ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2015

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற "மகா சித்துகள்...!"

உதாரணமாக ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்றுவோம் என்றால் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறைந்து நல்ல நீராக மாறுகின்றது.

இதைப்போலத்தான் வராகன் (பன்றி) தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வலுப்பெற்று அது, தீமைகளைப் பிளந்துவிட்டு நல்ல உணர்வுகளை அதன் வாழ்க்கையில் நுகர்ந்து அந்த உணர்வுகள் அது உடலிலே பெருகுகின்றது.

தீமையைப் பிளந்திடும் உணர்வு உயிருடன் வளர்ச்சி பெற்ற அந்த உணர்வுகள்தான், மனிதனாக உருவாக்கும் அந்த அணுக்களாக உருப்பெற்று மனித ரூபத்தைக் கொடுக்கின்றது.

தாவர இனங்களில் ஒன்றுடன் ஒன்று இணைந்து எந்தெந்த உணர்வுகளின் தன்மை இணைகின்றதோ அதற்குத் தக்க தாவர இனங்கள் அது ரூபங்களை மாற்றி, மாற்றி வருகின்றது.

இதைப் போன்றுதான் எல்லா சரீரங்களிலேயும் தீமை, நன்மை, என்ற நிலைகளை உணர்ந்து உணர்ந்து, இந்த உணர்வின் அறிவு வளர்ச்சி அடைந்து, மனிதனாக ரூபத்தைப்பெற்ற பின், மனிதன் உணவாக உட்கொள்ளும் அந்த உணவுக்குள் மறைந்த நஞ்சினை, இந்த மனிதனின் உடல் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு, நஞ்சினை அகற்றும் அந்த ஆறாவது அறிவாக உருப்பெறுகின்றது.

ஆகவே, இதுதான் முருகு, மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன். ஆறாவது அறிவை முருகா என்றும், எதனையுமே தீமைகளை அகற்றி விட்டு, நஞ்சினை அகற்றி விட்டு, மகிழ்ச்சி பெறும் செயல்களை உருவாக்கும் திறன் பெற்றது கார்த்திகேயா.

ஆக, நன்மை, தீமை என்ற நிலைகள் அறிந்து, தீமைகளை அகற்றி விட்டு, நன்மையை அதாவது தனக்குள் அறிவின் ஒளியாக மாற்றிடும் திறமை பெற்றவன் மனிதன்.

அந்தத் திறமை பெற்ற மனிதன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தனது வாழ்க்கையில், தனது உடலில், நஞ்சினை அகற்றிடும் சக்தி பெற்றவன்தான் அகஸ்தியன்.

அவன் அகஸ்தியனாக தன் தாய் தந்தை கருவில் வளரப்படும்போது, தாய் தந்தையர்கள் நஞ்சு கொண்ட மிருகங்களிருந்து காத்துக் கொள்ளும் உணர்வாக அவர்கள் நுகர்ந்து, நஞ்சு கொண்ட மிருகங்களுக்கு எதிர்மறையான தாவர இனங்களை
பச்சிலைகளையும் மூலிகைகளையும் எடுத்து
அரைத்து] தன் உடல்களில் பூசிக்கொண்டார்கள்.

தன் உடலின் வெப்பத்தால் இந்த உடலிலிருந்து வாசனைகள் வெளிப்படுவதை மற்ற மிருகங்கள் தன் உணவாகத் தேடி வரப்படும்போது, இதற்கு எதிர்மறையான வாசனையை நுகர்ந்தறிந்த பின் அருகில் வராதபடி வேறு திசையில் நகர்ந்து செல்கிறது.

அவ்வாறு காட்டுவாசிகளாக இருந்த அவர்களின் வாழ்க்கையில், தனது அறிவின் ஞானத்தால் காட்டு மிருகங்களிடமிருந்து தான் தப்பித்துக் கொள்ள அவர்கள் உடல்களில் பூசிக்கொண்ட உணர்வுகள்.

ஆனால், அதே சமயம் மற்ற மிருகங்கள் இதை நுகர்ந்து, இவர்கள் இருக்கும் பக்கம் வராதபடி விலகிச்சென்றாலும், இவர் உடலில் பூசிய உணர்வுகளை இவர் நுகர்ந்தறிந்து அவர்கள் உடலுக்குள் விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் அது அதிகரிக்கின்றது.

இருப்பினும், அவர்கள் கணவனும் மனைவியும் பல கொடிய மிருகங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலையாக விஷ ஜந்துக்கள், கொசுக்கள். பல விஷ வண்டுகள் போன்ற பல நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்காக
பூசிய முலாம்களின் வாசனையை
அவர்களும் நுகர நேருகின்றது.

அவர்கள் உடலுக்குள் பல தீமை கொண்ட அணுக்களும் உண்டு. ஆக இதை நுகரப்படும்போது இவருக்குள் தீமை கொண்ட உணர்வுகளும் அது செயல் இழந்து அந்த நிலையும் மாறுகின்றது,

இருப்பினும் அவர்கள் கருவுற்றிருக்கப்படும்போது இந்தக் கருவில் வளரும் சிசுவிற்கு, நஞ்சினை வெல்லும் இந்த உணர்வுகள் அது சிறுகச் சிறுக இணைகின்றது.

அதே சமயத்தில் அவர்கள் விண்ணை நோக்கிப் பார்க்கப்படும்போது, அந்த உணர்வின் சத்தைக் கருவுற்றிருக்கும் அந்தத் தாய் நுகர்ந்து, விஷத்தன்மையை ஒடுக்கிடும் ஆற்றல் கொண்ட இந்த அணுக்களின் வளர்ச்சி இந்தக் கருவிலே விளைகின்றது.

அப்பொழுது அந்தக் கருவிலே விளையும் அந்த சிசுவிற்கு இவ்வளவு வீரியங்களும் சந்தர்ப்பத்தில் உருவாகின்றது,

பின் குழந்தையாகப் பிறக்கின்றது. இவ்வாறு உருப்பெற்ற மனிதன்தான் அகஸ்தியன். கருவில், சந்தர்ப்பத்தால் இப்படித் தாய் தந்தையர் விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றல்களைப் பெற்று அதன்வழி அகஸ்தியன் பிறந்தான்.

ஆக அந்தக் குழந்தை பிறந்தபின் (அகஸ்தியன்) விஷம் கொண்ட மற்ற உயிரினங்களோ, வண்டுகளோ, இவனருகிலே வந்தால் இவன் உடலில் வரும் உணர்வினை நுகர்ந்தால் அது மடிந்து விடுகின்றது.

அந்தக் குழந்தை தரையில் மல்லாந்து படுத்திருக்கும் போது வானை நோக்கிப் பார்க்கின்றான்.

வானைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, வானில் உருவாகும் நஞ்சினைப் பார்க்கின்றான். அந்த நஞ்சினைப் (அல்ட்ரா வயலெட்) பார்க்கும் திறன் அவனுக்குள் வருகின்றது.

சூரியனிலிருந்து வரும் அந்த அல்ட்ரா வயலெட் என்ற நஞ்சை அதனுடய இயக்கத்தின் தொடரில் காணுகின்றான்.

சூரியன் பிரிக்கும் உணர்வும் இந்த நஞ்சுகள் பரவி வரப்படும்போதும், நட்சத்திரத்திலிருந்து பிற மண்டலங்களிலிருந்து வரும்  இந்த நஞ்சினை அணுக்களாக சூரியனின் காந்த சக்தி பரவி அது பிரபஞ்சத்தில் பரவுவதையும் பார்க்கின்றான்.

அவன் அறியாதபடி இளம் வயதில் அகஸ்தியன் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் பார்க்கின்றான் ஆனால் சொல்லால் சொல்ல முடியவில்லை, ஆனால் நுகர்ந்தறிகின்றான், அறிவின் தன்மை உணருகின்றான்.

அகஸ்தியன் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் வெளிப்படுத்திய பேருண்மைகளை எம்மை குருநாதர் நுகரும்படி செய்தார். அந்த உணர்வுகள் அனைத்தும்
இந்தக் காற்று மண்டலத்தில் உள்ளது
நீங்கள் எல்லோருமே அதை நுகரமுடியும்.
அகஸ்தியன் கண்ட அண்டத்தின் அதிசயங்களை
நீங்கள் காண முடியும் உணர முடியும்.

அதைச் சுவாசிக்கும்போது அகஸ்தியன் நஞ்சை நீக்கிய ஆற்றல்மிக்க சக்திகள் உங்களுக்குள் பெருகுவதையும் நிச்சயம் உணர முடியும்.