ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 6, 2015

ஆஜீரணம் எதனால் ஏற்படுகிறது...?

சமையல் சீராகச் செய்யக்கூடியவர்கள் (பெண்கள்) சண்டை போடுபவர்களைப் பார்த்து, அவர்கள் படும் கோபத்தை அதிகமாகச் சுவாசித்தால் என்ன ஆகும்?

அடிக்கடி சண்டை போடுபவரைப் பார்த்து சுவாசிக்கும் அத்தகைய உணர்வுகள், உணர்ச்சிகள் மாறுபட்டு சலிப்படையும்போது உணவில் உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்கள்.

அதே சமயத்தில் கோபத்தின் உணர்ச்சி அதிகமானால் காரத்தை அதிகமாகச் சேர்த்துவிடுவார்கள்.

ஆகவே, சமபடுத்தி இந்தக் குழம்பைச் சீராக்குவதற்குத் தெரியாதபடி இந்த உணர்வுகள் அதற்குத்தக்கதான் செயல்படும். அப்பொழுது இங்கே சுவை கெடுகின்றது.
நாம் காசைச் செலவழித்து சுவையாக வைக்கும்
இந்த உணர்வுகள் மாறுபட்டுவிட்டால் வேதனையாகிவிடுகின்றது.

இந்த வேதனைப்படும் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது, அடுத்து சீர்படுத்தி சமையல் செய்யும் தன்மை மறைக்கப்படுகின்றது.

சமையலில் இப்படி வித்தியாசமான நிலை ஆகி, அந்த உணர்ச்சிகள் மாறுபட்டு எதிர்பாராத உணர்ச்சி நமக்குள் ஏற்பட்டு
நம் உணர்ச்சிகள் உமிழ்நீராக மாறி
நம் ஆகாரத்துடன் கலந்து,
நமக்குள் அமிலங்களாக மாறிவிடுகின்றது.

காரணம், வேதனையும் வெறுப்பும் அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது பித்த சுரப்பிகள் அதிகமாகச் சுரக்க நேர்ந்தால், அது அதிகமானபின் அஜீரண சக்தி நமக்குள் அதிகமாகும்.

நம் பித்த சுரப்பிகள் அளவுடன் அது சுரக்கப்படும் நிலையில் நாம் சாப்பிடும் ஆகாரத்தை சீராக ஜீரணிக்கும் சக்தி பெறுகின்றது.

வேதனை, வெறுப்பு இதைப் போன்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது,
கார உணர்ச்சிகள் அடக்க அதை ஜீரணிக்க
பித்த சுரப்பிகள் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கின்றது.

அப்படிச் சுரக்கும்போது, எதையெடுத்தாலும் பதட்டமும் குனிந்து நிமிர்ந்தால் மயக்கமும் இதன் வரிசையில் சிந்திக்கும் தன்மை இழந்து தன்னை அறியாமலேயே கோபக்காரனாகவும் சலிப்புள்ளவனாகவும் வெறுப்புள்ளவனாகவும் இந்த உணர்ச்சிகள் மாறிக்கொண்டே வரும்.

இதுவெல்லாம், சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எத்தனை பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த்த் தியானவழியில் வந்தவர்கள் யாம் உபதேசித்த உணர்வின் தன்மைகளைச் சீராக அதைப் பதிவாக்கிவிட்டால்,
எதனால் நமக்கு அஜீரணம் வருகின்றது?
எதனால் நமக்குக் கோபம் வருகின்றது?
எதனால் நமக்குச் சலிப்பு வருகின்றது?
எதனால் நமக்குச் சஞ்சலம் வருகின்றது?
என்ற நிலையை அறிந்துணர முடியும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலுக்குள் செலுத்தி இந்த மாதிரியான உணர்வுகளின்  இயக்கத்தை அறிந்துணர்ந்து தியானத்தின் வழிகொண்டு அதை மாற்றிக்கொள்ள முடியும்.

அதே சமயத்தில் துருவ நட்த்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்கிக் கொள்ளும்போது சிந்திக்கும் ஆற்றலும் பெருகும்.

ஆக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது வாழ்க்கையில் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற நிலையைத் தெரிந்துகொண்டு நாம் வழியறிந்து செயல்பட இந்தத் தியானம் உதவும்.