ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2012

ஏவல், செய்வினையை நீக்கியது

கொல்லூரில், கோலமாமகரிஷி எதற்காக அங்கே தவமிருந்தார் என்று அறிவதற்காக, குருநாதர் எம்மை அங்கே போகச் சொன்னார். அந்த சமயத்தில், அங்கு ஒரு அம்மாவிற்கு ஏற்பட்ட நிலையை, அறியும்படி நேர்ந்தது.

அந்த அம்மாவிற்குக் குழந்தை இல்லை. கணவரும் இறந்துவிட்டார். அந்த அம்மா, வங்கியில் வேலை செய்து கொண்டிருக்கின்றது. சொத்து நிறைய இருக்கின்றது. கோடி செல்வம் இருக்கின்றது. அதனால், தங்கையின் கணவர் என்ன செய்கின்றார்?

இந்தச் சொத்தைக் கைப்பற்றுவதற்காக வேண்டி, பில்லி, சூனியம், ஏவலைச் செய்து, இந்த அம்மாவைப் பித்தரைப் போல ஆக்குவதற்கு, செயல்படுகின்றார்,

ஆனால், இந்த அம்மாவும் இதெற்கெல்லாம் தப்பித்து, மற்ற மந்திரவாதிகளிடம் சொல்லி, தப்பித்து வருகின்றது. என்ன இருந்தாலும், அதனுடைய உணர்வுகள் அது, இதற்குப் பணத்தைச் செலவழித்து, மந்திரவாதியிடம் சென்றாலும், அதை மாற்றிக் கொண்டே வருகின்றது. ஆக, கடைசியில் என்ன ஆகின்றது?

அந்த அம்மாவினுடைய சேலைகள், நல்ல சேலைகளை அந்த அம்மா உடுத்திக் கொண்டு வந்தாலும், பபூன் மாதிரி (கோமாளி), சேலை கிழிந்து கொண்டே வருகின்றது. சாப்பாடு ஏதாவது எடுத்து வாயில் கொண்டு சென்றால், நரகலாக மாறுகின்றது. ஆனால், சில நேரங்களில் சாப்பாட்டை வாயில் போட்டால், தலை முடியாக மாறுகின்றது.

கொல்லூரில், யாம் கண்கூடாகப் பார்த்த நிலைகள் இது. ஏனென்றால், அந்த அம்மா அந்தக் கோவிலைச் சுற்றியே வருகின்றது. அப்பொழுது, கொல்லூரில் யாம் இருக்கும் பொழுது, இந்த அதிசயத்தைப் பார்க்கின்றோம்.

அந்த அம்மா கோவிலையே சுற்றிக் கொண்டு, ஏதாவது ஒரு பொருளைக் கொண்டு வருகின்றது. சுற்றி வந்து, அந்தக் கோவிலுக்கு முன்னாடி சாப்பிடுகின்றது. ஆனால், சாப்பிட்டாலும், வாய்க்குள் போகும் பொழுது, தலை முடியாக மாறுகின்றது.

ஆனால், சில நேரத்தில், கோவிலை விட்டு வெளியிலே வந்தால், இங்கே நரகலாக மாறுகின்றது. கோவிலுக்குள் போனால், அதே ஆகாரத்தை வாய்க்குள் போட்டால், தலை முடியாக மாறுகிறது. அதே சமயத்தில், சில நேரங்களில் கோவிலுக்குள் போனால், சேலை கிழிவதில்லை.

கோவிலைவிட்டு வந்தால், தார் தாராக, தார் தாராக சேலை கிழிந்து விடுகின்றது. அது உடல் முழுவதும் தெரிய ஆரம்பித்தால், எப்படி இருக்கும். அதனால், அசிங்கப்பட்டு வெளியில் அந்த அம்மா வருவதில்லை.

இருந்தாலும், அதனுடைய ஜெப காலங்களில் இருக்கப்படும் பொழுது, எப்படியோ, இரண்டு பேர், நான்கு பேர், வசதி இருப்பதனால், சில துணிகளையும் கொண்டு மறைத்து, கிழியும் பொழுது உடனடியாக விரித்து மறைத்துக் கொள்கின்றார்கள்.

இந்த சூழ்நிலையில் யாம் பார்த்தோம். இதனுடைய செயல்களைப் பார்த்து, குருநாதரை வேண்டினோம். இங்கு இவ்வளவு சக்தியிருக்கின்றது. கோலமாமகரிஷி இங்கே இருந்தார். அதே சமயத்தில், அவர் அவ்வளவு ஆற்றலைப் பெற்றார். அதாவது ஆதிசங்கரர், அவர் தவமிருந்த இடமும் அதுதான்.

அதே சமயத்தில், மூகாம்பிகை என்ற நிலையில், இங்கு சக்தி கொண்டு,
எத்தனையோ அபிஷேகங்கள்,
எத்தனையோ நிலைகள் செய்து,
எத்தனையோ மந்திரங்கள் செய்தாலும்,
இங்கே அந்த அம்மா வரப்படும் பொழுது, நீக்க முடியவில்லை.

அப்பொழுதுதான், யாம் அதை எண்ணி, அங்கே கோவிலின் வாசல்படியில் உட்கார்ந்து இருந்தோம். திண்ணையில் அப்பொழுதெல்லாம் கூட்டம் இருக்காது. யாம் போயிருக்கின்ற காலத்தில், கூட்டம் அதிகம் கிடையாது.

அப்படியே திண்ணையில் உட்கார்ந்தே, யாம் அமைதியாக ஜெபத்திலிருந்தோம். பிறகு என்ன செய்தோம்? அந்த அம்மாவைக் கூப்பிட்டோம். அந்த அம்மாவும், நடந்த சம்பவங்களை எல்லாம் சொல்லியது.

அதாவது, கோவிலுக்குள் சென்றால் துணி கிழிவதில்லை. வெளியில் சென்றால், துணி கிழிந்து விடுகின்றது. சாப்பாடு சாப்பிட்டாலும், கோவிலுக்குள் என்றால், தலை முடியாக மாறுகின்றது. வெளியில் சாப்பிட்டால், நரகலாக மாறுகின்றது, “இங்கே பாருங்கள்” என்று காண்பிக்கின்றது.

அப்பொழுது கொஞ்ச நேரம், யாம் பிரார்த்தனை செய்தோம். இது எதனால்? என்று எண்ணி எடுக்கப்படும் பொழுது, மந்திரவாதிகள் அவர்கள் காசை வாங்கிக் கொண்டு, ஏவல் செய்கின்றார்கள் என்று தெரிகின்றது.

உதாரணமாக, சில நேரங்களில் பார்த்தால், உங்கள் வீட்டில் செய்வினை வைத்திருந்தால், “நீங்கள் போய்த் தோண்டிப் பாருங்கள், அங்கே தாயத்து இருக்கும், அது இருக்கின்றது, இது இருக்கின்றது” என்று சொல்லி, இந்த மந்திரவாதிகள் “அதை எடுங்கள்” என்று, சொல்வார்கள்.

மேலும், “உங்கள் உடலில் தாயத்து இருக்கின்றது” என்றும் சொல்வார்கள், உங்கள் வீட்டு பீரோக்குள் கூட, அதைச் செய்து வைத்திருப்பார்கள். “போய்ப் பாருங்கள், உங்கள் பீரோவிற்குள் இருக்கும்” என்று சொல்வார்கள். “ஜன்னலில் இருக்கும்” என்று சொல்வார்கள்.

ஆக இந்த மந்திரவாதிகள், இதே போல ஏவல் பண்ணுவதையே, ஒரு பிழைப்பாக வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

தவிர, ஒரு மனித உடலில் உருவான ஒரு உணர்வின் தன்மை, அசுர உணர்ச்சிகள் செயல்பட்டு, பிறரைத் துன்பப்படுத்தி, தீங்கு விளைவிக்கும் உணர்வு கொண்ட ஒரு மனிதன் இருந்தால், அவன் எந்த தெய்வத்தை வணங்கி வந்தானோ, அதிலே எந்தெந்த மந்திரங்களைச் செய்தானோ, அந்த மந்திரத்தைச் செய்யும் பொழுது, இந்த ஆவியை அந்த மந்திரவாதிகள் கைவல்யப்படுத்திக் கொண்டு, அவன் எடுத்த உணர்வின் தன்மையை, ஒருவருக்குள்ளே பாய்ச்சி, இந்த உணர்வின் தன்மையை, இங்கே பணத்திற்காகச் செய்கின்றனர்.

இதையெல்லாம் யாம் தெரிந்து கொண்டபின், இதற்கு எப்படிச் செய்ய வேண்டும்? என்று, யாம் அங்கே பிரார்த்தனை செய்து, அந்த அம்மாவிடம், விபூதியைக் கொடுத்தோம்.

அந்த அம்மாவிடம், இதை உன் வாயில் போட்டுக்கொள் என்று சொன்னோம். அப்புறம் இந்தக் கோவிலைச் சுற்றி வந்தது. பின், உன் வீடு போகிற வரையிலும், விபூதியை வாயில் போட்டுக் கொள் என்று சொன்னோம்.

தலை முடியிலும், உங்கள் உடலிலும் இந்த விபூதியைப் பூசிக் கொள் என்று சொன்னோம். உங்கள் வீட்டிற்குச் சென்று, நீங்கள் சாப்பிடுங்கள் என்றும் யாம் சொன்னோம்.

வீட்டுக்குச் சென்று சாப்பிட்டவுடனே, நல்லாக வந்தது. அப்படி நன்றாக ஆனபின், அந்த அம்மாவிற்குச் சந்தோஷம் தாளமுடியவில்லை. எம்மிடம் வந்து, அந்த அம்மா சொன்னது.

என்னிடம் சொத்து ஏராளமாக இருக்கின்றது, எனக்குக் குழந்தை இல்லை. ஆனால், எப்படி இருந்தாலும், என் சொத்தெல்லாம் தங்கை வீட்டிற்குத்தான் போகப் போகின்றது.

ஆனால், அதற்கு முன்னாலே அவசரப்பட்டு, எனக்கு ஏவல் பண்ணி, அவர்கள் ஆடம்பரமாக வாழ்வதற்காக ஆசைப்படுகின்றார்கள். நான் எங்கே போவது? என்று அந்த அம்மா சொன்னது.

பின், இந்தத் தீமைகள் அகன்றபின், யாம் அந்த அம்மாவிடம், இந்த நல்ல நிலையே உனக்குத் தொடர வேண்டுமென்றால், யாம் சொல்லும் முறைப்படி, தியானம் செய்ய வேண்டும் என்று சொன்னோம்.

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படரவேண்டும், என் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உயிரான ஈசனை வேண்டி, தியானம் செய் என்று சொன்னோம்.

இப்படி, அருள் உணர்வை,
இந்த இந்த முறைப்படி செய்து,
உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னோம்.
ஆக, இந்த நல்ல வலு உங்களுக்குள் கூடும் என்று யாம் சொன்னோம். சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட முடியும் என்று, உணர்த்தினோம்.

அந்த அம்மா இங்கே, மூன்று, நான்கு மாதம் இருந்தது. அது முழுவதும் சுத்தமானது. பின்பு, நான் ஊருக்குப் போகலாமா? என்று அந்த அம்மா எம்மைக் கேட்டது.

யாரும் உன்னை ஏவல் பண்ண மாட்டார்கள். அப்படி ஏவல் பண்ணினாலும், அவர்களுக்கு, நல்ல விடைகளும் கிடைக்கும். “தான் செய்யும் தவறை உணர்வார்கள்” என்று சொன்னோம்

அவர்களுக்கு அது, திரும்ப வரப்படும் பொழுது,
தன் தவறை உணரத்தான் செய்வார்கள் என்று,
யாம் அந்த அம்மாவைத் தெளிவாக்கினோம்.