Wednesday, April 15, 2015

தெய்வீக அன்பையும் தெய்வீக பண்பையும் தெய்வீக அருளையும் நாம் பெறவேண்டும்

கேள்வி:
இன்று தியான முறைகளை பலர் சொல்லிக் கொடுக்கிறார்கள். வியாதிகளைப் போக்கலாம். மன அமைதி பெறலாம் என்று எத்தனையோ மார்க்கங்களைக் காட்டுகிறார்கள்.

மேலும் உடலுக்குள் இருக்கும் சக்தியை மேலே ஏற்றலாம் என்று எத்தனையோ பயிற்சிகளையும் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் பின்பற்றலாமா?

ஞானகுருவின் பதில்:
அதாவது இதையெல்லாம் சொல்லப் போனால் அடுத்தவர்களைக் குறை கூறுவதாகும். நமக்குள் நாம் பெறவேண்டிய மார்க்கங்களைச் சொன்னால் போதும்.

அவர்கள் செய்த உணர்வின் தன்மை அதன் உணர்வு கொண்டு
அவரவர்கள்தான் அறிய வேண்டுமே தவிர
நாம் தவறென்று குறையாகக் கூறினால் நம் மேல் வெறுப்பும்
நாம் சொல்லும் நல்ல உயர்ந்த கருத்துக்களை
ஏற்றுக்கொள்ளும் பண்பையே இழக்கச் செய்துவிடும்.

ஆகையினால் இதைக் கேட்டறியும் முறைகளே கூடாது.

நம் பாதையை வெளிப்படுத்தி இதனால் வரும் நன்மை தீமைகளை வெளிப்படுத்தினால் அவர் பதிவு செய்உணர்வு கொண்டு இழுக்கப்படும்போது அவருடைய அனுபவம் தீமையிலிருந்து விடுபடும் அனுபவமாக மாறும்.

பிறருடைய உணர்வுகளை நாம் குறை கூறினால் “ஏன்..,? இவர்கள் நம்மை விட கொஞ்சம் உசத்தியா..,?” என்று மனதில் அவர்கள் ண்ணினால் போதும்,

நம்முடைய உணர்வுகள் என்ன ஆகும்?

நாம் எதைச் சொன்னாலும் அது ஏற்கும் தன்மையை விடுத்து வெறுப்பின் உணர்வைக் கூட்டும்.

இப்பொழுது ஒரு குடும்பத்தில் பையன்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மேல அன்பு செலுத்துகிறார்கள். அன்பு செலுத்தும் பையன் பல தவறுகளைச் செய்கிறான்.

மற்றொருவர் மேல் வெறுப்பைச் செலுத்துகிறார்கள் ஏனென்றால் “சொன்னபடி அவன் கேட்பதில்லை” என்று அவன் மேல் வெறுப்பு கொள்கிறார்கள்.

ஆனால், வெளியிலே அவன் நல்ல பண்புள்ளவனாக இருக்கின்றான்.

தான் பேசிய உணர்வின் தன்மை கொண்டு வெறுப்பின் உணர்வு பதிவான பின் எதைக் கூப்பிட்டு விவரம் கேட்டாலும் அவன் சரியாகச் சொல்வதில்லை, செயல்படுத்துவதில்லை.

ஆனால் அவன் வெளியுலகில் பிறருக்கு பல நன்மைகளைச் செய்கிறான். நன்மை செய்யும்போது என்னாகின்றது?

அங்கிருந்து ஒரு மனிதர் வருகிறார். ஐயா, இந்தப் பிள்ளை யார்? என்று கேட்கிறார்.

ன்யா..,? என்று தந்தை கேட்கிறார். ஏனென்றால் அவன் மேல் வெறுப்பாக உள்ளதால் ஏன்யா..? என்று அதட்டிக் கேட்கிறார்.

யா.., மகராசன்! என் பிள்ளையை இந்தப் பையன் காப்பாற்றினான் என்கிறார்.

ப்படியா..,? நாளைக்கு ஏதாவது ஒன்று சொன்னான் என்றால் என்னிடம் வந்து சொல்லாதீர்கள். னென்றால் அவன் மேல இருக்கிற உணர்வுக்குத் தக்க, ன் பிள்ளைதான்.., அவன் நல்லது செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவன் சேஷ்டை செய்வான்; தவறு செய்பவன் என்று சுட்டிக் காட்டும் அந்த உணர்வுகள்தான் அங்கே பாய்கின்றது.

ஆனால், அங்கே அவனைப்பற்றி நல்லதாகச் சொல்லி விட்டு விட்டுப் போய்விடுகிறார்கள்.

ஏண்டா டேய்..? என்னடா திருட்டுத்தனம் பண்ணினாய்..,? யாரைடா ஏமாற்றினாய்” என்று அந்தப் பையனைக் கேட்கிறார்கள். அந்தப் பையன் மேல் வெறுப்பாக இருப்பதால் னைத் தப்பு சொன்னால் பராவாயில்லை என்கிறார்கள்.

ஆனால், அன்பு செலுத்தும் பையனைக் காண்பித்து “இவன் தப்புப் பண்ணமாட்டான்..,” என்றுதான் சொல்வார்கள்.

பின், அவர்கள் போன பிற்படு ஏண்டா பார்த்தாயா? உன்னைக் குற்றவாளி என்று சொல்கிறார்கள். ஏண்டா இப்படிச் செய்கிறாய் என்பார்கள்.

ஆக, நல்லது செய்தவனுக்கு அந்த நிலை இல்லை. ஆனால், பற்று கொண்ட பையன் மேல் உள்ள குற்றத்தை இவர்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லை.

இதைப்போலத்தான் உணர்வின் இயக்க நிலைகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்.

ஒரு அழுத்தத்தின் தன்மை எதுவாகின்றதோ அதைப்போல இந்த எலக்ட்ரிக். ஒரு இயந்திரத்தை இயக்குவதற்கும் எலெக்ட்ரானிக் அழுத்தத்தை அதிகமாகும் பொழுது அதனுடைய பாகங்களில் செல்லும்போது
ஏற்றுக்கொள்ளாது என்று ஒதுக்கினால்
இயந்திரத்தையே மாற்றிமைத்துவிடுகிறது.

இந்த எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்று வரும்போது அதனுடைய அழுத்தம் அதிகமானால் உடனே சீர்படுத்தி அதற்குண்டான நிலைகளை இயந்திரங்களை இயக்கி நமக்கு மகிழ்ச்சி ஏற்படச் செய்கின்றது.

இதைப்போல தான் நம் உயிர் எலக்ட்ரிக். நாம் நுகரும் உணர்வின் தன்மை எலக்ட்ரானிக். நம் உணர்வின் தன்மை வரப்போகும்போது
எண்ணிய இயக்கத்திற்கும்
நுகர்ந்த உணர்வுக்கும்
இந்த உணர்வு மோதலாகப் படும்போது
எதன் அழுத்தம் அதிகமாகின்றதோ அதற்குத்தக்க இயக்குகிறது.

அதாவது பையன் மேல் நல்லவனா வைக்கப்படும்போது இதனுடைய அழுத்தம் அதிகமாகும்போது தவறைச் சொன்னால் இது வெறுத்துத் தள்ளுகின்றது.

அதே சமயத்தில் இவன் மேல் வெறுப்பான நிலையை வைக்கப்படும்போது அவன் செய்யும் நல்லதை இங்கே ஏற்றுக்கொள்ளும் தன்மை வருவதில்லை.

இதெல்லாம் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலை இயற்கையின் நியதிப்படி இது இயங்குகின்றது என்பதனை நாம் உணர்ந்து
அருள் உணர்வை நமக்குள் அது அதிகரித்து
அதன்வழி நாம் இயக்கச் சக்தியை மாற்றினோம் என்றால்
தீமையின் உணர்வை மாற்றிக்கொள்ள முடியும்.


ஆக, எத்தகையை தீமைகளையும் மாற்றி, நமக்குள் நல்ல வலிமை மிக்க நிலைகள் பெற்று மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த உடலுக்குப் பின் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று பிறவியில்லா நிலை அடையலாம்.