ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 16, 2015

அருள் சக்திகளை அதீதமாகப் பெறும் ஒரே வழி - ஞானகுரு

ஒரு நூலை வைத்து கனமான பொருளைத் தூக்க முடியுமோ? அப்பொழுது பல நூல்களை ஒன்றாகச் சேர்த்து கனமான பொருளைத் தூக்கலாம் அல்லவா!

உதாரணமாக, உங்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களை உங்களால் தாங்க முடியவில்லை. அதிலிருந்து நீங்கள் மீள முடியவில்லை.

அப்பொழுது நான்கு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒன்றாகச் சேர்த்து கூட்டாக இந்த தியானத்தை எடுக்கவேண்டும்.

மகரிஷிகளின் அருள்சக்தி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் படரவேண்டும். குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த
தீய வினைகள், சாப வினைகள்,
பாவ வினைகள், பூர்வ ஜென்ம வினைகள்
அனைத்தும் நீங்க வேண்டும் என்று
எல்லோரும் சேர்ந்து தியானிக்கவேண்டும்.

அப்படி நுகரப்படும்போது உங்களுக்கு எளிதில் கிடைக்கின்றது

இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கப்படும்போது உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது. ஆக தியான வழியில் நாம் ஒன்றுப்பட்டு வாழும் தன்மைகள்தான் வரும்.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளில் நம் உடலில் உள்ள அணுக்களில் அது எதிர் நிலையான அணுக்களானால் மேல்வலி வருகின்றது.
எதிர் நிலையான நிலைகள்
புற உணர்வால் நுகரப்பட்டதுதான் இது.

கூட்டுத்தியானத்தில் பிறருடைய வலுவான உணர்வுகள் எடுத்து உங்கள் குடும்பத்தில் சாப அலைகள், தீய அலைகள், பூர்வ ஜென்ம அலைகள் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வுகளைச் சொல்லும்போது வலுக் கொண்டதாக மாறுகின்றது.

ஒருவன் திட்டினான் என்றால் அவனைத் திருப்பி எண்ணும்பொழுது அதே உணர்வுகள் நாம் சிந்தனை செய்யும்பொழுது நாம் கணக்கு எழுத முடியவில்லை, சீராகச் செய்ய முடியவில்லை.

அவர்களை எண்ணும் பொழுது அவரிடம் அந்தக் குறைபாடு. ஆக ஒரு வாகனம் ஓட்டும்பொழுதும் இதே போல் இயக்கும்.

இதே போலத்தான் ஒன்று சேர்த்து வாழ்ந்து நீங்கள் நலமாக  வேண்டும் என்று ஒன்றுபட்டு வாழ்வதற்குதான் கூட்டுத்தியானங்களைச் செய்யச் சொல்வது.

உங்களால் முடியவில்லை எனும்பொழுது கூட நண்பர்களின் உணர்வுகள் வலு சேர்க்கப்படும்பொழுது ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை அதிகமாகச் சேர்த்துச் செய்தால்
அழுக்குத் தண்ணீரின் தரம் குறையும்.
நல்ல தண்ணீரின் அளவு கூடும்.

அதே போல சங்கடம் என்ற நிலைகளில் இருக்கும் பொழுது தியானத்தால் இந்த வலுச் சேர்க்கப்படும் பொழுது உங்களுக்குள் வலிமை பெறுகின்றது.

ந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் பிற மண்டலங்களிலிருந்து சக்திகளை எடுக்கவில்லை என்றால் இந்தப் பிரபஞ்சம் வாழமுடியாது. தன் உணர்வுகளை எடுத்து வடிகட்டி நம் பிரபஞ்சம் வாழுகின்றது.

அதே போன்று இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய நிலைகளை எடுத்துத்தான் மற்ற பிரபஞ்சங்கள் வாழுகின்றது. இதே போல மனிதனுக்கு மனிதன் தனிப்பட்ட முறையில் எவரும் வாழ்ந்ததில்லை.

தீமை என்ற உணர்வுகளை எடுக்கும்பொழுது தீமை என்ற உணர்ச்சிகளை நமக்கு ஊட்டுகின்றது.

அதே சமயத்தில் தீமையிலிருந்து விடுபட வேண்டுமென்று ஒன்று சேர்த்த வலிமையின் தன்மை பெறப்படும் பொழுது தீமையிலிருந்து விடுபடும் உணர்வினை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அதற்காகத்தான் இந்தக் கூட்டுத் தியானங்களை வைப்பது.

கூட்டுத் தியானங்கள் செய்வதன் மூலம் ஒவ்வொருவர் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி ஏகோபித்த நிலையில் எல்லோருக்கும் அதீதமாகக் கிடைக்க ஏதுவாகின்றது.