்த பெரும்பகுதி மக்கள் அனைவருமே சூரியனை
வணங்கிப் பழகியவர்கள். அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி தான் இப்படித் தவறு செய்தேன், ஆனால், இந்த மீன் இனம் என்னைக்
காத்தது என்ற உணர்வை மேல் நோக்கி வானிலே நினைவைச் செலுத்துகின்றான்.
இது நடந்தது காலை நான்கு மணி. கடல் பகுதியில்
செல்பவர்கள் நான்கு மணிக்கெல்லாம் துருவ
நட்சத்திரத்தை நன்றாகப்
பார்க்க முடியும்.
அதே சமயத்தில் சூரியன் அந்த துருவ நட்சத்திரம்
வெளிப்படுத்தும் உணர்வைக் கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வரும்
நேரம் அது.
அந்த நேரத்தில் வியாசகன் இவ்வாறு எண்ணுகின்றான்.
அப்படி எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவன் நுகர நேருகின்றது.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியில்
வாழ்ந்த அகஸ்தியன் அகண்ட அண்டமும் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இருக்கிறது
என்று அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை
வியாசகன் நுகர்கின்றான்.
வான்வீதியில் உருவான உயிர் முதலிலே கடலில் தான்
விழுகின்றது. வான்வீதியிலிருந்து பல உணர்வுகள் இங்கே வரப்படும்போது சூரியனுடைய
ஒளிக்கற்றைகள் அது பட்டு சிறுகச் சிறுக விளைந்து பாஷாணமாக விளைகின்றது.
பாஷாணத்தின் சேர்க்கை மின்னல்கள் தாக்கும்போது
ஒவ்வொரு உணர்வுகளும் வந்து கடலுக்குள் மின்னல்கள் தாக்கப்படும்போது மணலாகின்றது.
மின்னல்கள் ஊடுருவும்போது 27 நட்சத்திரங்கள் அதில்
எதனெதன் உணர்வுகள் இது அதிகமாகின்றதோ அதற்குத்தகுந்த செடிகளின் கருக்கள்
உருவாகின்றது.
அப்பொழுது கடலுக்குள் பலவிதமான செடி கொடிகள்
உருவாகின்றது. அதை உணவாக உட்கொள்ளும் நிலையில் பல உயிரினங்கள் உண்டு. ஆக எதை எதை
எடுத்து எதன் வழியில் உருவானதோ அதை உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.
இப்படித்தான் கடல் வாழ்நிலைகள் உருவானது என்று இந்த
உண்மைகளை முதன் முதலில் கண்டறிந்தவன் அந்த அகஸ்தியன்.
அவன் கண்ட பேருண்மைகளை வியாசகன் அங்கே காணுகின்றான்.
அவன் சாதாரண செம்படவன் தான்.
ஆக, இவன்
சந்தர்ப்பம்
அகஸ்தியன் கண்ட உண்மைகளைக் காணுகின்றான். கடலிலே தத்தளிக்கும்போது மீன் இனம்
காக்கும்போது இவனுக்குள் இந்த உணர்வுகள் வருகின்றது. அப்பொழுதுதான் அந்த வியாசகன்
தன் நிலையில் உணர்கின்றான்.
உதாரணமாக ஒரு மின்ன்ல்கள் தாக்கப்படும்போது நீர் நிலைகளில் இந்த உப்புச் சத்து
இருப்பதனால் அந்த உப்புச்சத்துக்குள் இது அடங்கப்பட்டு எலக்ட்ரிக் என்ற
விஷத்தன்மைகள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன.
அப்படி உருவானபின், அதில் உருவான மீன் இனங்கள் நீர் எதிர் நிலையாகும்போது
எதிர் நிலையில் வரப்படும்போது அதற்கு
கரண்டை உற்பத்தி செய்து
எதிர் நீச்சல் அடிக்கும் திறன்
வருகின்றது.
இப்பொழுது ஒரு ஜெனெரேட்டரில் எப்படி வைத்துள்ளார்கள்? இரண்டு மேக்னட் அதாவது சுற்றுவதில் ஒரு
காந்தப்புலனும், பாடியுடன் சேர்த்து ஒரு காந்தபுலனும் இடைவெளி விட்டு அதற்கு
மத்தியிலே வயர்களை இணைத்து விடுகிறார்கள்.
ஆகவே, சுழற்சியால் இழுக்கும்போது அந்த காந்தப்புலனறிவை இணைத்து கரண்ட் ஆக உற்பத்தி
செய்கின்றது. இதைப் போலத்தான் நம் உயிர் - அதனுடைய தொடர் வரிசை தான் நம்முடைய அணுக்களுடைய
இயக்கத் தொடரும் வருகின்றது.
மீன் இனம் தனக்குள் இந்த உணர்வின் சக்தி கொண்டு அது ஒவ்வொரு விதமான நிலைலகளில்
தன் உணர்வுகளுக்குத் தக்கவாறு செயல்படும்.
அதாவது சில மீன் இனங்கள் தனக்கு எதிரிகள் என்றால் பயமுறுத்துவதற்காக வேண்டி ஒலி
அலைகளை எழுப்பும்.
தன் உணவுக்காகத் தேடவேண்டும் என்றால் வெளிச்சத்தைப் போட்டுத் தன் இரையாக எடுத்துக்
கொள்ளும் மீன் இனங்களும் உண்டு.
இப்படி இயற்கையில் செயல்படும் நிலைகளில்
கடவுள் என்ற தனித்தன்மை எங்கேயும் இல்லை.
இதையெல்லாம் கண்டுணர்ந்த அகஸ்தியனின் உணர்வுகளை வியாபித்திருக்கும் உணர்வை வியாசகன் கண்டுண்ர்ந்தான். மெய்ஞானியாக
ஆனான்.