ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 13, 2015

எந்த நோயாக இருந்தாலும் அதை நீக்கக் கூடிய சக்தி உங்களுக்குக் கொடுக்கின்றோம்...!

ஒருவருக்குத் தலைவலி இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம்.

தியானம் எடுத்த நண்பர்கள் அவர்கள் தியானத்தின் வலுகொண்டு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சுவாசித்து, கண்ணின் நினைவை அவர் உடல்மேல் செலுத்தி
தலைவலி குறைய வேண்டும்
உடல்வலி குறைய வேண்டும்.
நரம்புப் பிடித்தல் விடவேண்டும்
என்ற வாக்கைச் சொல்லி அந்த உணர்வைப் பாய்ச்சலாம்.

எண்ணத்தால் செவி வழி கேட்டு அந்த உணர்வு கண்ணால் கவர்ந்து மூக்கால் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை செய்யும்பொழுது டாக்டர் மருந்து கொடுத்து நீக்கமுடியாத அந்த நிலைகளை தியான வழி அன்பர்கள் இத்தகைய வாக்கைப் பதிவு செய்து அதை இயக்கச் செய்ய முடியும்.

அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சுவாசித்து உடலில் உள்ள தீமைகளை அகற்றி தீமைகளை நீக்கிய அருள் உணர்வுடன் பழக்கப்பட்டவர்கள் சொல்லால் சொல்லும் போது தீமைகளை நீக்க முடியும்.

அருள் உணர்வைச் சுவாசித்து ஒரு சிறிய குழந்தை கூட ஈஸ்வரா என்று சொல்லி தலைவலி போகவேண்டும் என்று சொன்னால் போய்விடும்.

ஏனெனில் அதனுடைய எண்ணங்கள் அதுவாக இருந்தது. அதன்வழி செலுத்தப்பட்டது இதைப்போன்ற நிலைகளை ஒவ்வொருவரும் பெற முடியும்.

ஆகவே, கடும் நோயாக சர்க்கரைச் சத்து ஒருவருக்கு இருந்தாலும் அவரால் எடுக்க முடியவில்லை என்றால் அந்த நோயை நீக்கும் சக்தி உங்களுக்கு உண்டு.  

தியானவழியில் உள்ள அன்பர்கள் கண்ணின் நினைவை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
அந்த அருள் சக்தியைச் சுவாசித்துத் தமக்குள் பெருக்கி
கவர்ந்த சக்தியை சொல்லால் சொல்லி செவிகளில் ஊட்டி
இந்த உணர்ச்சிகளை உந்தச்செய்து
சர்க்கரைச் சத்து உள்ளவரை நுகரச் செய்ய வேண்டும்.

அப்பொழுது இந்த உணர்வின் தன்மை அவருக்குள் பட்டு இரத்த நாளங்களில் கலந்து எப்படி INJECTION போட்டு துரிதமான நிலைகளில் உடலுக்குள் மருந்தைச் செலுத்துகிறார்களோ அதைப் போன்று இந்த உணர்வுகள் சிக்கலை மாற்றி உடல் வலியையும் குறைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும். அவருக்குள் சர்க்கரைச் சத்தை உருவாக்கும் அணுக்கள் ஒழிந்து உறுப்புகள் சீராக இயங்கவேண்டும் என்று சீர்படுத்தும் உணர்வுகளைச் சொல்லும்போது அவர் தியானிக்கும் இந்த உணர்வுகள் உள் நின்று இயக்கி சர்க்கரைச் சத்து நோயையும் நீக்கமுடியும்.

இப்படிப் பலமுறை இயக்கி பழக்கப்படுத்தி இந்த உணர்வின் செயலாக்கத்தைக் கொண்டுவந்துவிட்டால் உங்கள் உணர்வு மிக மிக சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஒரு கோபமான உணர்வைப் பார்த்தபின் அது நமக்குள் சிந்தனை இழக்கச் செய்யும். வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தபின் நமது உறுப்புகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

அதே போன்று, அருள்ஞானியின் உணர்வை வலிமையாக்கி உங்கள் எண்ணத்தை முழுமையாக்கி உறுப்புகளைச் சீராக இயக்கச் செய்ய முடியும்.

ஆக, உடல் நலக் குறைவானவர்களை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் எங்கள் உடல் நலம் பெறவேண்டும் என அவர்களையும் இதைபோல எண்ணச் சொல்லி செய்யச் சொன்னால் எந்த நோயையும் நீக்கமுடியும்.