நம் உடலுக்குள் பித்த சுரப்பிகள் அதிகமாகச் சுரக்க நேர்ந்தால்
இது
நாளடைவில் உடல் முழுவதும் பரவும்போது
உடல்
முழுவதும் தடிப்புகள் ஏற்படுத்தலாம்.
அதே
சமயத்தில், பித்த சுரப்பிகள்
அதிகமாக வந்தபின் ஒரு வேலையை கடினமாகச் செய்தால் அதன் அழுத்தங்கள் போன்ற பித்தத்தின்
நிலை கொண்டு அது ஜீரணிக்கும் தன்மை அதிகமாக வந்துவிட்டால் நமது செயல்களை மாற்றி அமைக்கும்.
இதைப்போன்ற
நிலை இருந்தாலும் அவ்வப்பொழுது அந்த துருவ நட்சத்திரத்தின்
பேரருளைப் பெறவேண்டும் என்று சுவாசித்து நம் இரத்தநாளங்களில் அதிகமாகக்
கலக்கச் செய்ய வேண்டும்.
நம் இரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும்
மனதை வலிமைப்படுத்தவும்
இந்த
தியானத்தில் வந்துள்ளோர்கள் இதைப் பயன்படுத்த வேண்டும்
ஒரு
கோபக்காரர் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தால் எப்படி அந்த உணர்ச்சிகள் தூண்டி கோபம்
வருகின்றது? அந்த
நேரத்தில் எழுதினால் நாம் சரியான நிலையில் எழுத முடியாது.
ஒரு
கணக்கைப் பார்த்தாலும் சரியானபடி அதைப் பார்க்க முடியாது. இதைப்போல யாரிடம் பேசினாலும்
சரியான பதிலை நாம் சொல்ல முடியாது.
ஆக,
ஒரு சமயம்
இப்படிப் பதிவாகும் இந்தக் கோபம் நமது வாழ்நாளில் சோர்வடையும் பொழுதெல்லாம்
நமக்கு
அந்தக் கோபத்தை ஊட்ட
காரமான
அதன் உணர்வுகள் சேர்க்கச் சேர்க்க,
நமது
எண்ணங்கள் பலவீனமடைகின்றது.
எப்பொழுது
உங்கள் வாழ்க்கையில் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ குரோதமோ அல்லது தொழிலின் நிமித்தம்
பலவீனமோ
இதைப்போன்ற நிலைகள் ஏற்படும் பொழுதெல்லாம் நீங்கள் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைச்
சேர்த்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆக,
உங்கள் ஆன்மாவை வலிமைப்படுத்தி வலிமையின் உணர்ச்சியைச் சேர்த்து அடுத்த காரியம் எப்படிச் செய்ய வேண்டும்
என்றும் தொடர்ந்து வழி நடத்தினால்
ஜோசியக்காரரைத்
தேட வேண்டியதில்லை.
ஜாதகத்தைப்
பார்க்க வேண்டியதில்லை.
நாடி
ஜோசியம் பார்க்க வேண்டியதில்லை.
துருவ நட்சத்திரத்தின் உணர்வு உங்களுக்குள் துடிப்பை சீராக இயக்கி
அருளுணர்வைப்
பெருக்கும்.
உயர்ந்த
ஞானமும் கிடைக்கும்.
இம்முறைப்படுத்தி
நீங்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டால் உங்கள் எண்ணம் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவி செய்யும்.
சந்தர்ப்பத்தால்
நுகர்ந்த உணர்வு இப்போது உங்களை எப்படி பலவீனப்படுத்துகின்றதோ, இதைப்போல் அருள்ஞானத்தைப்
பதிவாக்கி பலவீனமான நேரங்களில் அந்த அருளுணர்வு பெறவேண்டும் என்று மீண்டும் நினைவில் கொண்டு அதை மாற்றி
அமைக்கலாம்.
சந்தர்ப்பத்தால்
நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடலில் அதிகமாகச் சேர்க்கப்படும்போது அந்த வலிமையின் இயக்கமாகவே
நாம் மாறிவிடுகின்றோம். நமக்குள் நல்ல அணுக்களின் தன்மை செயலற்றதாக மாறிவிடுகிறது.
காரணம்,
நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு கார உணர்ச்சியின் தன்மைகள் அதிகமாகச் சேர்க்கப்படும்போது
அது மற்றதை சுவையற்றதாக மாற்றுகின்றது.
ஆகவே
கார உணர்ச்சி அதிகமாகும்போது அந்த அணுக்களுக்குள் பதட்டமும் ஒரு நடுக்கமும் உருவாகிவிடும்.
அந்த நடுக்க உணர்ச்சி நம் உடலிலும் உடல் முழுவதற்கும் பரவச் செய்கின்றது. அப்போது நாம்
சிந்திக்கும் ஆற்றலை இழக்கின்றோம்.
எனவே,
இத்தகைய தீமைகளைத் தடுப்பதற்கு அந்த மகரிஷிகளின்
அருள் சக்திகளை
உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.
தீமைகள்
வரும்போது,
அடுத்தகணமே
அந்த துருவ நட்சத்திரத்தை எடுத்தால்,
உங்கள்
எண்ணத்தால் உங்களைப் பாதுகாத்து கொள்ள முடியும்.
உங்களால் முடியும், அது முடியவேண்டும்
என்பதற்குத்தான்
இந்தத் தியானத்தின் மூலம்
வலிமைமிக்க சக்திகளை உங்களுக்குள் பாய்ச்சுவது.