இனி வரும் காலங்கள் மிகவும் கடுமையாக இருக்கும். அதிலே மனிதனுக்கு மனிதன்
கொன்று தின்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏனென்றால், இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கிறது. இறந்து போனவரை அங்கே
பெட்டிகளில் தான் புதைப்பார்கள். அது நல்ல உடலாக நோயில்லாமல் இறந்திருந்தால் அதைத்
தோண்டி எடுத்துச் சமையல் செய்து சாப்பிடுகிறார்கள்.
நம் நாட்டிலிருந்து (Agriculture) வேலைக்காக அங்கே தென்னாப்பிரிக்கா பக்கம்
சென்றிருக்கிறார்கள். அங்கே உள்ளவர்களுக்கு இந்த மாமிசம் சாப்பிடுவது பழக்கமாக
இருந்திருக்கிறது. இதை நம்மவர்கள் பார்க்கிறார்கள்.
ஆக, இடுகாட்டுக்குப் போவது, புதைத்த பெட்டியை எடுத்து அதற்குள் இருக்கும்
சதைகளை எடுத்துச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.
அங்குள்ளவர்கள் நம் ஆள்களிடம் கேட்கிறார்கள். இந்தியாவிலிருந்து
வந்தார்கள் என்றால் ஏன் உப்பு கக்கிறது? இங்கே உள்ளவர்களைச்
சாப்பிட்டால் உப்பு இல்லையே என்று கேட்கிறார்கள்.
ஏனென்றால் அங்கே உள்ளவர்கள் உப்புப் போட்டு உணவு உட்கொள்வதில்லை. ஆனால், நாம்
உப்பு போட்டுத்தான் உணவை உட்கொள்கின்றோம்.
ஆக, இதை நம் ஆள்கள் கேட்டவுடன் என்ன ஆகிவிட்டது? நமக்கு இந்த உத்தியோகம்
வேண்டாம். கடைசியில் இவன் பசிக்கு நம்மை அடித்துவிடுவான்.
யதார்த்தமாக இருப்போம். இங்கே சாப்பிடப் போகும்போது செத்துப் போனான், அதனால்
சாப்பிட்டார்கள் என்று சொல்வார்கள். ஆகவே நமக்கு இங்கே பாதுகாப்பில்லை, இந்த வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு இங்கே
வந்துவிட்டார்கள்.
இந்த மாதிரி நிலைகள் உலகில் இருக்கின்றது. நம் நாட்டிலும் வருகின்றது. பத்திரிக்கையில்
படிக்கிறோம். ரஷ்யாவில் தன் கூட வந்த நண்பனை பசி பொறுக்க முடியாமல் அடித்துச்
சாப்பிட்டான் என்று.
நீ உணவில்லாமல் சாகப்போகிறாய். ஆக நான் உன்னைக் கொன்றுவிட்டுச் சாப்பிடுகிறேன்
என்ற நிலையில் நடக்கின்றார்கள். விஞ்ஞான அறிவு அவ்வளவு வளர்ந்த அந்த நாட்டில் இது
நடந்தது.
இதைப் போன்ற நிலைகள் எதிர்காலத்தில் மிகவும் கடுமையான நிலையில்
பரவிக்கொண்டுள்ளது. (உபதேசித்த
வருடம் – 1999)
இத்தகைய கொடுமையான நிலைகளிலிருந்தெல்லாம் நாம் மீள்தல் வேண்டும் என்பதற்காகத்தான்
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பற்றி அடிக்கடி உபதேசிக்கின்றோம்,
உங்கள்
நினைவாற்றலை அங்கே துருவ நட்சத்திரத்திற்கே கொண்டு போகும்படி செய்கிறோம்.
கணவன் மனைவி நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துருவ நட்சததிரத்தின் பேரருள் பேரொளி
பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகவேண்டும்.
கணவன் பெறவேண்டும் என்று மனைவி எண்ணுவதும், மனைவி பெறவேண்டும் என்று கணவன் எண்ணுவதும்
எந்த அளவிற்கு நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு வலு கிடைக்கின்றது.
செடி கொடி மற்ற இனங்கள் அனைத்துமே
ஆண் பெண் என்ற உறவாடலில் தான் தன் இனத்தைப் பெருக்குகின்றது.
ஆண் பெண் இரண்டு பேருமே துருவ நட்சத்திரத்தின்
ஆற்றலைப் பெறவேண்டும் என்று எண்ணும்போது இரண்டு
பேருடைய உணர்வு அந்த ஒளியின் உணர்வாகக் கருவாகத் தொடங்கிவிடுகிறது.
இரண்டு பேரும் அந்த துருவ நட்சத்திரத்தின் பால் அந்த உணர்வை எடுத்துக் கொண்டால்
மற்ற 27 நட்சத்திரங்களிலிருந்து வருவதை எடுக்க முடியும்.
27 நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும்
ஒளிக்கற்றைகளை அந்த அகஸ்தியன் நுகர்ந்தான்.
அதைத் தன் உடலிலுள்ள அணுக்களுக்கு உணவாகக் கொடுத்து நஞ்சினை அடக்கினான்.
தன் உணர்வின் அணுக்களை
உயிரைப் போன்றே ஒளியாக மாற்றினான்
அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை நீங்கள் பெறவேண்டும்.
அதன் வழி சென்றால் எத்தகையை கடுமையான நிலைகளிலிருந்தும் நீங்கள் மீள முடியும்.
உங்களைக் காத்து, குடும்பத்தைக் காத்து, உலகை காத்திடும் சக்தியாக நீங்கள் வளர முடியும்.
உங்கள் வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தினை எண்ணுங்கள்.
துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வலைகளை நுகருங்கள் அதை உங்கள் உயிர் வழி (புருவ
மத்தியிலிருந்து) சுவாசியுங்கள்.
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின்
ஆற்றலைப் பாய்ச்சுங்கள்.
இரு உயிரும் ஒன்றனெ இணையும்,
பேரொளியாக மாறும், எமது அருளாசிகள்.