ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2015

“சாமி நன்றாகச் சொன்னார்” என்று சொல்வதில் பலன் இல்லை, விண்ணின் ஆற்றலை நீங்கள் எடுக்க வேண்டும்

நாம் எண்ணியதை நமது உயிர் உருவாக்குகின்றது. உணர்வின்  இயக்கமாக அது நம்மை இயக்குகிறது. அதன் வழியே நாம் வாழ்கின்றோம். ஆக அவனின்றி (உயிர்) ணுவும் அசையாது.

நாம் நுகர்ந்த உணர்வை உணர்த்துகின்றது. நம் உடலாக மாற்றுகின்றது. மீண்டும் நினைக்கும் போது அவ்வழியே நம்மை இயக்குகின்றது.

அடிக்கடி சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றேன்.

இருந்தாலும், உபதேசம் கேட்கிற வரையிலும் அல்லது உபதேசங்களைப் படிக்கிற வரையிலும் “சாமி நன்றாகச் சொன்னார்” என்று தான் சொல்வோம்.

ஆனால், இதை விட்டுப் போனவுடன் என்ன நடக்கின்றது?

கடலிலே தண்ணீரில் ஒரு கல்லைப் போட்டவுடன்
அலைகளாகப் போகின்றது. மீண்டும் மூடிவிடுகின்றது.

இதைப் போன்றுதான் நமக்குள் எத்தகையை உணர்வைப் போட்டாலும் நமக்குள் இருக்கும் தீமையான நிலைகள் மூடி மறைத்து விடுகின்றது.
மீண்டும் நினைவாற்றல் வருவதில்லை.
ஏனென்றால், நாம் இதிலே சிக்கியுள்ளோம்.

இதிலிருந்து மீள்வதற்கு வழி என்ன என்றே தெரியாது தவித்துக் கொண்டயுள்ளோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் விண்ணுலக ஆற்றலை நீங்கள் அறிந்து
தீமைகளை அகற்றும் வல்லமை பெறும் சந்தர்ப்பத்தைத்தான்
இப்பொழுது தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றோம்.

மகரிஷிகள் விளையை வைத்த அருள் உணர்வை உங்களுக்குள் சேர்த்து இதனை நீங்கள் உங்கள் எண்ணத்தால் உருவாக்குதல் வேண்டும்.

குருநாதர் எமக்கு உபதேசிக்கும் போது
      என் நினைவின் ஆற்றல் அவர்பால் சென்று
அதை நான் எப்படி உற்று நோக்கி
எனக்குள் ஆழமாகப் பதிவு செய்தேனோ
அதே வழியில் தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.

யாரெல்லாம் அதே வழியில் அதே உணர்வு கொண்டு யாம் உபதேசிப்பதைப் பதிவாக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ
எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
அதன் வழி கொண்டு தீமைகளை நீக்கிடும்
அந்த விண்ணின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் பெறமுடியும்.

உங்களால் முடியும், உங்களை நீங்கள் நம்புங்கள். 

December 30, 2015

தவறு செய்ய வைப்பது நம் உயிரா? நாம் நுகர்ந்த உணர்வா? நம் உடலா?

ஒரு செடியின் சத்தை (மணம்) வெளிப்படுத்தினால் சூரியன் கவர்ந்து இந்த பூமியில் அலைகளாகப் பரவச் செய்கின்றது.

அதே செடியின் சத்தை நாம் கண்கொண்டு பார்த்து அது தெரிய வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டு அது என்ன?

அது தெரியவில்லை என்றாலும், நுகர்ந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.
இதனுடைய குணம் என்ன?
இதனுடைய மணம் என்ன?
இது என்ன செய்யும்?
நம்மை வேதனைப்படுத்துமா?
நமக்கு உடலுக்கு நல்லதாகுமா?
என்ற நிலையைச் சிந்திக்கின்றோம்.

ஆனால் அந்தச் செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

அந்தச் செடியை நாம் பாரத்து அந்த வாசனையை நுகர வேண்டும் என்றால் அதனின்று வரும் அந்த உணர்வின் சத்தை சூரியன் கவர்ந்து வைத்திருப்பதனால் நமது கண்ணின் கருவிழி ருக்மணி அந்தச் செடியை நமக்குள் பதிவாக்குகின்றது.

ன்றாகக் கவனமாகப் பதிவு செய்துகொள்ளுங்கள்:-
நாம் இயங்குகிறோமா?
நம்மை இயக்குகின்றதா?

நாம் ஒன்றைத் தவறு செய்கின்றோமா?
அல்லது நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா?

தவறு செய்ய வைப்பது
நமது உயிரா?
நாம் நுகர்ந்த உணர்வா?
நம் உடலா?
என்பதனை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த இயற்கையின் நியதிகள் அது.

உதாரணமாக, ஒரு கசப்பான நிலைகள் வேப்ப மரத்திலிருந்து வருகிறது என்று வைத்து கொள்வோம்.

நம் உயிரிலே பட்டு அந்த உணர்வின் மணங்கள் கசப்பின் உணர்ச்சிகள் நமக்கு வருகின்றது. “ஆண்டாள்” (இது காரணப் பெயர்).
உணர்ச்சிகள் வந்தவுடன் அந்த உணரச்சிகள் நம்மைத் தூண்டும்.
“ஓ.., ய்”ன்ற சப்தம் வருகிறது

அப்பொழுது இயக்குவது யார்?
அந்தக் கசப்பான உணர்வு இயக்குகின்றது.
அந்த உணர்வை இயக்கிக் காட்டுவது யார்?
உயிர்.
அந்த உணர்ச்சிகள் நம் உடலுக்குள் சென்றவுடன்
அது நம்மை இயக்குகிறது, ஆண்டாள்.

ஆக இதைப்போல இந்த உணர்ச்சிகள் அந்தச் செடியின் சத்தை நாம் கூர்ந்து கண் கொண்டு பார்த்தால் செடியைப் பதிவாக்குகின்றது கண்ணின் கருவிழி.

செடியிலிருந்து வரக்கூடிய உணர்வை ன்ன? என்று தெரிந்து கொள்ளும்போது அது கவர்கின்றது. தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். அந்த ஆசையால் அதைக் கவரும் சக்தி வருகின்றது.

ப்பொழுது அந்த உணர்வு நம் உயிரிலே படுகின்றது. அது என்ன செடி? அது நல்லது செய்யுமா..,? கெட்டது செய்யுமா..,? நாம் ஆராய்ச்சி செய்கின்றோம்.

(கசப்பால்) வாந்தி வரும் என்று சொன்னால் நீக்கி விடுகிறோம்.

ந்த வேப்ப இலையை முழுவதும் போட்டு இரண்டு மஞ்சளைப் போட்டு அம்மை வார்த்தவர்களுக்குப் போடலாம். அம்மை நோய் விஷத்தின் தாகுதலால் வருவது.

அந்த வேப்பிலையில் மஞசளைக் கலந்து தெளித்தால் உடலில் அம்மை என்ற விஷக் கிருமிகளை மாற்றுகின்றது. அதே வேப்பிலையை நாம் உணவாக உட்கொள்ளும்போது உமட்டல் வந்து  வாந்தியாக வெளியே தள்ளுகிறது.

இருந்தாலும் அந்த வேப்பிலையை அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணம் வருகின்றது. அதை அளவுடன் சாப்பிட்டால் அந்த வேப்பிலை நமக்குள் இருக்கும் பல கசப்பின் உணர்வுகளை  நீக்குகின்றது.

அதனதன் சந்தர்ப்த்திற்கு அது வேலை செய்கின்றது. இது இயற்கையின் நியதி.

ருவருக்குக் கசப்பின் தன்மையத் தாங்கும் சக்தி உள்ளது. அந்தக் கசப்பை தாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு
வேப்பிலையைப் பாரத்தவுடன் ஜம்.., என்று வரும்.

கசப்பைப் பார்த்தவுடன் வாந்தி வருபவர்களுக்கு
வேப்பிலையைப் பாரத்தவுடன் ..ய் என்று வாந்தி எடுப்பார்கள். ஏனென்றால் அவர் உடலில் உள்ள உணர்வுகள் இதை ஏற்க மறுக்கின்றது.

ஆனால், ஏற்றுக்கொண்ட உணர்வுகள் வந்தவர்களுக்குக் கசப்பைத் தாங்கும் சக்தி வருகின்றது.

உதாரணமாக, தெருவிலே போகும் சாக்கடையைச் சிலர் சுத்தம் செய்கிறார்கள். எல்லா அசுத்தங்களும் அசூசையான பொருள்களும் அதிலே போகின்றது.

தை நாம் பாரத்தவுடனே என்ன ஆகின்றது? நம்முடைய எண்ணம்  “அய்ய்யோ....,” என்ற நிலையில் முகத்தைச் சுழிக்கின்றோம்.

அந்த நாற்றத்தின் உணர்வுகளை முதலில் பதிவு செய்கிறோம்.
நாற்றம் ஆகும் என்ற நிலையைப் பதிவாக்குகிறோம். 
அப்பொழுது அதைக் கூர்ந்து கவனிக்கிறோம்.

அதை நுகர்ந்தவுடனே நமக்குத் தன்னாலேயே வாந்தி வருகிறது. வாந்தி வருகிறதா இல்லையா?

அப்பொழுது அதை யார் இந்த மாதிரி அசுத்தப்படுத்தியது என்று சண்டைக்கும் போகின்றோம். ப்படி நாற்றமாக்கும் அளவிற்கு ஆக்கிவிட்டார்கள். மூடி வைக்கக் கூடாதா? என்று சண்டைக்குப் போகிறோம்.

ஆனால், அதைச் சுத்தப்படுத்துகிறவர்கள்
அதை எண்ணவில்லை.

சாதாரணமா வேலைக்குப் கூலிக்குப் போனால் பத்து ரூபாய் கிடைக்கும். அதாவது ஒரு மணி நேரத்திற்குப் பத்து ரூபாய் என்றால் நாற்றமான இதைச் சுத்தப்படுத்தினால் கூலி ஒரு மணி நேரத்திற்கு நூறு ரூபாய் கிடைக்கின்றது.
ஆக, இந்த ரூபாய் மேல் ஞாபகம் வருகின்றது.
இந்த நாற்றத்தின் தன்மை அவர்களிடம் வருகின்றதோ? இல்லை.

இதனுடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பதன் நிலையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் இப்படி வருமா..,? என்று எண்ணிச் சொன்னால் அது வரும். அந்த உணர்வைப் பதிவாக்குகிறோம் கருவிழி ருக்மணி நினைவைப் பதிவாக்குகிறது.
மீண்டும் நினைவுக்கு வருகிறது.
அதிலிருக்கும் காற்றை இழுக்கிறது.
எல்லாவற்றையும் நமக்குள் சேர்க்கிறது.

இப்படித்தான் நாம் சுவாசிக்கின்றோம். சுவாசிக்கும் உணர்வுதான் நம்மை இயக்குகின்றது. இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்தல் மிகவும் அவசியம்.

December 29, 2015

தற்கொலை செய்து கொண்ட ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டிய முறை

குடும்பத்தில் எதிர்பாராது யாராவது தற்கொலை செய்து கொண்டால் அந்தக் குடும்பத்தில் பற்றுள்ளோர் உணர்வுகளில் இனம் புரியாதபடி வாழையடி வாழையாக அந்தக் குடும்பத்தில் தற்கொலை செய்யும் நிலையே வருகின்றது.

சிறிது குறைப்பட்டால் அதே உணர்வுகள் வந்துவிடுகின்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தால் அதைத் தடுக்க வேண்டுமா வேண்டாமா? அப்பொழுது அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மனிதன் வளர்ந்தபின் மனிதனுக்குப் பின் இதையெல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றால் அதை அடக்கி
நாம் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற்று
தீமைகளைத் துடைத்து உணர்வை வலுவாக்கி
வலுவின் நிலைகள் கொண்டு சிந்தனையுடன் வாழச் செய்யும்

தற்கொலையாலோ அல்லது நோயினாலோ இறந்தார் என்றால் அந்த ஆன்மாக்களை துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும். ஏனென்றால், அவர்கள் விஷத்தை முறித்தவர்கள்.

ஆகவே அங்கே மணங்கள் பட்டவுடன் இந்தச் சூட்சம சரீரத்திலிருந்து விஷத்தன்மைகள் பிரிந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றுவிடுகின்றது இந்த உயிராத்மாக்கள். அந்த விஷமான உணர்வின் தன்மைகள் கருகிவிடுகின்றது.

இப்படித் தற்கொலை செய்து இறந்து கொண்ட உணர்வு கொண்டவர்களை நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துவிட்டால் அதனின் உணர்வுகள் இருளை நீக்கி உணர்வுகள் சென்றுவிடுகின்றது.

நாங்கள்ம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பெறவேண்டும் என்ற எண்ணினால்
அவர் தற்கொலை செய்து கொண்ட உணர்வுகள்
நம் உடலுக்குள் வளராதபடி அதைத் தடுத்துக் கொள்ள முடியும்.
பின் அதன் செயல் இழந்துவிடும்.

அந்த ஆன்மா ஒளியின் உடல் பெறும்போது இந்த நிலைகள் அந்த உணர்வுகள் அங்கே மாற்றப்படுகின்றது. அதே உணர்வை நாம் எடுத்து நமக்குள் இருக்கும் நிலைகளை மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

தற்கொலை செய்து கொண்ட அந்த ஆன்மாவும்
பிறவியில்லா நிலை அடைகின்றது.
இந்தத் தீமையை அழித்திடும் சக்தி
அவரால் நாம் பெற முடிகின்றது.

தற்கொலையால் இறந்து கொண்டபின் அவர் மேல் பாசம் அதிகமானால் அந்த உணர்வு நமக்குள் வந்து நம்மையும் தற்கொலை செய்யும் உணர்வுக்கே அழைத்துச் செல்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபடவேண்டும்.

இந்த வாழ்க்கையில் சிறிது காலமே வாழ்கின்றோம். வாழும் காலத்தில் நமக்குள் அறியாது சேர்ந்த தீமைகளைத் துடைக்க இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் எடுத்து அவ்வப்பொழுது மனதைத் தூய்மையாக்கி வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் பௌர்ணமி தியானத்தை வழிப்படுத்தி வைத்துள்ளோம்.

பௌர்ணமி அன்று மூதாதையர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யுங்கள். அவர்களை அங்கே செலுத்திய பின் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும், சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் அருளைப் பெருக்கி உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை நீக்க முடியும்.
சந்தர்ப்பத்தில் எத்தகைய தீமைகளோ தொல்லைகளோ வந்தாலும்
உடலை விட்டு ஒருவர் நோயால் இறந்தாலும்
எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து
எங்களைக் காப்பதற்காக வாழ்ந்து
எத்தனையோ வேதனைகளை எடுத்து
உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்கள்
அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து பெருவீடு பெரு நிலை அடைந்து
அழியாத ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று
அவர்களை விண் செலுத்த வேண்டும்.
இது நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமையாகும்.